7 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் மாத ஓய்வூதியம்: 8 நாட்களில் வரும் EPFO குட் நியூஸ்

EPFO Update: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் இதற்கு முன் 2014 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. அப்போதிருந்து இது மாதத்திற்கு ரூ.1,000 ஆக உள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 21, 2025, 10:11 AM IST
  • இபிஎஃப் உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி கிடைக்குமா?
  • ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா?
  • குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்குமா?
7 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் மாத ஓய்வூதியம்: 8 நாட்களில் வரும் EPFO குட் நியூஸ்

EPFO Minimum Monthly Pension: தனியார் துறை ஊழியர்களுக்கு வரும் நாட்களில் சில முக்கிய செய்திகள் கிடைக்கக்கூடும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் உள்ள தனியார் துறை ஊழியர்கள் நீண்ட காலமாக தங்கள் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதில் இன்னும் சில நாட்களில் ஒரு பெரிய அறிவிப்பு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Add Zee News as a Preferred Source

EPF Contribution: இபிஎஃப் பங்களிப்பு

குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் இதற்கு முன் 2014 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. அப்போதிருந்து இது மாதத்திற்கு ரூ.1,000 ஆக உள்ளது. EPF உறுப்பினர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிக்கின்றனர். அதே அளவு தொகையை முதலாளிகளும் / நிறுவனங்களும் பங்களிக்கின்றன. எனினும் நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33 சதவீதம் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) ஒதுக்கப்படுகிறது. 3.67 சதவீதம் EPF திட்டத்திற்குச் செல்கிறது.

Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்

2025 பட்ஜெட்டுக்கு முன்னதாக, ஓய்வு பெற்றவர்களின் EPS-95 குழு ஒன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, மாதத்திற்கு ரூ.7,500 குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படிக்கான (DA) நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தியது. அவர்களின் கோரிக்கைகள் உடனடியாக பரிசீலிக்கப்படும் என்று நிதியமைச்சர் உறுதியளித்ததாக EPS-95 தேசிய போராட்டக் குழு கூறியது. 

Pensioners: ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள்

ஓய்வூதியதாரர்கள் 7-8 ஆண்டுகளுக்கும் மேலாக பின்வரும் விஷயங்களுக்காக போராடி வருகிறார்கள்:

- குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000 லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும்
- அகவிலைப்படி சலுகைகள் 
- ஓய்வு பெற்றவர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை

இப்போதாவது இவை குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஓய்வூதியதாரர்கள் நம்புகிறார்கள்

Central Board of Trustees: மத்திய அறங்காவலர் குழு

EPFO -வின் மத்திய அறங்காவலர் குழு (CBT), 2024-25 நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை இறுதி செய்வதற்காக பிப்ரவரி 28, 2025 அன்று கூடவுள்ளது.  இந்த கூட்டத்தில் ஓய்வூதிய திருத்தத்திற்கான கோரிக்கை குறித்தும் விவாதிக்கப்படும் என நம்பப்படுகின்றது. மாதத்திற்கு ரூ.1,000 ஓய்வூதியம் என்பது மிகக்குறைந்த தொகை என பல ஆண்டுகளாக, ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஊழியர் சங்கங்கள் ஆகியோர் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

EPS Pension: இபிஎஸ் ஓய்வூதியம்

குறிப்பாக சுமார் நான்கு தசாப்தங்களாக இபிஎஃப் நிதிக்கு பங்களித்தவர்களுக்கு ரூ.1,000 மாதாந்திர ஓய்வூதியம் போதுமானதாக இல்லை என்ற வாதம் உள்ளது.   அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு இடையில் இந்த நீண்டகால கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி கிடைக்குமா?

சில நாட்களில் நடக்கவுள்ள CBT கூட்டத்தின் மீது இப்போது இபிஎஃப் சந்தாதாரர்களின் பார்வை உள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய சலுகைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடும்.

மேலும் படிக்க | NPS கணக்கு வைத்திருக்கும் நபர் இறந்தால் நாமினிக்கு ஓய்வூதியம் கிடைக்குமா?

மேலும் படிக்க | PPF முதலீடு... ஓய்வு காலத்தில் மாதம் ரூ.48,000 பென்ஷன் பெறலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News