ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம், 20%-100% பென்ஷன் உயர்வு: அரசு உத்தரவு

Central Government Pensioners Latest News: வயது வாரியாக 80 வயதிற்கு பிறகு யாருக்கு எவ்வளவு கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்? இது குறித்த முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 8, 2025, 04:35 PM IST
  • கருணைத்தொகைக்கான திட்டம் எப்படி செயல்படும்?
  • கூடுதல் ஓய்வூதிய சலுகைக்கான தகுதி என்ன?
  • ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள் எப்போது கூடுதல் ஓய்வூதியத்தைப் பெறுவார்கள்?
ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம், 20%-100% பென்ஷன் உயர்வு: அரசு உத்தரவு

Additional Pension For Central Government Pensioners: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை கூடுதல் ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த மாற்றம் CCS விதிகள், 2021 இன் விதி 44 இன் துணை விதி 6 இன் தேவைகளுக்கு இணங்க வருகிறது. 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் இந்த கூடுதல் ஓய்வூதியத்திற்கு உரிமை பெறுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வாரியாக 80 வயதிற்கு பிறகு யாருக்கு எவ்வ்வளவு கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது குறித்த முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி

வயது மூப்பு காரணமாக அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவைக் கையாள்வதில் ஓய்வூதியதாரர்களுக்கு ஆதரவாக செயல்படுவதே இந்த கூடுதல் ஓய்வூதியத்தின் நோக்கமாகும். ஓய்வூதிய விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து வங்கிகள் மற்றும் துறைகளுக்கும் மாற்றங்கள் குறித்த தகவல்களைப் பரப்புமாறு துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஓய்வூதியதாரர் தகுதியான வயதை அடைந்த பிறகு மாதத்தின் முதல் நாளிலிருந்தே கூடுதல் ஓய்வூதியம் அல்லது கருணை உதவித்தொகை நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Compassionate Allowance: கருணைத்தொகைக்கான திட்டம் எப்படி செயல்படும்?

DoPPW, பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் வருகிறது. இந்த அமைச்சகம் மத்திய அரசின் ஒரு வழிகாட்டும் நிறுவனமாகும். இது ஊழியர்களின் நலன், பயிற்சி, ஆட்சேர்ப்பு, தொழில் மேம்பாடு, ஓய்வூதியத்திற்குப் பிந்தைய கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகளைக் கையாளுகிறது. 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள், வயது வாரியாக, கூடுதல் ஓய்வூதியமாக எவ்வளவு பெறுவார்கள் என்பதை இங்கே தெரிந்துகொள்ளாலாம்.

- 80 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 85 வயதுக்கு குறைவான மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஓய்வூதியம் அல்லது கருணை உதவித்தொகையில் 20 சதவீதம் கூடுதல் தொகையைப் பெறுவார்கள். 
- 85 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 90 வயதுக்கு உட்பட்ட மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் 30 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் பெறுவார்கள்.
- 90 முதல் 95 வயதுக்கு இடைப்பட்ட மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு, கூடுதல் ஓய்வூதியமாக 40 சதவிகிதம் வழங்கப்படும்.
-  95 முதல் 100 வயதுடைய ஓய்வூதியதாரர்களுக்கு 50 சதவீத கூடுதல் ஓய்வூதியமும் வழங்கப்படும்.
- இறுதியாக, 100 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 100 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும்.

Pensioners: கூடுதல் ஓய்வூதிய சலுகைக்கான தகுதி என்ன?

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையிலிருந்து கூடுதல் ஓய்வூதியம் அல்லது கூடுதல் கருணை உதவித்தொகை பெற, மூத்த குடிமக்கள் குறைந்தது 80 வயதுக்கு மேற்பட்டவர்க்களாக இருக்க வேண்டும். மேலும், அவர்கள் ஓய்வு பெற்ற முன்னாள் மத்திய அரசு ஊழியர்களாக இருக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்கள்  குறிப்பிட்ட வயதை அடைந்ததும், மாதத்தின் முதல் நாளிலேயே ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்குவார்கள். இந்த கூடுதல் ஓய்வூதியம், வயது மூப்பின் காரணமாக அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவைக் கையாள அவர்களுக்கு உதவும்

Central Government Employees: ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள் எப்போது கூடுதல் ஓய்வூதியத்தைப் பெறுவார்கள்?

அங்கீகரிக்கப்பட்ட குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கூடுதல் ஓய்வூதியம் அல்லது கூடுதல் கருணைத்தொகை, அது செலுத்தப்பட வேண்டிய மாதத்தின் முதல் நாளிலிருந்து வழங்கப்படும். எடுத்துக்காட்டாக, ஆகஸ்ட் 20, 1942 இல் பிறந்த ஓய்வூதியதாரர் ஆகஸ்ட் 1, 2022 முதல் கூடுதல் ஓய்வூதியத்தைப் பெறுவார். கூடுதல் ஓய்வூதியம் தொடங்கும் வயதை 65 ஆக குறைக்க வேண்டும் என நாடாளுமன்றக்குழு பரிந்துரைத்துள்ளது. அது நடந்தால், இன்னும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் இதன் பலனை பெறுவார்கள்.

மேலும் படிக்க | CGHS முக்கிய செய்தி: புதிய வழிகாட்டுதல்கள்.... இந்த ஓய்வூதியதாரர்களுக்கு இனி இந்த வசதி கிடைக்காது

மேலும் படிக்க | குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்: ஹோலிக்கு முன் 3 குட் நியூஸ் காத்திருக்கு.. வரும் வாரம் அட்டகாசம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News