கோடீஸ்வர கனவை நிறைவேற்றுவது எளிது தான்... இந்த டிப்ஸ் கை கொடுக்கும்

கோடீஸ்வர கனவு நிறைவேற, நல்ல முறையில் பணத்தை சேமிப்பதும், அதனை வருமானம் அதிகம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வதும் அவசியம். இதற்கு அன்றாட வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 8, 2025, 12:53 AM IST
  • தேவை மற்றும் ஆடம்பர செலவுக்கு இடையே உள்ள வேறுபாடு
  • கிரெடிட் கார்ட் பயன்பாடு.
  • சேமித்த பணத்தை சரியான இடத்தில், முதலீடு செய்வது மிக அவசியம்.
கோடீஸ்வர கனவை நிறைவேற்றுவது எளிது தான்... இந்த டிப்ஸ் கை கொடுக்கும்

வாழ்க்கையில் எல்லோருக்குமே, பொருளாதார ரீதியாக வலுவாக சிறப்பாக இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். கோடீஸ்வர கனவு நிறைவேற, நல்ல முறையில் பணத்தை சேமிப்பதும், அதனை வருமானம் அதிகம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வதும் அவசியம். இதற்கு அன்றாட வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களை அறிந்து கொள்ளலாம்

Add Zee News as a Preferred Source

வரவு செலவை கண்காணித்தல்

வரவுக்கு ஏற்ற செலவு இருந்தால், பொருளாதார நிலை நம் கற்றுக்கொள் இருக்கும். நமக்கு வரும் வருமானத்தில் ஒரு பங்கை கட்டாயம் சேமிக்க வேண்டும். அதுபோக இருக்கும் பணத்தை மட்டுமே செலவழிக்க வேண்டும். இதற்கு கட்டாய முதலீடாக வங்கி ஆர் டி கணக்குகளில் முதலீடு செய்யலாம். கொஞ்சம் பணத்தை, பரஸ்பர நிதியம் என்னும் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யலாம். இதனால் சேமித்த பணம், நல்ல வருமானத்தை கொடுத்து, பொருளாதார நிலை மேம்பட உதவும். அதோடு அவசர காலத்திற்கு கை கொடுக்கும். இதனால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையை தவிர்க்கலாம்.

தேவை மற்றும் ஆடம்பர செலவுக்கு இடையே உள்ள வேறுபாடு

பணம் கையில் தங்கவும், அது பன்மடங்காக பெருகவும் முதலில் தேவையான செலவு எது ஆடம்பர செலவு எது என்பதை வகைப்படுத்தி பார்க்க வேண்டும். பார்த்தவுடன் ஒரு பொருளை வாங்கும் எண்ணத்தை தவிர்க்க வேண்டும். நினைத்தவுடன் வாங்காமல், ஒரு வாரம் தள்ளிப் போட வேண்டும். அது இல்லாமல் நீங்கள் இருக்கலாம் என்பது மனதிற்கு புரியும். குறிப்பாக பல்பொருள் அங்காடிக்கு செல்லும் போது, அல்லது ஆன்லைன் ஷாப்பிங் என்பது நம்மை ஈர்த்து வலையில் சிக்க வைக்க பல சலுகைகளும் அறிவிக்கப்படலாம். அதில் சிக்காமல் தேவையான பொருட்களுக்கு மட்டுமே செலவு செய்தால், நிதி நெருக்கடியில் சிக்காமல் தப்பிக்கலாம்.

கிரெடிட் கார்ட் பயன்பாடு

கிரெடிட் கார்டு என்னும் கடன் அட்டையை பயன்படுத்துவது தவறில்லை. ஆனால் அதில் கட்டுப்பாடு மிக அவசியம். பிறகு தானே பணம் கட்ட வேண்டும் என்று நாம் தேவைக்கு அதிகமாக பொருள் வாங்கும் ஆபத்து இதில் உள்ளது. அதோடு ஏதேனும் ஒரு காரணத்திற்காக, காலக்கெடுவிற்குள் பணத்தை செலுத்த முடியாமல் போனால், அதற்கு விதிக்கப்படும் அபராதமும் வட்டியும் மிக அதிகமாக இருக்கும். நாம் செலவழித்ததை விட மிக அதிக அளவு பணம் கொடுக்க நேரிடலாம். எனவே எச்சரிக்கையாக இருப்பது மிக அவசியம்.

மாத பட்ஜெட்டை நிர்ணயித்தல்

ஒரு மாதத்திற்கு குடும்பத்திற்கு என்ன செலவு தேவை என்பதை கணக்கில் கொண்டு ஒரு பட்ஜெட் தயாரிப்பது நல்லது. குழந்தைகளின் படிப்பு செலவு, மின்சார கட்டணம், வழியில் உணவு உண்பதற்கான செலவு, டெலிபோன் கட்டணம் போன்றவற்றை கணக்கிட்டு அதற்கேற்ப நிதி ஒதுக்கலாம். அதோடு மின்சார கட்டணம் மொபைல் கட்டணம் போன்றவற்றை எந்த அளவிற்கு குறைக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மொபைல் போன் கட்டண திட்டத்தை தேர்ந்தெடுக்கும் போது, நமக்கு என்ன தேவையோ அதற்கு ஏற்றபடி ரீசார்ஜ் திட்டங்களை தேர்ந்தெடுப்பதால், நல்ல முறையில் பணத்தை சேமிக்கலாம்.

திட்டமிட்ட முதலீடுகள்

சேமித்த பணத்தை சரியான இடத்தில், முதலீடு செய்வது மிக மிக அவசியம். இதற்கு ஒரு நிதி ஆலோசகரின் அறிவுரையை கேட்கலாம். இன்றைய நாளில் சாமானியர்களுக்கான பல, முதலீட்டு திட்டங்கள் தினம் தினம் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதில் சிறந்த நிறுவனங்கள் அறிவிக்கும் திட்டங்களில் முதலீடு செய்து, அதிகபட்ச லாபத்தை பெற்று பணத்தை பெருக்கலாம்.

மேலும் படிக்க | புதிய 50 ரூபாய் நோட்டை வெளியிடும் RBI .. இனி பழைய 50 ரூபாய் நோட்டு செல்லுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News