)
Microsoft Layoff: மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது உலகளாவிய பணியாளர்களில் நான்கு சதவீதத்தை குறைப்பதாக கூறியுள்ளது. ஜூலை 2 புதன்கிழமை, தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், பல்வேறு குழுக்களைச் சேர்ந்த சுமார் 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக தெரிவித்தது. இந்த பணிநீக்கங்கள் பல நாடுகளில் உள்ள அலுவலக குழுக்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் அனைத்து நிலையில் உள்ள, அனுபவமுள்ள நிபுணர்களும் பணி நீக்கத்திற்கு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட் வழக்கமாக புதிய நிதியாண்டின் இறுதியில் கட்டமைப்பு மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது. இருப்பினும், இந்த முறை ஜூலை மாதத்தின் இரண்டாவது நாளில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேவையான நிறுவன மாற்றங்கள் தொடரும்
தினம் தினம் மாறும் சந்தையில் நிறுவனம் மற்றும் நிறுவன குழுக்கள் வெற்றிபெற, சிறந்த நிலையில் இருக்க தேவையான நிறுவன மாற்றங்களைத் மைக்ரோசாப்ட் தொடர்ந்து செயல்படுத்தும் என்று நிறுவனம் கூறியுள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் இந்த ஆண்டு தொடர்ச்சியாக பணிநீக்கங்களை அறிவித்து வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில், ஜனவரியில் அதன் ஊழியர்களில் ஒரு சதவீதத்தை அவர்களின் செயல்திறனின் அடிப்படையில் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்தது.
2014 -க்கு பிறகு இரண்டாவது பெரிய அளவிலான பணிநீக்கம்
மே மாதத்தில், 6,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களும் ஜூன் மாதத்தில் சுமார் 300 ஊழியர்களும் நீக்கப்பட்டன. இதேபோல், 2023 இல் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. நிறுவனத்தின் தொடர்ச்சியான பெரிய பணிநீக்கங்களைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, 50 ஆண்டுகால தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் அதன் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவது தெரிகிறது. 2014 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 18,000 ஊழியர்களை நீக்கியதை அடுத்து, இது நிறுவனத்தின் இரண்டாவது பெரிய அளவிலான பணிநீக்கமாக கூறப்படுகிறது.
பணிநீக்கங்களுக்கு காரணம் இதுதானா?
இந்த பணிநீக்கங்களுக்கு வெளிப்படையாக எந்த காரணங்களும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்த ஆண்டு வேகமாக வளர்ந்து வரும் பிரிவான கோடிங்க் அசிஸ்டண்ட்ஸ், சாத்தியமான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கூகிள் சமீபத்தில் இதற்கான தனது சொந்த பதிப்பை அறிமுகப்படுத்தியது. மேலும் மைக்ரோசாப்ட் இதேபோன்ற தயாரிப்பை அறிமுகப்படுத்துவதாக இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், நிறுவனம் இந்த கருவிகளைச் சுற்றியுள்ள உள் பணிப்பாய்வுகளை மாற்றுவதாகக் கூறப்படுகிறது.
எளிமையான வார்த்தைகளில் கூறுவதானால், இந்த குறியீட்டு உதவியாளர்களான கோடிங்க் அசிஸ்டண்ட்ஸ், நிறுவனங்கள், மென்பொருள் மேம்பாட்டு செயல்பாட்டில் ஆட்டோமேஷன் மற்றும் AI- இயக்கப்படும் செயல்திறனை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கின்றன.
கோடர்ஸ் பணிகளுக்கு ஆபத்து
தற்போதைக்கு, மைக்ரோசாப்ட் மற்றும் கூகிள் போன்ற நிறுவனங்கள் AI ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான செலவுகளைப் பொறுத்தவரை முன்னணியில் உள்ளன. அந்த நிறுவனங்களின் டெவலப்பர் ரோல்ஸ் விரைவாக உருவாகி வருகின்றன. AI கருவிகள் பாரம்பரிய பணிகளை மேற்கொள்ளத் தொடங்குவதால், இந்த மறுசீரமைப்பால் பெரும்பாலான கோடர்ஸ் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
வேகமாக திறமையாளர்களை பணியமர்த்தும் மெட்டா
முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட், பணிநீக்கங்களில் பிற நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாக முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் மறுபுறம், மெட்டா திறமையாளர்களை தீவிரமாக பணியமர்த்தி வருகிறது. இந்த நேரத்தில் மைக்ரோசாப்ட்டின் இந்த பணிநீக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
AI ஆராய்ச்சிக்கு தாராளமாக செலவு செய்யும் நிறுவனங்கள்
மைக்ரோசாப்ட், மிகவும் திறமையான AI ஆராய்ச்சியாளர்களை கொண்டு வர 3 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு பெரிய முதலீடாகும். பெரும்பாலான பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், புத்திசாலித்தனமான AI திறமையாளர்களை ஈர்க்க, அவற்றின் தற்போதைய வளங்களை மறுசீரமைக்கும் செலவுகளையும், தொடர்புடைய பிற செலவுகளையும் அதிகரிக்கவும் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ