)
Bihar Election 2025 | Salary Hike: இந்தியாவில் அடுத்தடுத்து பல மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் சட்டமனற தேர்தல்கள் நடக்கவுள்ளன. இந்த மாநிலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் வாக்கு வங்கியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டன. மாநில அரசுகள் மக்களை ஈர்க்கும் வகையில் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
பீகார் சட்டமன்ற தேர்தல்
- கடந்த சில நாட்களில் பீகார் அரசு வெயிட்டு வரும் அறிவிப்புகள் பலரை திரும்பிப்பார்க்க வைத்துள்ளன.
- ஏகப்பட்ட சலுகைகள், அதிகரிக்கும் வசதிகள், ஊழியர்களுக்கு உயரும் வருமானம் என பீகார் அரசின் அறிவிப்புகள் நாடு முழுதும் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
- அந்த வகையில், பீகாரில் கல்வி முறையை வலுவாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதற்கு மற்றொரு பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரட்டிப்பாகும் கௌரவ ஊதியம்
- கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் பணியாளர்களின் கௌரவ ஊதியத்தை இரட்டிப்பாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் நிதிஷ் குமார் ட்வீட் செய்துள்ளார்.
- 2005 ஆம் ஆண்டு தனது அரசாங்கம் அமைக்கப்பட்டபோது, கல்விக்கான மொத்த பட்ஜெட் ₹ 4366 கோடியாக இருந்ததாகவும், அது தற்போது ₹ 77690 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் முதல்வர் நிதிஷ் குமார் கூறினார்.
- இந்த காலகட்டத்தில், அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்களை நியமித்தல், புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டுதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு காரணமாக கல்வி முறை பெருமளவில் மேம்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பீகார் அரசின் பெரிய அறிவிப்பு
மதிய உணவு சமையல் பணியாளர்கள், இரவு நேர காவலர்கள் மற்றும் உடற்கல்வி மற்றும் சுகாதார பயிற்றுனர்கள் கல்வியின் தரத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்பதை பீகார் அரசு அங்கீகரித்து பாராட்டுகிறது. இந்த தொழிலாளர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் நோக்கில், அவர்களின் கௌரவ ஊதியத்தில் வரலாற்று சிறப்புமிக்க அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவு இந்த ஊழியர்களின் நிதி நிலைமையை மேம்படுத்துவதோடு, மன உறுதியை அதிகரிக்கும் என்றும், அவர்கள் அதிக உற்சாகம், விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்புடன் தங்கள் கடமைகளைச் செய்வார்கள் என்றும் முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளிவந்த பிற அறிவிப்புகள்
- பூத் லெவல் அபீசர்களான BLO -க்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.6000 கூடுதல் கௌரவ ஊதியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் சம்பளக் கொடுப்பனவுக்கு ரூ.3,944.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- வெடிகுண்டு அகற்றும் படையின் பணியாளர்கள் இனி மாதந்தோறும் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 30% ரிஸ்க் அலவன்சைப் பெறுவார்கள்.
- முதியோர், விதவைகள் மற்றும் ஊனமுற்றோர் ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ