)
Bank minimum balance Rules : கனரா வங்கி, எஸ்பிஐ, எச்டிஎப்சி, பிஎன்பி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளின் சராசரி மாதாந்திர இருப்பு தேவைகள் மற்றும் கட்டணங்களை ஒப்பிடும் போது, கனரா வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கிகள் தங்கள் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மிகவும் சாதகமான விதிமுறைகளை வைத்திருகின்றன. கனரா வங்கி ஜூன் 1 முதல் அனைத்து சேமிப்பு கணக்குகளுக்கான சராசரி மாதாந்திர இருப்பு (MAB) தேவையை முழுமையாக நீக்கியுள்ளது, இதனால் கணக்குதாரர்களுக்கு எந்த குறைந்த இருப்புக்கும் அபராதமும் செலுத்த வேண்டிய தேவை இல்லை. இதேபோல், எஸ்பிஐ வங்கியும் எந்தவொரு குறைந்தபட்ச இருப்பு தேவையையோ அல்லது அபராதமோ விதிக்கவில்லை.
மற்ற முக்கிய வங்கிகளின் விதிமுறை சற்று வித்தியாசமாக உள்ளது. ஆக்சிஸ் வங்கி நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் ரூ. 10,000 சராசரி மாதாந்திர இருப்பை பராமரிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது, இல்லையெனில் குறைந்த இருப்பின் 6% (அதிகபட்சம் ரூ. 600) அபராதம் விதிக்கப்படும். எச்டிஎப்சி வங்கி நகர்ப்புறங்களில் ரூ. 10,000, அரை நகர்ப்புறங்களில் (Sub Urban) ரூ. 5,000 மற்றும் கிராமப்புறங்களில் ரூ. 2,500 குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க வேண்டும் என்று விதிக்கிறது, இல்லையெனில் முறையே ரூ. 600 மற்றும் ரூ. 300 அபராதம் விதிக்கப்படும். ஐசிஐசிஐ வங்கி நகர்ப்புறங்களில் ரூ. 10,000 மற்றும் கிராமப்புறங்களில் ரூ. 5,000 குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க வேண்டும் என்று கூறுகிறது, இல்லையெனில் ரூ. 450 வரை அபராதம் விதிக்கலாம்.
பப்ளிக் செக்டர் வங்கிகளில், பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மெட்ரோ பகுதிகளில் ரூ. 10,000, நகர்ப்புறங்களில் ரூ. 5,000 மற்றும் கிராமப்புறங்களில் ரூ.1,000 குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க வேண்டும் என்று விதிக்கிறது, இல்லையெனில் ரூ. 450 வரை தண்டனை விதிக்கப்படும். பாங்க் ஆப் பரோடா நகர்ப்புறங்களில் ரூ. 2,000, அரைநகர்ப்புறங்களில் ரூ. 1,000 மற்றும் கிராமப்புறங்களில் ரூ. 500 குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க வேண்டும் என்று கூறுகிறது, இல்லையெனில் ரூ. 120 வரை தண்டனை விதிக்கப்படும்.
முடிவாக, குறைந்தபட்ச இருப்பு தேவை இல்லாத வங்கிகளில் கணக்கு வைத்திருப்பது சிறந்தது. இதில் கனரா வங்கி மற்றும் எஸ்பிஐ முன்னணியில் உள்ளன. அபராதம் கட்டணம் குறைவாக விதிக்கும் வங்கிகளில் பாங்க் ஆப் பரோடா சிறந்தது. FD வைத்திருப்பவர்களுக்கு எச்டிஎப்சி மற்றும் ஆக்சிஸ் வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிகளின் விதிமுறைகள் அவ்வப்போது மாறக்கூடியவை என்பதால், அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைப் பார்க்கவும்.
முக்கிய தகவல்கள்
கனரா வங்கி & SBI - குறைந்தபட்ச இருப்பு தேவை இல்லை, தண்டனையும் இல்லை. SBI, கனரா வங்கி போன்ற பப்ளிக் செக்டர் வங்கிகள் பொதுமக்களுக்கு சாதகமான விதிமுறைகளை வழங்குகின்றன.
ஆக்சிஸ் வங்கி - ₹10,000 AMB (அல்லது ₹50,000 FD வைத்திருந்தால் போதும்). குறைந்த இருப்பு இல்லாமல் இருந்தால் அபராதம் 6% (அதிகபட்சம் ₹600).
HDFC வங்கி - நகர்ப்புறங்களில் ₹10,000 (அல்லது ₹1 லட்சம் FD). அபராதம் நகர்ப்புறங்களில் ₹600, கிராமப்புறங்களில் ₹300.
ICICI வங்கி - நகர்ப்புறங்களில் ₹10,000, கிராமப்புறங்களில் ₹5,000. அபராதம் அதிகபட்சம் ₹450.
PNB - அபராதம் மெட்ரோ பகுதிகளில் ₹10,000, கிராமப்புறங்களில் ₹1,000. அபராதம் மெட்ரோ பகுதிகளில் ₹450.
பாங்க் ஆப் பரோடா - நகர்ப்புறங்களில் ₹2,000, கிராமப்புறங்களில் ₹500 குறைந்தபட்சம் இருப்பு இருக்க வேண்டும். இல்லாமல் இருந்தால் அபராதம் அதிகபட்சம் ₹120.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ