அனைவருக்குமே கோடீஸ்வரராக வேண்டும் என்ற கனவு இருக்கும். மியூச்சுவல் ஃபண்டுகளில் SIP அதாவது முறையான முதலீட்டுத் திட்டம் மூலம், ஒவ்வொரு மாதமும் சிறிய தொகைகளை முதலீடு செய்வதன் மூலம் உங்கள் கனவை எளிதில் நனவாக்கலாம். நீண்ட கால முதலீடுகள் மூலம் கோடிகளில் நிதியை உருவாக்கலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்ட கால முதலீடு சராசரியாக 12 முதல் 15 சதவீத வருமானத்தை அளிக்கிறது. அதுவும் கூட்டு வட்டி வருமானம். அதாவது இந்த வருமானம் மற்ற திட்டங்களில் கிடைக்காத அளவாகும். SIP முதலீடு தொடங்க உங்களுக்கு அதிக பணம் தேவையில்லை. வெறும் 500 ரூபாயுடன் கூட இதைத் தொடங்கலாம். இதில் மாடம் வெறும் ரூ.5000 SIP முதலீடு மூலம் ரூ.1 கோடிக்கு மேல் நிதியை உருவாக்க முடியும். உங்கள் 25வது வயதில் SIP முதலீட்டைத் தொடங்கினால், 48வது வயதில் கோடீஸ்வரனாகலாம்.
ரூ.5000 SIP மூலம் ரூ.1 கோடி சம்பாதிப்பது எப்படி?
நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.5000 SIP முதலீடு செய்து, ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானத்தைப் பெற்றால், உங்கள் நிதி சுமார் 27 ஆண்டுகளில் ₹1.08 கோடியை எட்டும். இந்தக் கணக்கீடு கூட்டு வட்டி கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. மறுபுறம், மியூச்சுவல் ஃபண்டுகளில் உங்கள் சராசரி வருமானம் ஆண்டுக்கு 15% வரை இருந்தால், ரூ.1.03 கோடி நிதியை உருவாக்க உங்களுக்கு 23 ஆண்டுகள் மட்டுமே ஆகும். முதலீட்டு வல்லுநரெ ஆலோசனைப்படி, சிறந்த திட்டங்களில் முதலீடு செய்தால், விரைவில் கோடீஸ்வர கனவை நனவாக்கலாம்
சிறிய முதலீடு, பெரிய இலக்கு
SIP-யின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், சிறிய முதலீடுகளிலும் நீண்ட காலம் தொடரும் போது நீங்கள் பெரிய தொகையை சம்பாதிக்க முடியும். எனவே நீங்கள் இன்னும் முதலீடு செய்யத் தொடங்கவில்லை என்றால், விரைவில் அதைத் தொடங்குங்கள். காலப்போக்கில், கூட்டுத்தொகை வருமானம் என்னும் மந்திரம் உங்கள் பணத்தை பெருகச் செய்யும்.
டாப்-அப் SIP மூலம் முதலீட்டை பெருக்கும் உத்தி
நீங்கள் ரூ.5000 என்ற அளவில் SIP முதலீட்டைத் தொடங்கி, ஒவ்வொரு வருடமும் 10% என்ற அளவில் அதிகரிப்பதால், 21 ஆண்டுகளில் ரூ.1 கோடி கார்பஸை குவிக்கலாம். டாப்-அப் SIP என்பது உங்கள் வழக்கமான SIP முதலீட்டு தொகை, வருமானம் அதிகரிப்பதற்கு ஏற்ப அதிகரிக்கும் முறை. உதாரணத்திற்கு, நீங்கள் மாதாந்திர SIP ரூ.5,000 என்ற அளவில் தொடங்கிய நிலையில், அடுத்த ஆண்டில் அதன் 10 சதவீதம் அதாவது ரூ.500 என்ற அளவில் உயர்த்தினால், உங்கள் SIP முதலீடு ரூ.5,500 என்ற அளவில் அதிகரிக்கும். அதற்கு, அடுத்த ஆண்டு ரூ.5,500 தொகையின் 10%அதாவது ரூ.550 என்ற அளவில் அதிகரிக்க வேண்டும். மூன்றாவது ஆண்டின் தொடக்கத்தில், உங்கள் SIP ரூ.6,050 ஆக அதிகரிக்கும். இதேபோல், நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் SIP தொகையில் 10 சதவீகிதம் அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் 21 ஆண்டுகளில் மொத்தம் ரூ.38,40,150 முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு 12 சதவீத வருமானம் கிடைத்தால், இதற்கான வட்டி ரூ.70,22,858 ஆக இருக்கும். இதன் மூலம் 21 ஆண்டுகளில் உங்களுக்கு ரூ.1,08,63,008 கிடைக்கும்.
SIP தொடர்பான முக்கியமான விஷயங்கள்
SIP முதலீட்டில் தொடர் முதலீடு அவசியம். ஒவ்வொரு மாதமும் தவறாமல் முதலீடு செய்யுங்கள்.
நீண்ட கால முதலீடு மூலம் ஒரு பெரிய நிதி உருவாக்கப்படும்.
முதலீடு செய்வதற்கு முன் உங்கள் இலக்குகள் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனை புரிந்து கொள்ளுங்கள்.
நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









