Atal Pension Yojana: மாதா மாதம் ரூ.5000 ஓய்வூதியம் தரும் அட்டகாசமான அரசு திட்டம்

Atal Pension Yojana: மத்திய அரசு பல வித நலத்திட்டங்களை நடத்தி வருகின்றது. அடல் ஓய்வூதியத் திட்டம் அவற்றில் ஒரு பிரபலமான திட்டமாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 11, 2025, 04:55 PM IST
  • அடல் பென்ஷன் திட்டத்தில் சேர என்ன செய்ய வேண்டும்?
  • இதற்கு விண்ணப்பிப்பது எப்படி?
  • அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Atal Pension Yojana: மாதா மாதம் ரூ.5000 ஓய்வூதியம் தரும் அட்டகாசமான அரசு திட்டம்

Atal Pension Yojana: பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மக்களுக்காக மத்திய அரசு பல வித நலத்திட்டங்களை நடத்தி வருகின்றது. அடல் ஓய்வூதியத் திட்டம் அவற்றில் ஒரு பிரபலமான திட்டமாகும். அடல் ஓய்வூதியத் திட்டம் வருமான வரி வரம்பிற்குள் வராத இந்தியர்களுக்கானது. இந்தத் திட்டத்தின் கீழ் 60 வயது வரை பங்களித்து, வயதான காலத்தில் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற வழிவகை செய்யப்படுகின்றது. 

Add Zee News as a Preferred Source

Senior Citizens:மூத்த குடிமக்களுக்கான சிறந்த திட்டம்

அடல் பென்ஷன் திட்டத்தின் கீழ், ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெறலாம். பயனாளிக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பது அவரது பங்களிப்பைப் பொறுத்தது. 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட வரி செலுத்தாதவர்கள் (வரி வரம்பிற்குள் வராதவர்கள்) இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம். அடல் பென்ஷன் திட்டத்தில் சேர என்ன செய்ய வேண்டும்? இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Atal Pension Scheme: இப்படி விண்ணப்பிக்கவும்

ஆன்லைன் ஆஃப்லைன் என இரு வழிகளிலும் அடல் ஓய்வூதிய திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். 

- ஆஃப்லைனில் விண்ணப்பிக்க, வங்கிக்குச் சென்று படிவத்தை நிரப்ப வேண்டும். 

- நெட் பேங்கிங் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு, நெட் பேங்கிங்கில் லாக் இன் செய்து, APY என சர்ச் செய்ய வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் உங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு, படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆடோ டெபிட்டிற்கு ஒப்புதல் அளிப்பது நல்லது. இதன் மூலம், ஒவ்வொரு மாதமும் பிரீமியம் தானாகவே உங்கள் கணக்கிலிருந்து கழிக்கப்படும். படிவத்தில் நாமினி விவரங்களை வழங்க மறக்காதீர்கள்.

APY திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறை

- முதலில் https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

- இங்கிருந்து அடல் பென்ஷன் யோஜனா டேபுக்குச் சென்று APY பதிவு (APY Registration) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

- புதிய பதிவு படிவத்தை நிரப்பி Continue என்பதைக் கிளிக் செய்யவும்.

- படிவத்தை நிரப்பி, Complete Pending Registration என்பதில் முழுமையான விவரங்களை நிரப்பி KYC -ஐ செய்து முடிக்கவும்.

- இதற்குப் பிறகு Acknowledgement Number உருவாக்கப்படும்.

- 60 வயதிற்குப் பிறகு உங்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும்.

- தவணையை மாதாந்திரம், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் எவ்வாறு கழிக்க வேண்டும் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும்.

- இதற்குப் பிறகு, நாமினி படிவத்தை சரியாக நிரப்பவும்.

- செயல்முறையை முடித்த பிறகு, NSDL வலைத்தளத்தில் eSign டேபை அடைவீர்கள்.

- ஆதார் OTP சரிபார்க்கப்பட்ட பிறகு, நீங்கள் இந்தத் திட்டத்துடன் இணைக்கப்படுவீர்கள்.

Atal Pension Yojana: இந்த ஆவணங்கள் தேவைப்படும்

- பிறப்புச் சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை போன்ற வயதுச் சான்றுகள்.
- இந்திய குடியுரிமைச் சான்றிதழ்
- வங்கிக் கணக்கு எண் மற்றும் கிளை விவரங்கள்
- APY பதிவு படிவம்
- ஆதார் அட்டை

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: லெவல் 1 முதல் லெவல் 10 வரை... ஊழியர்களுக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? முழு விவரம் இதோ

மேலும் படிக்க | SWP: ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்க உதவும் பரஸ்பர நிதியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News