ஓய்வூதிய முறையில் மிகப்பெரிய மாற்றம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் சான்ஸ், ஜூன் 30 கடைசி தேதி

UPS Latest News: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்ற இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலையான மற்றும் நம்பகமான ஓய்வூதியத்தை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 7, 2025, 09:51 AM IST
  • ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு பல சிறந்த நன்மைகளை கொண்டு வந்துள்ளது.
  • UPS திட்டத்தை யார் பயன்படுத்திக்கொள்ள முடியும்?
  • NPS இல் உள்ள குறைபாடுகளை UPS சரி செய்யுமா?
ஓய்வூதிய முறையில் மிகப்பெரிய மாற்றம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் சான்ஸ், ஜூன் 30 கடைசி தேதி

Unified Pension Scheme: மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய முறையில் மத்திய அரசு ஒரு பெரிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது 'ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்' (UPS) என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழுள்ள, மார்ச் 31, 2025 -க்குள் ஓய்வு பெற்ற அல்லது தற்போது பணியில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கானது.

Add Zee News as a Preferred Source

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்ற இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலையான மற்றும் நம்பகமான ஓய்வூதியத்தை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். NPS இல் சந்தையுடன் தொடர்புடைய நிச்சயமற்ற தன்மை உள்ளது. இந்த நிச்சயமற்ற தன்மையை UPS பெருமளவில் குறைக்கும். ஊழியர்களின் ஓய்வூதிய செயல்முறையில் இது ஒரு கேம்-சேஞ்சராக இருக்கும் என் நம்பப்படுகின்றது.

NPS vs UPS: NPS இல் உள்ள குறைபாடுகளை UPS சரி செய்யுமா?

இதுவரை NPS முற்றிலும் சந்தையுடன் இணைக்கப்பட்ட அமைப்பாக இருந்து வருகிறது. இதில் ஓய்வு பெற்ற பிறகு பெறப்படும் ஓய்வூதியத்தின் அளவு அந்த நேரத்தில் சந்தை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்தது. இதன் காரணமாக ஓய்வுபெற்ற பல ஊழியர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை கூட இழந்த நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த ஒரு முக்கிய நிதி இடைவெளியை நிரப்ப UPS கொண்டு வரப்பட்டுள்ளது. NPS இன் தற்போதைய கட்டமைப்பில் சில குறைபாடுகள் இருப்பதை அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது. இந்த குறைபாடுகளை நீக்கி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மரியாதைக்குரிய ஓய்வுகாலத்தை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட ஒரு உறுதியான நடவடிக்கையாக UPS பார்க்கப்படுகின்றது.

Features of UPS: UPS இன் முக்கிய அம்சங்கள்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு பல சிறந்த நன்மைகளை கொண்டு வந்துள்ளது:

Monthly Top-up Pension: உத்தரவாதமான மாதாந்திர டாப்-அப் ஓய்வூதியம்

NPS இலிருந்து பெறப்பட்ட வருடாந்திர தொகை (annuity) அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியத்தை விடக் குறைவாக இருந்தால், பெற்ற தொகைக்கும் குறைந்தபட்ச தொகைக்கும் இடையில் உள்ள வித்தியாசத் தொகை UPS மூலம் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும். இது ஓய்வூதியத்தை ஒரு நிலையான தொகையாக அதிகரிக்கும். இதன் மூலம் நிதி பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

Lump-sum Payment: மொத்த தொகை பெறுதல்

பணி ஓய்வின் போது, கடைசியாக பெற்ற அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியின் (DA) அடிப்படையில் ஒரு மொத்த தொகை வழங்கப்படும். இந்த தொகை ஒவ்வொரு 6 மாத முழு சேவைக்கும் ஒரு நிலையான சூத்திரத்தின்படி அளிக்கப்படும். அதாவது (கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியம் + 6 மாதங்களுக்கு ஒரு முறை கிடைக்கும் அகவிலைப்படி) இல் பத்தில் ஒரு பங்கு.

Interest on Outstanding Amount: நிலுவைத் தொகைக்கான வட்டி

செயல்பாட்டில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், ஊழியர்களுக்கு PPF (பொது வருங்கால வைப்பு நிதி) விகிதத்தில் வட்டியும் கிடைக்கும். இது சாத்தியமான நிதி இழப்பை ஈடுசெய்யும்.

UPS திட்டத்தை யார் பயன்படுத்திக்கொள்ள முடியும்?

UPS திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள சில குறிப்பிட்ட தகுதி அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன:

- NPS-ன் கீழ் வந்து மார்ச் 31, 2025க்குள் ஓய்வு பெற்ற மத்திய ஊழியர்கள் அல்லது தற்போதைய பணியில் இருப்பவர்கள்.

- குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவையை முடித்தவர்கள்.

- ஓய்வு பெற்ற ஊழியர் இறந்தால் அவரது கணவன் / மனைவி பலனை பெறலாம். ஓய்வூதியதாரர் இல்லாவிட்டாலும் குடும்பம் தொடர்ந்து நிதி உதவி பெறுவதை இது உறுதி செய்யும்.

விண்ணப்ப செயல்முறை மற்றும் காலக்கெடு

UPS -க்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 1 முதல் ஜூன் 30, 2025 வரை அரசு விண்ணப்ப நேரத்தை வழங்கியுள்ளது. இது ஒரு வரையறுக்கப்பட்ட காலக்கெடு. ஆகையால், தகுதியுள்ள ஊழியர்கள் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு முக்கிய விண்ணப்ப முறைகள் உள்ளன:

ஆஃப்லைன் முறை: படிவத்தை நிரப்பி சம்பந்தப்பட்ட DDO (Drawing and Disbursing Officer) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் முறை: டிஜிட்டல் விண்ணப்பங்களை NPS போர்டல் மூலம் சமர்ப்பிக்கலாம். இது செயல்முறையை மிகவும் வசதியாக்குகிறது.

UPS, NPS உடன் கிடைக்கும் கூடுதல் நன்மையா?

UPS என்பது ஒரு தனி ஓய்வூதியத் திட்டம் அல்ல. இது NPS -இன் ஒரு துணைத் திட்டமாகும். இது ஏற்கனவே உள்ள வருடாந்திர தொகையுடன் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. இதன் பொருள் NPS இலிருந்து வரும் வருமானத்துடன், UPS மூலம் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியத்தின் வித்தியாசத்தையும் நீங்கள் பெற முடியும். இது NPS உடன் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.

UPS ஏன் ஒரு கேம் சேஞ்சர் ஆக கருதப்படுகின்றது?

இந்தத் திட்டம் கூடுதல் தொகையை வழங்குவது மட்டுமல்லாமல், அரசாங்கம் அதன் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்காக எடுத்த ஒரு உறுதியான மற்றும் உணர்ச்சிபூர்வமான முயற்சியாகவும் பார்க்கப்பட்கின்றது. இது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்:

- UPS ஓய்வு பெற்ற வாழ்க்கை குறித்த நிச்சயமற்ற தன்மையைக் குறைக்கும். இதன் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு மன அமைதியை அளிக்கும்.

- UPS வெற்றிக்குப் பிறகு, மாநில அரசுகள் மற்றும் பிற நிறுவனங்களிலும் இதேபோன்ற கலப்பின ஓய்வூதிய மாதிரிகள் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் நாட்டின் முழு ஓய்வூதிய முறையையும் மேம்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- இந்தத் திட்டம் ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு நிலையான மற்றும் கணிக்கக்கூடிய வருமானத்தை வழங்கி, அதன மூலம் அவர்களுக்கு நிதி ரீதியாக அதிகாரத்தை அளிக்கின்றது.

மேலும் படிக்க | தங்க நகை கடன் விதிமுறைகளில் புதிய மாற்றம்: ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய விதிகள்

மேலும் படிக்க | PPF: மாதம் ரூ.3000 முதலீட்டிலும் லட்சாதிபதி ஆகலாம்... எளிய கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News