ஏப்ரல் 1 முதல் FB கணக்கு, ஈமெயில் எல்லாம் வருமான வரித்துறை வசம்... ஏமிரா இதி!!

Income Tax Latest Update: வரி செலுத்துவோரே உஷார்!! சமூக ஊடக கணக்குகள், வங்கிக்கணக்குகள், ஈமெயில்... அனைத்தயும் இனி ‘அவர்களும்’ பார்க்கலாம். யார் அந்த அவர்கள் தெரியுமா?

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 5, 2025, 02:23 PM IST
  • வரி ஏய்ப்பை ஆய்வு செய்ய டிஜிட்டல் தடயவியல்
  • வருமான வரித்துறை டிஜிட்டல் தகவல்கள் எப்போது செக் செய்யும்?
  • வரி செலுத்துவோர் என்ன செய்ய வேண்டும்?
ஏப்ரல் 1 முதல் FB கணக்கு, ஈமெயில் எல்லாம் வருமான வரித்துறை வசம்...  ஏமிரா இதி!!

Income Tax Latest Update: வருடா வருடம் வருமான வரி செலுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. கூடிய விரைவில் வருமான வரித் துறை உங்கள் சமூக ஊடகங்க கணக்குகள், மின்னஞ்சல், வங்கிக் கணக்குகள், ஆன்லைன் முதலீடுகள் மற்றும் வர்த்தகக் கணக்குகளை செக் செய்ய சட்டப்பூர்வ உரிமையைப் பெறக்கூடும். 

Add Zee News as a Preferred Source

ஒரு நபர் வரி ஏய்ப்பு செய்துவிட்டதாகவோ அல்லது அவரிடம் அறிவிக்கப்படாத சொத்துக்கள், பணம், தங்கம், நகைகள் அல்லது பிற மதிப்புமிக்க பொருட்கள் இருப்பதாகவோ வரி அதிகாரி சந்தேகித்தால், அந்த நபரது டிஜிட்டல் தகவல்களை அதிகாரிகள் சரிபார்க்கலாம். இது தொடர்பான தகவல்கள் ET இன் அறிக்கையில் தெரிய வந்துள்ளன.

புதிய சட்டத்தின் கீழ் என்ன மாறும்?

வருமான வரித் துறையின் இந்தப் புதிய விதி, முன்மொழியப்பட்ட வருமான வரி மசோதாவின் கீழ் செயல்படுத்தப்படும். டிஜிட்டல் யுகத்தை மனதில் கொண்டு, நிதி மோசடி, அறிவிக்கப்படாத சொத்துக்கள் மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றைத் தடுக்க இந்த மாற்றம் செய்யப்படுகிறது. பலரின் செலவும், அவர்களின் கணக்குகளில் இருந்து எடுக்கப்பட்ட பணமும் எந்த வகையிலும் பொருந்தவில்லை என்று வருமான வரித்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது சிலரின் வாழ்க்கை முறை மற்றும் செலவுகள் மிக அதிகமாக இருந்தாலும், அவர்களின் கணக்கிலிருந்து மிகக் குறைந்த பணமே எடுக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

Income Tax Department: வருமான வரித்துறை டிஜிட்டல் தகவல்கள் எப்போது செக் செய்யும்?

- வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 132 இன் கீழ், ஒருவர் தனது வருமானம், சொத்து அல்லது நிதி பதிவுகளை மறைத்து வைத்திருப்பதாக உறுதியான தகவல் கிடைத்தால், அதிகாரிகள் அவரை விசாரிக்கலாம். 
- முன்னதாக, அதிகாரிகள் வீடுகள், பெட்டகங்கள் மற்றும் லாக்கர்களை மட்டுமே சோதனை செய்யும் அதிகாரத்தைக் கொண்டிருந்தனர். 
- ஆனால் ஏப்ரல் 1, 2026 முதல், இந்த உரிமை டிஜிட்டல் உலகிற்கும் நீட்டிக்கப்படும் என கூறப்படுகின்றது. 
- வரி ஏய்ப்பு தொடர்பான தகவல்கள் கணினி அமைப்புகள் மற்றும் ஆன்லைன் கணக்குகளில் மறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சந்தேகித்தால், இப்போது அவற்றை அணுகவும் அவர்களுக்கு உரிமை உண்டு.

Digital Forensic: வரி ஏய்ப்பை ஆய்வு செய்ய டிஜிட்டல் தடயவியல்

உங்கள் வருமானம் அல்லது சொத்து பற்றிய முழுமையான தகவல்களை நீங்கள் வழங்கவில்லை என்று வருமான வரி அதிகாரிகள் சந்தேகித்தால், அவர்கள் உங்கள் மின்னஞ்சல், வங்கிக் கணக்கு, வர்த்தக தளம் மற்றும் சமூக ஊடக செயல்பாடுகளை ஆய்வு செய்யலாம். மாறிவரும் காலங்களில், நிதி பரிவர்த்தனைகள் டிஜிட்டல் மயமாகி வருவதால், வரி ஆய்வுகளும், விசாரணையும் நவீனமாகி வருகின்றன. 

புதிய சட்டத்தின் மூலம், டிஜிட்டல் தடயவியல் வரி விசாரணைகளில் ஒரு முக்கிய பகுதியாக மாறும். இருப்பினும், இந்த மாற்றம் வரி ஏய்ப்பைத் தடுப்பதில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதும், அது மக்களின் தனியுரிமை குறித்த கவலைகளை உருவாக்குமா என்பதும் இனிதான் தெரியவரும்.

Taxpayers: வரி செலுத்துவோர் என்ன செய்ய வேண்டும்?

- வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரிக் கணக்கை சரியான நேரத்தில் மற்றும் சரியாக தாக்கல் செய்வதே சிறந்த வழி. 
- வருமானம் மற்றும் முதலீடுகள் பற்றிய முழுமையான தகவல்களை வழங்க வேண்டும்.
- இதனால் எதிர்காலத்தில் எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாமல் தவிர்க்கலாம். 
- உங்களிடம் பெரிய முதலீடுகள் அல்லது சொத்துக்கள் இருந்தால், வரி நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. 
- இதன் மூலம் நீங்கள் சட்ட சிக்கல்களையும் தவிர்க்கலாம்.
- சிறந்த நிதி பாதுகாப்பைப் பராமரிக்கலாம்.

மேலும் படிக்க | EPS Pension: 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு இபிஎஸ் ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: இரட்டிப்பாகும் ஊதியம், ஓய்வூதியம்... அலவன்சுகளிலும் அதிரடி ஏற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News