தனியார் துறை ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஓய்வூதிய உயர்வு: அதிகரிக்கிறது மாத ஓய்வூதியம்... புதிய அப்டேட் இதோ

EPFO Update: ஊழியர் ஓய்வூதியத் திட்டம் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு இப்போது குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.1,000 கிடைக்கின்றது. இதை ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 18, 2025, 04:16 PM IST
  • குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்குமா?
  • இதனால் யாருக்கு நன்மைக் கிடைக்கும்?
  • இபிஎஸ் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கைகள் என்ன?
தனியார் துறை ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஓய்வூதிய உயர்வு: அதிகரிக்கிறது மாத ஓய்வூதியம்... புதிய அப்டேட் இதோ

EPS Pension Latest News: இந்தியாவில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிதி ரீதியாக தேவையான உதவிகளை வழங்க ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS-95) முக்கியமான ஒரு அமைப்பாக உள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இபிஎஃப் மற்றும் இபிஎஸ் என இரு அமைப்புகளையும் நிர்வகிக்கின்றது. இபிஎப் கணக்கு மூலம் பணி ஓய்வுக்கு பிறகு மொத்த தொகை கிடைக்கின்றது. இபிஎஸ் மூலம் ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம் கிடைக்கின்றது.

Add Zee News as a Preferred Source

Employee Pension Scheme: ஊழியர் ஓய்வூதியத் திட்டம்

ஊழியர் ஓய்வூதியத் திட்டம் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு இப்போது குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.1,000 கிடைக்கின்றது. இதை ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகின்றது. இது குறித்து அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்போவதாக செய்திகள் பரவி வருகின்றன. இது நடந்தால், லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு அது மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என கூறப்படுகின்றது.

EPS 95: ஓய்வூதியதாரர்களின் கோரிக்கை என்ன?

பணவீக்கம் மற்றும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிகக்ப்பட வேண்டும் என ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு இந்த தொகை அதிகரிக்கப்பட்டு ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதற்கு பிறகு ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் செலவுகள் வெகுவாக அதிகரித்துள்ளன. எனினும், அவர்களது குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அப்படியே உள்ளது.

EPS Pensioners: இபிஎஸ் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கைகள் என்ன?

பல ஓய்வூதியதாரர்களின் அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் ஓய்வூதிய அளவை உயர்த்துவதற்காகப் போராடி வருகின்றன. ஓய்வூதியதாரர்கள் தங்கள் வாழ்க்கையை கண்ணியத்துடன் வாழ குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிப்பது மிகஅவசியம் என்பது அவர்க்களது வாதமாக உள்ளது.

Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்

புதிய குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,500 -க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், அது ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இந்த திட்டத்தில் பரிசீலிக்கப்படும் வேறு சில முக்கிய அம்சங்கள் பற்றி இங்கே காணலாம்.

- அதிகரித்த நிதி உதவி: ரூ.7,500 குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அதிக பொருளாதார பாதுகாப்பை வழங்கும்.

- குறைந்த வருமானம் கொண்ட ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நிவாரணம்: பெரும்பாலான ஓய்வூதியதாரர்கள் ரூ.1,000 மூலம் தங்கள் குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது.

- அரசாங்க சுமை மற்றும் சாத்தியக்கூறு: EPFO ​​-க்கு இதை தேவையற்ற முறையில் சுமையாக மாற்றாமல் அதிகரிப்புக்கு நிதியளிக்கும் முறையை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

Pension Hike: இதனால் யாருக்கு நன்மைக் கிடைக்கும்?

- இந்தியாவில் 65 லட்சத்திற்கும் அதிகமான EPS-95 ஓய்வூதியதாரர்களின் நலன் அரசாங்கத்தால் பரிசீலிக்கப்படும்.

- தனியார் துறையைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத் தொகையில் அதிகரிப்பு பெறுவார்கள்.

- ஓய்வூதிய உயர்வு குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் நீட்டிக்கப்படும்.

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு இபிஎஸ் மாத ஓய்வூதியம் அதிகரிக்கப்படுமா?

EPS-95 ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தனியார் துறை ஊழியர்களுக்கு இது ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும். 

மேலும் படிக்க | Family Pension: குடும்ப ஓய்வூதியத்தில் மகள்களுக்கு உரிமை உள்ளதா... விதிகள் கூறுவது என்ன

மேலும் படிக்க | மீண்டும் அகவிலைப்படி அதிகரிப்பு: நாளை முக்கிய அறிவிப்பு? ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News