PPF முதலீட்டை இரட்டிப்பாக்கி... கோடிகளில் கார்பஸை சேர்த்து... டபுள் பலனை பெற சில டிப்ஸ்

PPF : பொது வருங்கால வைப்பு நிதியில் (PPF) முதலீடு செய்வதன் மூலம் நல்ல வட்டி வருமானம் கிடைப்பதோடு, வரி சேமிப்புக்கும் உதவும் மிகச் சிறந்த முதலீடு. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 8, 2025, 05:00 PM IST
  • வாழ்க்கை துணையின் பெயரில் கணக்கை திறப்பதால் கோடிகளில் கார்பஸை எளிதில் உருவாக்கலாம்.
  • PPF திட்டத்தில் முதலீடு இரட்டிப்பாக்குவதற்கான வழிமுறை.
  • கிளப்பிங் விதிகள் மூலம் வரி விலக்கில் பாதிப்பு ஏதும் இருக்காது.
PPF முதலீட்டை இரட்டிப்பாக்கி... கோடிகளில் கார்பஸை சேர்த்து... டபுள் பலனை பெற சில டிப்ஸ்

PPF : பொது வருங்கால வைப்பு நிதியில் (PPF) முதலீடு செய்வதன் மூலம் நல்ல வட்டி வருமானம் கிடைப்பதோடு, வரி சேமிப்புக்கும் உதவும் மிகச் சிறந்த முதலீடு. அதிக வருமானம் கொடுக்கும் பாதுகாப்பான முதலீட்டை விரும்புவோர் பெரும்பாலும் தேர்தெடுப்பது இந்த திட்டம். இதற்கு மத்திய அரசின் உத்தரவாதம் உள்ளது. அதோடு, இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், இந்த முதலீடு E-E-E பிரிவில் உள்ளது. அதாவது, இதில் செய்யப்படும் முதலீடு, வட்டி மற்றும் முதிர்வுத் தொகை ஆகிய மூன்றும் முற்றிலும் வரி விலக்கு பெற்றவை. 

Add Zee News as a Preferred Source

PPF திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்தால் வரி விலக்கு உண்டு. ஆனால், நீங்கள் இந்த முதலீட்டை அதிகரித்து, இரட்டிப்பு வட்டியின் பலனையும் பெறலாம். அதோடு, ஓய்வின் போது கோடிகள் கையில் இருக்கும் வகையில், பணத்தை சேர்ப்பதும் எளிதாகி விடும். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாக இந்த பதிவில் புரிந்து கொள்வோம்.

PPF திட்டத்தில் முதலீட்டை இரட்டிப்பாக்குவதற்கான வழிமுறை 

பழைய வரி முறையைக் கோருபவர்கள் வருமான வரிப் பிரிவு 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரையிலான பிபிஎஃப் திட்ட முதலீடுகளுக்கு வரி விலக்கு பெறத் தகுதியுடையவர்கள். பொது வருங்கால வைப்பு நிதியில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.1.5 லட்சம். நீங்கள் வருடத்திற்கு 12 முறை பணத்தை டெபாசிட் செய்யலாம். ஆனால், திருமணமான முதலீட்டாளர்களுக்கு தங்களது முதலீட்டை இரட்டிப்பாக்கும் வசதி உள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையில் பெயரில் ஒரு PPF கணக்கை திறந்தால், ஒரு நிதியாண்டில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கலாம், மேலும் இரண்டு கணக்குகளுக்கும் வட்டியின் பலனைப் பெறலாம்.

PPF திட்டத்தில் முதலீடு செய்வதன் நன்மைகள் என்ன?

வாழ்க்கைத் துணையின் பெயரில் PPF கணக்கைத் திறப்பதன் மூலம், ஒரு முதலீட்டாளர் தனது மற்ற முதலீட்டு விருப்பங்களுக்குப் பதிலாக PPF அதிக அளவில் முதலீடு செய்யலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். திருமணம் ஆன நபர் தனது கணக்கில் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். அதே நேரத்தில், ஒரு நிதியாண்டில் இரண்டாவது கணக்காக தனது வாழ்க்கை துணையின் பெயரில் தொடங்கி ரூ.1.5 லட்சத்தை டெபாசிட் செய்யலாம். இந்த இரண்டு கணக்குகளுக்கும் தனித்தனியாக வட்டி வழங்கப்படும். அதே நேரத்தில், ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் PPF முதலீட்டு வரம்பு இரட்டிப்பாகி ரூ.3 லட்சமாக அதிகரிக்கும். E-E-E பிரிவின் கீழ் வருவதன் மூலம், முதலீட்டாளர் PPF வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரி விலக்கு அளிக்கும் பலனையும் பெறுவார்.

கிளப்பிங் விதிகள் மூலம் வரி விலக்கில் பாதிப்பு ஏதும் இருக்காது

வருமான வரிச் சட்டத்தின் 64வது பிரிவின் கீழ், நீங்கள் உங்கள் மனைவிக்கு வழங்கும் எந்தவொரு தொகை அல்லது பரிசும் உங்கள் வருமானத்தில் சேர்க்கப்படும். இருப்பினும், EEE காரணமாக முற்றிலும் வரி விலக்கு பெற்ற PPF விஷயத்தில், கிளப்பிங் விதிகள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.

வாழ்க்கை துணையில் பெயரில் கணக்கை திறப்பதால்  கோடிகளில் கார்பஸை எளிதில் உருவாக்கலாம் 

உங்கள் துணைவரின் PPF கணக்கு எதிர்காலத்தில் முதிர்ச்சியடையும் போது, ​​உங்கள் துணைவரின் PPF கணக்கில் உங்கள் ஆரம்ப முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருமானம் ஆண்டுதோறும் உங்கள் வருமானத்தில் சேர்க்கப்படும். எனவே, இந்த விருப்பம் திருமணமானவர்களுக்கு PPF கணக்கில் தங்கள் பங்களிப்பை இரட்டிப்பாக்க ஒரு வாய்ப்பையும் வழங்குகிறது. வாழ்க்கை துணையில் பெயரில் கணக்கை திறப்பதால்  கோடிகளில் கார்பஸை எளிதில் உருவாக்கலாம்.  2025  ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான PPF வட்டி விகிதம் 7.1 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | SIP Mutual Fund: ரூ.5000 முதலீட்டை... ரூ.6 கோடியாக பெருக்கும் 5x12x40 ஃபார்முலா

மேலும் படிக்க | EPFO claim செயல்முறையில் ஏப்ரல் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: முழு லிஸ்ட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News