)
Sell Old Notes: பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் பழைய அல்லது கிழிந்த ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தால், பலரும் அவற்றை வாங்கத் தயங்குவதைப் பார்த்திருக்கிறோம். மக்கள் எப்போதும் புத்தம் புதிய, பளபளப்பான ரூபாய் நோட்டுகளையே விரும்புகிறார்கள். தேய்ந்துபோன ரூபாய் நோட்டுகள் பொதுவாகப் புறக்கணிக்கப்படுகின்றன.
ஆனால், இந்த பழைய ரூபாய் நோட்டுகளோ அல்லது நாணயங்களோ உங்களை ஒரே நைட்டில் கோடீஸ்வரர் ஆக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சமீபகாலமாக, பல ஆன்லைன் தளங்களில் பழங்கால நாணயங்கள் மற்றும் குறிப்பிட்ட தொடர் கொண்ட ரூபாய் நோட்டுகளுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. சில நோட்டுகளுக்கு லட்சக்கணக்கில் விலை பேசப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட தொடர் எண் கொண்ட ₹10 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், அதற்கு ₹5 லட்சம் வரை விலை கிடைக்கலாம் என்று சமூக வலைத்தளங்களிலும் இணையதளங்களிலும் செய்திகள் பரவி வருகின்றன.
இந்த ₹10 நோட்டு உங்களிடம் இருக்கிறதா?
பணத்தை வெறும் பணமாக மட்டும் பார்ப்பதுண்டு. ஆனால், ஒரு சில அரிய ரூபாய் நோட்டுகள், அவற்றின் முக மதிப்பை விட பல மடங்கு அதிக மதிப்புள்ள 'லாட்டரி சீட்டு' போல கருதப்படுகின்றன. அந்த வகையில், 786 என்ற தொடர் எண் கொண்ட ரூபாய் நோட்டுகள், சேகரிப்பாளர்கள் மத்தியில் ஒரு பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, ₹10 ரூபாய் நோட்டில் இந்த எண் இருந்தால், அதன் மதிப்பு பல லட்சம் பெறலாம்.
எப்படி விற்பனை செய்வது
பழங்காலப் பொருட்கள் மற்றும் நாணயங்களை விற்பதற்கான சரியான தளத்தை முதலில் தேர்ந்தெடுக்கவும். குறிப்பிட்ட தளங்களில், நேரடியாக வாட்ஸ்அப் வழியாக விற்பதற்கான வசதி இருக்காது. நீங்கள் தேர்ந்தெடுத்த ஆன்லைன் தளத்தில் ஒரு விற்பனையாளர் கணக்கை உருவாக்கவும் அல்லது பதிவு செய்யவும். இது விற்பனை செயல்முறைக்கு அவசியம். உங்கள் பழைய ₹10 நோட்டின் உயர்தர புகைப்படங்களைப் பதிவேற்றவும். நோட்டின் இரு பக்கங்களையும், அதன் நிலை மற்றும் தனித்தன்மை வாய்ந்த எண்களையும் தெளிவாகக் காட்டுங்கள். அதன் நிலை, ஆண்டு மற்றும் தனித்தன்மை வாய்ந்த எண் பற்றிய துல்லியமான விளக்கத்தைக் கொடுக்கவும்.
சந்தையில் உள்ள ஒத்த நோட்டுகளின் விலையை ஆய்வு செய்து, உங்கள் பழங்கால நோட்டின் விலையை நிர்ணயம் செய்யுங்கள். விலை அதன் அரிதான தன்மை, நிலை மற்றும் தொடர் எண்ணைப் பொறுத்தது. உங்கள் விளம்பரம் நேரலைக்கு வந்தவுடன், ஆர்வமுள்ள வாங்குபவர்கள் தளத்தின் மெசேஜிங் சிஸ்டம் மூலமாகவோ அல்லது அவர்கள் கொடுத்திருக்கும் பிற தொடர்பு வழிகள் மூலமாகவோ உங்களைத் தொடர்புகொள்ளலாம். பணத்தை அனுப்பும் முறைகள் மற்றும் விநியோக வழிமுறைகள் குறித்து வாங்குபவருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள். பாதுகாப்பான பரிவர்த்தனைக்கு எப்போதும் தளத்தின் அதிகாரப்பூர்வ வழிமுறைகளைப் பின்பற்றவும்.
ஆகஸ்ட் 2020 இல், இந்திய ரிசர்வ் வங்கி (RBI), கரன்சி நோட்டுகள் மற்றும் நாணயங்கள் ஆன்லைனில் வாங்கப்படுவது மற்றும் விற்கப்படுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அறிக்கையில், “ரிசர்வ் வங்கியின் (Reserve Bank Of India) பெயர்/லோகோவைப் பயன்படுத்தி, பல்வேறு ஆன்லைன்/ ஆஃப்லைன் தளங்களில் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களின் வாங்குதல் மற்றும் விற்பது தொடர்பான பரிவர்த்தனைகளில், பொதுமக்களிடம் இருந்து கட்டணங்கள்/கமிஷன்/வரி என சில தனிமங்கள் மோசடியில் ஈடுபடுவது இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்துள்ளது." என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
ஆகையால் ஆன்லைனில் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வாங்கும் / விற்கும் போது பொது மக்கள் அதிகபட்ச கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
(பொறுப்புத் துறப்பு: ஜீ தமிழ் நியூஸ் பழைய நாணயங்கள் அல்லது வங்கி நோட்டுகளை ஆன்லைனில் வாங்குவதையும் விற்பதையும் ஊக்குவிக்கவில்லை. இந்த செய்தி வெறும் தகவலுக்காக மட்டுமே பகிரப்பட்டுள்ளது)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ