)
Major Changes from August 1 2025: நாளை ஆகஸ்ட் 1. ஒவ்வொரு மாதமும் முதல் நாள் சில முக்கிய விதிகளிலும், கட்டணங்களிலும், செயல்முறைகளிலும் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சில மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. ஆகஸ்ட் 1 முதல் அமெரிக்க வரிவிதிப்பு தொடர்பாக மிகப்பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது. இது தவிர, நாளை முதல் பயணம், பண பரிவர்த்தனை, யுபிஐ, சமையலறை என சாமானியர்களின் தினசரி வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல இன்னும் பல மாற்றங்களும் ஏற்படவுள்ளன. ஆகஸ்ட் 1 முதல் அவலுக்கு வரவுள்ள முக்கிய மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அமெரிக்க வரிவிதிப்பு முறையில் மாற்றம்
- ஆகஸ்ட் 1 முதல், இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பை அமல்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
- இந்த வரி விதிப்பு நாளை, அதாவது ஆக்ஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கும். தற்போது, அதன் விளைவு இந்திய சந்தையில் காணப்படாது.
- அமெரிக்க தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை இந்தியா அதிகரித்தால், இந்திய சந்தையிலும் பொருட்களின் விலை உயரும்.
எல்பிஜி சிலிண்டர் விலை
- ஒவ்வொரு மாதமும் நடப்பது போலவே, இந்த முறையும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டரின் விலையை மறுஆய்வு செய்யும்.
- ஜூலை 1 ஆம் தேதி, 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை ரூ.60 குறைக்கப்பட்டது. 14 கிலோ சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
- இந்த முறை வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
UPI விதிகளில் மாற்றம்
- ஆகஸ்ட் 1 முதல், UPI பயன்பாடு தொடர்பான விதிகள் மாறவுள்ளன. சர்வரில் அழுத்தத்தைக் குறைப்பதற்கும் பரிவர்த்தனையை சீராக்கவும் NPCI இந்த மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த மாற்றங்களில், இப்போது நீங்கள் ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே இருப்பைச் சரிபார்க்க முடியும்.
- இது தவிர, மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளின் பட்டியலை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும்.
- பெரிய மாற்றமாக, EMI, SIP அல்லது OTT சந்தா போன்ற தானியங்கி கட்டணங்கள் உச்ச நேரங்கள், அதாவது பீக் ஹவர்ஸ் அல்லாத நேரத்தில் செயல்படுத்தப்படும். தோல்வியுற்ற பரிவர்த்தனைகளின் நிலையை மூன்று முறை மட்டுமே சரிபார்க்க முடியும்.
- பணம் செலுத்தும் போது பெறுநரின் பெயர் எப்போதும் தெரியும், இது தவறான பரிமாற்றத்திற்கான வாய்ப்பைக் குறைக்கும்.
SBI கார்ட் விதிகளில் மாற்றம்
- SBI-யின் கோ-பிராண்ட் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் நபர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது.
- ஆகஸ்ட் 11, 2025 முதல், SBI அதன் சில எலைட் மற்றும் பிரைம் கார்டுகளில் கிடைக்கும் இலவச விமான விபத்து காப்பீட்டுத் திட்டத்தை நிறுத்தும்.
- இதுவரை இந்த கார்டுகளுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை காப்பீடு வழங்கப்பட்டது.
CNG, PNG விலை
- CNG மற்றும் PNG விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி மதிப்பாய்வு செய்கின்றன.
- ஏப்ரல் 2025 முதல் அவற்றின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
- ஆகஸ்ட் 1 ஆம் தேதி அவற்றின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ATF விலை
- ஆகஸ்ட் 1 முதல் ATF விலையிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- விமானங்களில் ATF பயன்படுத்தப்படுகிறது, அதன் விலைகள் அதிகரித்தால் அதன் விளைவு விமான டிக்கெட்டுகளிலும் தெரியும்.
- விலை குறைந்தால், பயணிகள் கட்டணத்தில் நிவாரணம் பெறலாம்.
8வது ஊதியக்குழு
- ஆகஸ்டு மாதத்தில் 8வது ஊதியக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமனம் நிச்சயிக்கப்படும் என கூறப்படுகின்றது.
- குழு அமைக்கப்பட்ட பிறகு ToR பரிந்துரைகளும் இறுதி செய்யப்படலாம்.
- ஆணையம், ஃபிட்மெண்ட் ஃபாக்டர், ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு மற்றும் இன்னும் பல முக்கிய அம்சங்கள் தொடர்பான பரிந்துரைகளை அரசிடம் அளிக்கும்.
- அதன் பிறகு இவற்றுக்கு அரசு ஒப்புதல் கொடுக்கும்.
அடையாள அட்டை சரிபார்ப்பு
- தேர்தல் ஆணையத்தின் ஒரு பெரிய நடவடிக்கையாக, ஆகஸ்ட் 1, 2025 முதல் நாடு முழுவதும் வீடு வீடாக வாக்காளர் அடையாள அட்டை சரிபார்ப்பைத் தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- இந்த செயல்முறையின் நோக்கம் செல்லாத வாக்காளர் அட்டைகளை அகற்றி வாக்காளர் பட்டியலை வெளிப்படையானதாக மாற்றுவதாகும்.
- இந்த மாற்றம் தேர்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ