)
Big Changes from December 1 2025: நவம்பர் மாதம் முடிவடைய உள்ளது. இந்த மாத இறுதியுடன் பல அரசு மற்றும் நிதிப் பணிகளுக்கான காலக்கெடுவும் முடியும். இந்த முக்கியமான பணிகளை இன்னும் செய்து முடிக்காதவர்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் அவற்றை செய்து விடுவது நல்லது.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் பல முக்கிய விதிகள் அமலுக்கு வருகின்றன. அந்த வகையில் டிசம்பர் மாதத்திலும் பல முக்கிய விதிகளில் மாற்றம் ஏற்படும். டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரவுள்ள முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) தேர்வு செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 30 ஆகும். இந்த காலக்கெடு முதலில் செப்டம்பர் 30 ஆக இருந்தது, ஆனால், பின்னர் நீட்டிக்கப்பட்டது. தேசிய ஓய்வூதிய முறையான NPS -இன் கீழ் ஊழியர்களுக்கு UPS விருப்பமாக அளிக்கப்படுகின்றது. அதைத் தேர்ந்தெடுக்கும் வசதி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும். ஒரு ஊழியர் அதைத் தேர்வு செய்ய விரும்பினால், அவர்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பு இனி டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கிடைக்காது.
ஓய்வூதியம் பெறுவோர் ஆயுள் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டிய காலக்கெடு நெருங்கி வருகிறது. ஓய்வுதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆண்டு, ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 30 ஆகும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கத் தவறினால், ஓய்வூதியம் நிறுத்தப்படலாம். டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை (ஜீவன் பிரமான்) வீட்டிலிருந்தே உருவாக்கி சமர்ப்பிக்கலாம்.
அக்டோபர் 2025 இல் TDS கழிக்கப்பட்டிருந்தால், பிரிவுகள் 194-IA, 194-IB, 194M மற்றும் 194S இன் கீழ் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். இதற்கான கடைசி தேதி நவம்பர் 30 ஆகும். பிரிவு 92E இன் கீழ் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய வரி செலுத்துவோர் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் தங்கள் ITR ஐயும் தாக்கல் செய்யலாம். சர்வதேச குழுக்களின் தொகுதி நிறுவனங்களுக்கு படிவம் 3CEAA ஐ சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவும் இதுதான். டிசம்பர் 1 முதல், நீங்கள் இனி இதைச் செய்ய முடியாது.
எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி LPG விலைகளை திருத்துகின்றன. டிசம்பர் 1 ஆம் தேதி எல்பிஜி சிலிண்டர் விலைகளும் புதுப்பிக்கப்படும். நவம்பர் 1, 2025 அன்று, OMC கள் 19 கிலோகிராம் வணிக எரிவாயு சிலிண்டரின் விலையை ₹6.50 வரை குறைத்தன.
LPG போலவே, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் ATF (விமான விசையாழி எரிபொருள்) விலைகளிலும் திருத்தங்களை செய்கின்றன. ATF விலைகள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி திருத்தப்படும். டிசம்பர் 1 ஆம் தேதி ATF விலைகள் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம்.
இந்த மாத தொடக்கத்தில் 8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டு பரிந்துரை விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. டிசம்பர் மாதத்தில் இதில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ToR -இல் கோரப்பட்ட மாற்றங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ