Unified Pension Scheme: இன்று புதிய நிதியாண்டு தொடங்கிவிட்டது. ஏப்ரல் 1, 2025 முதல் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியாற்றிய மத்திய அரசு ஊழியர்கள், புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) கீழ் ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடந்த 12 மாத சராசரி அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு சமமான நிலையான ஓய்வூதியத்தைப் பெறத் தகுதி பெறுவார்கள்.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை அறிவித்தது. "மார்ச் 19, 2025 தேதியிட்ட கெஜட் அறிவிப்பின் மூலம் PFRDA (NPS இன் கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் செயல்பாட்டுமயமாக்கல்) விதிமுறைகள், 2025 ஐ வெளியிட்டுள்ளது" என்று நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NPS இன் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்காக இந்திய அரசு ஜனவரி 24, 2025 அன்று வெளியிட்ட UPS அறிவிப்பைத் தொடர்ந்து இது வந்தது. இந்த விதிமுறைகள் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.
PFRDA விதிமுறைகள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் மூன்று வகை மத்திய அரசு ஊழியர்களைச் சேர்க்க வழிவகை செய்கின்றன.
(i) ஏப்ரல் 1, 2025 அன்று பணியில் இருக்கும், என்பிஎஸ் -இன் கீழ் கவர் செய்யப்பட்டிருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்.
(ii) ஏப்ரல் 1, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு புதிதாக மத்திய அரசு பணிகளில் சேரும் மத்திய அரசு ஊழியர்கள்.
(iii) NPS இன் கீழ் சேவையில் இருந்து ஓய்வுபெற்ற, அல்லது தன்னார்வ ஓய்வுபெற்ற அல்லது மார்ச் 31, 2025 அன்று அல்லது அதற்கு முன் அடிப்படை விதிகள் 56(j) இன் கீழ் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள் யுபிஎஸ் -இல் சேர தகுதி உடையவர்கள். UPS தேர்வு செய்யும் முன் இறந்த ஊழியர்களின் சட்டப்பூர்வமான வாழ்க்கைத் துணைக்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர உரிமை உண்டு.
UPS: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர்வதற்கான வழிமுறைகள்
- இந்த அனைத்து வகை மத்திய அரசு ஊழியர்களுக்கான சேர்க்கை மற்றும் கோரிக்கை படிவங்கள் ஏப்ரல் 1, 2025 முதல் புரோட்டீன் CRA - https://npscra.nsdl.co.in இணையதளத்தில் ஆன்லைனில் கிடைக்கும்.
- ஊழியர்கள் படிவங்களை நிரப்பி நேரில் சென்றும் சமர்ப்பிக்கலாம்.
UPS-ன் கீழ் ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?
- ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதியம் வழங்கப்படும். ஊழியர்கள் கடைசியாக பெற்ற 12 மாத சராசரி அடிப்படை சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக அளிக்கப்படும்.
- குறைந்தது 25 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.
- ஊழியர் இறந்துவிட்டால், ஊழியரின் குடும்பத்தினருக்கு அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக (Family Pension) அளிக்கப்படும்.
- வெறும் 10 ஆண்டுகள் மட்டுமே ஒருவர் பணியாற்றியிருந்தால், அவருக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
- பணியாளரின் சேவை 25 ஆண்டுகளுக்குக் குறைவாகவும் 10 ஆண்டுகளுக்கு மேலும் இருந்தால், ஓய்வூதியத் தொகை விகிதாசார ஒதுக்கீட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
- யுபிஎஸ் -இன் முக்கிய அம்சம் என்னவென்றால், பணியாளரின் பணி ஆண்டுகளின் எண்ணிக்கை எதுவாக இருந்தாலும், அவரது குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை ரூ.10 ஆயிரத்திற்கு குறையாமல் இருக்கும்.
Pensioners: ஓய்வூதியதாரர்களுக்காக முக்கிய முடிவு எடுத்த மத்திய அரசு
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக தேசிய ஓய்வூதிய முறையை எதிர்த்து போராடி வந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்பது பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme), அதாவது OPS மற்றும் தேசிய ஓய்வூதிய அமைப்பு (National Pension System), அதாவது NPS ஆகியவற்றில் உள்ள முக்கிய அம்சங்களை சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள புதிய ஓய்வூதியத் திட்டம். இந்த புதிய திட்டத்தின் மூலம் உறுதியான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் கிடைக்கின்றது. NPS -இன் கீழுள்ள மத்திய அரசு ஊழியர்கள் UPS -க்கு மாறலாம்.
மேலும் படிக்க | கிரெடிட் கார்ட் முதல் வங்கி கணக்கு வரை! இன்று முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









