மூத்த குடிமக்களுக்கு சூப்பர் திட்டம்: வட்டியில் மட்டும் ரூ.20,500 மாத வருமானம், ஏகப்பட்ட நன்மைகள்

Post Office SCSS: பணி ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தைத் தரும், எதிர்பாராத செலவுகளுக்கு உதவி, ஆபத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு திட்டத்தை தேடும் நபர்களுக்கு தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஒரு சிறந்த வழியாக இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 12, 2025, 02:52 PM IST
  • மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்.
  • ஒவ்வொரு மாதமும் ரூ.20,500 வருமானம் கிடைக்கும்.
  • முதலீட்டாளர்கள் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
மூத்த குடிமக்களுக்கு சூப்பர் திட்டம்: வட்டியில் மட்டும் ரூ.20,500 மாத வருமானம், ஏகப்பட்ட நன்மைகள்

Senior Citizen Savings Scheme: பணத்திற்கான தேவை அனைவருக்கும் உள்ளது. அதுவும், வயதாகும் போது, இதற்கான தேவை அதிகரிக்கின்றது. வயதான காலத்தில் நம்மால் இளமையில் இருந்தது போல பணம் ஈட்ட முடியாது என்பதால், அதற்கான திட்டமிடல் மிக அவசியமாகும். பணி ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தைத் தரும் திட்டத்தை தேடும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். 

Add Zee News as a Preferred Source

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

நமது அரசாங்கம் மூத்த குடிமக்களின் நலனுக்காக பல வித திட்டங்களை தீட்டி வருகின்றது. அவற்றில் ஒன்று தபால் நிலைய மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம். இந்தத் திட்டம் தபால் அலுவலகம் மூலம் மூத்த குடிமக்களுக்காக நடத்தப்படும் சேமிப்புத் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் மாதா மாதம் ரூ.20,500 ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பணி ஓய்வுக்குப் பிறகும் பணத்தைப் பற்றி அவர்கள் கவலைப்பட வேண்டிய நிலை ஏற்படாமல் இருக்க இந்தத் திட்டம் மூத்த குடிமக்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Post Office Scheme: தபால் அலுவலகத் திட்டம்

பணி ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தைத் தரும், எதிர்பாராத செலவுகளுக்கு உதவி, ஆபத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு திட்டத்தை தேடும் நபர்களுக்கு தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஒரு சிறந்த வழியாக இருக்கும். எனினும், இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன் முதலீட்டாளர்கள் இதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.

Monthly Income: ஒவ்வொரு மாதமும் ரூ.20,500 வருமானம் கிடைக்கும்

- இந்தத் திட்டத்தில் நீங்கள் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு சுமார் ரூ.2 லட்சத்து 46 ஆயிரம் வட்டி கிடைக்கும். 
- அதாவது ஒவ்வொரு மாதமும் ரூ.20,500 உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். 
- இந்தத் திட்டத்தின் வட்டி விகிதம் 8.2 சதவீதம் ஆகும்.
- இது எந்தவொரு அரசாங்கத் திட்டத்திலும் கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த விகிதங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

முதலீட்டாளர்கள் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

முன்னர் இந்தத் திட்டத்தில் முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சமாக இருந்தது. ஆனால் இப்போது அது ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது ஒரே நேரத்தில் செய்யப்பட வேண்டும். மேலும் இதற்கான வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் முதலீட்டாளர்களின் கணக்கில் வந்து சேரும். முதலீட்டாளர் விரும்பினால், அதை அவர்களது மாதாந்திரச் செலவுகளாகவும் பயன்படுத்தலாம்.

SCSS: இதில் யார் முதலீடு செய்யலாம்

இந்த திட்டத்தில் முதலீடு செய்ய, முதலீட்டாளர்களுக்கு 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இதில் டெபாசிட் செய்ய இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 55 முதல் 60 வயதுக்குட்பட்ட ஓய்வு பெற்றவர்கள் இதில் சேரலாம். தபால் அலுவலகம் அல்லது வங்கிக்குச் சென்று இந்தக் கணக்கைத் திறக்கலாம். இந்தத் திட்டத்தில் பெறப்பட்ட வட்டி வருமானத்திற்கு முதலீட்டாளர்கள் வரி செலுத்த வேண்டும். இருப்பினும், முதலீட்டுத் தொகை பிரிவு 80C இன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்குக்கு தகுதியுடையது.

இந்த திட்டத்தின் கால அளவு என்ன?

இந்தத் திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலீட்டாளர்கள் விரும்பினால், அதை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தில் நேரத்திற்கு முன்பே பணத்தை எடுக்கலாம். ஆனால் இதற்கு அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தனியார் துறை ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்: ஓய்வூதியம், ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்... எவ்வளவு தெரியுமா?

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: அடிப்படை ஊதியத்தில் அசுர பாய்ச்சல்... ரூ.18,000 டு ரூ.79,794! காரணம் இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News