Mutual Fund SIP: மாதம் ரூ.2000 முதலீட்டில் ரூ.1.1 கோடி கார்பஸ்.... சாத்தியமாக்கும் பரஸ்பர நிதியம்

மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் வருங்காலத்திற்கு கணிசமான தொகையைச் சேகரிக்க உதவுகிறது. வாழ்க்கையின் பொறுப்புகள் மற்றும் தேவைகளை பூர்த்தி அதே வேளையில் கொஞ்சம் முதலீட்டிலும் கவனம் செலுத்தினால், கோடீஸ்வர கனவை எளிதில் நனவாக்கலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 27, 2025, 11:51 AM IST
  • ஆயிரங்களை கோடிகளாக்கும் மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடு.
  • கூட்டு வட்டி ஆதாயத்துடன் அதிகரிக்கும் ஆண்டு சராசரி வருமானம்.
  • ரூ.2000 SIP மூலம் உங்கள் கோடீஸ்வர கனவு நனவாகும்.
Mutual Fund SIP: மாதம் ரூ.2000 முதலீட்டில் ரூ.1.1 கோடி கார்பஸ்.... சாத்தியமாக்கும் பரஸ்பர நிதியம்

ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையை நிதி ரீதியாக சுதந்திரமாக அனுபவிக்க, சம்பாதிக்கும் காலகட்டத்தில் பணத்தை பன்மடங்காக்கும் முதலீடுகளில் திட்டமிட்டு முதலீடு செய்வது முக்கியம். அந்த வகையில், மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீடுகள் வருங்காலத்திற்கு கணிசமான தொகையைச் சேகரிக்க உதவுகிறது. வாழ்க்கையின் பொறுப்புகள் மற்றும் தேவைகளை பூர்த்தி அதே வேளையில் கொஞ்சம் முதலீட்டிலும் கவனம் செலுத்தினால், கோடீஸ்வர கனவை எளிதில் நனவாக்கலாம்.

Add Zee News as a Preferred Source

அதிகபட்ச லாபம் தரும் திட்டத்தில் முதலீடு செய்தால் பணம் பனம்டங்காகும்

அனைவருமே தனது வாழ்க்கையில் நல்ல பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள். இதற்கு, வருமானத்துடன் முதலீடு செய்வதும் மிகவும் முக்கியம். தனது மாத வருமானத்தில் ஒரு பகுதியை அதிகபட்ச லாபம் தரும் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். பணத்தை முதலீடு செய்வதற்கு பல விருப்பங்கள் உள்ளன. இந்த விருப்பங்களில் ஒன்று மியூச்சுவல் ஃபண்ட் SIP ஆகும். இதில் முதலீடு செய்வது மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது. மாதந்தோறும் சிறிது சிறிதாக மியூச்சுவல் ஃபண்ட் SIP-யில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல அளவு நிதியைச் சேகரிக்கலாம்.

ஆயிரங்களை கோடிகளாக்கும் மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடு

நீண்ட காலத்திற்கு மியூச்சுவல் ஃபண்ட் SIP-யில் தொடர்ந்து முதலீடு செய்தால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிதியையும் சேகரிக்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் SIP-யின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், நீங்கள் அதில் உங்கள் முதலீட்டை மாதத்திற்கு வெறும் 250 ரூபாயிலிருந்து தொடங்கலாம். அத்தகைய சூழ்நிலையில், குறைந்த வருமானம் உள்ளவர்கள் கூட மியூச்சுவல் ஃபண்ட் SIP-யில் எளிதாக முதலீடு செய்யலாம்.

கூட்டு வட்டி ஆதாயத்துடன் அதிகரிக்கும் ஆண்டு சராசரி வருமானம்

நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.2000 ஐ மியூச்சுவல் ஃபண்ட் SIP-யில் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து முதலீடு செய்தால், நீங்களும் கோடீஸ்வரராகலாம். சந்தையில் ஏற்ற இறக்கங்கள் உள்ள போதிலும், நீண்ட கால தொடர் முதலீட்டில், மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி 12 முதல் 15 சதவீதம் வரை சராசரி ஆண்டு வருமானத்தை அளிக்கிறது என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றன. மேலும் இதில் கூட்டு வட்டி வருமானத்தின் பலனால், முலதன ஆதாயம் மிக சிறப்பாக இருக்கும் அத்தகைய சூழ்நிலையில், அதில் முதலீடு செய்வதன் மூலம் ஆயிரங்களை எளிதில் கோடிகளாக்கலாம்.

ரூ.2000 SIP மூலம் உங்கள் கோடீஸ்வர கனவு நனவாகும்

SIP முறையில் மியூச்சுவல் பண்டு என்னும் மாதந்தோறும் ரூ.2000 முதலீடு செய்யுங்கள். பிறகு இத்தனை வருடங்களில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீர்கள் என்பது குறித்த கணக்கீட்டை அறிந்து கொள்ளலாம். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.2000 ஐ மியூச்சுவல் ஃபண்ட் SIP-யில் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து முதலீடு செய்தால், உங்களது கோடீஸ்வர கனவு நனவாகும். மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி 12 முதல் 15 சதவீதம் வரை வருமானத்தை அளிக்கிறது. நீங்கள் மாதந்தோறும் ரூ.2000 வீதம் SIP முறையில் 35 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்தால், நீங்கள் கோடீஸ்வரர் ஆவீர்கள்

மியூச்சுவல் ஃபண்ட் மூலம் மொத்தம் ரூ.1,10,21,662 கார்பஸ்

மியூச்சுவல் ஃபண்ட் SIP-யில் மாதந்தோறும் ரூ.2000 வீதம் 35 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம், மொத்தம் ரூ.8,40,000 முதலீடு செய்வீர்கள். நீங்கள் 12 சதவீத வருமானத்தைப் பெற்றாலும், உங்களுக்கு ரூ.1,01,81,662 லாபம் கிடைக்கும். இந்த வழியில், உங்களுக்கு மொத்தம் ரூ.1,10,21,662 கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | SIP Mutual Fund:15 ஆண்டுகளில் ரூ.2 கோடி சேர்க்க எவ்வளவு முதலீடு தேவை?

மேலும் படிக்க | பென்ஷன் இல்லாதவர்களுக்கு கை கொடுக்கும் PPF... வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.60,000 வரி இல்லா வருமானம்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News