பரஸ்பர நிதியம் என்னும் SIP முதலீடுகள் சாமான்யர்களுக்கு வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் பணம் காய்ச்சி மரமாக உள்ளது என்றால் மிகையில்லை. எனினும், பங்குச் சந்தையில் சரிவு ஏற்பாடுள்ளதால் பரஸ்பர நிதிய முதலீட்டாளர்களுக்கு சற்று குழப்பமும் பதற்றமும் உள்ளது. சந்தை வீழ்ச்சியால் SIP முதலீட்டை நிறுத்துவது அல்லது தொடங்காமல் இருப்பது தவறு என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
பரஸ்பர நிதியங்களில் செய்யப்படும் முதலீடுகள், பணமாக அல்லாமல் யூனிட்டாக ஒதுக்கப்படுவதால், சந்தை வலுவாக இல்லாத போது, நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு அதிக யூனிட்கள் ஒதுக்கப்பட்டு கூட்டு வட்டியின் சக்தியினால், அதிக வருமானம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். எனவே, முதலீட்டாளர்கள் சந்தை வீழ்ச்சியை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு நீண்ட காலத்திற்கு நல்ல ரிட்டனை பெற தங்கள் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என குறிப்பிடுகின்றனர்.
மியூச்சுவல் ஃபண்ட் என்னும் பரஸ்பர நிதியங்களில், முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) மூலம் தொடர்ந்து முதலீடு செய்வது எவ்வாறு பெரிய தொகையைச் சேர்க்க உதவும். அந்த வகையில் கோடிகளில் பணம் இருந்தால், வயதான காலத்தில் லட்சங்களில் வருமானம் பெற உதவியாக இருக்கும்
ரூ.5 கோடி கார்பஸை உருவாக்க செய்ய வேண்டியவை
ஸ்மார்ட் எஸ்ஐபி முதலீடு மூலம் பணத்தை பனமடங்காக்கலாம். எஸ்ஐபியின் டாப் அப் ஃபார்முலாவை கடை பிடித்து முதலீடு செய்வதன் மூலம் ரூ.5 கோடி கார்பஸை உருவாக்கலாம். இந்த ஃபார்முலாவில், ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய தொடங்கிய நிலையில், ஒவ்வொரு ஆண்டும் வருமானம் அதிகரிக்கும் போது, மாத SIP தொகையை 5% அதிகரிக்க வேண்டும்.
கூட்டு வட்டி வருமானத்தின் உண்மையான சக்தி
டாப் அப் எஸ்ஐபி மூலம், ஓய்வு காலத்திற்கு, கூட்டுத்தொகையின் உதவியுடன் ஒரு பெரிய கார்பஸ் சேர்க்கலாம். நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் போது கூட்டு வட்டி வருமானத்தின் உண்மையான சக்தி உங்களுக்கு தெரியவரும். இது மட்டுமின்றி, ஓய்வு பெற்ற பிறகு, 5 கோடி ரூபாய் இருக்கும் போது, அதை முறையான வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்து, மாதம் ₹2 லட்சத்து 60 ஆயிரத்தை ஓய்வூதியம் போன்ற வருமானத்தை பெறலாம். SIP தொடர்பான இந்த சூத்திரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்வோம்
இளமையில் முதலீட்டை தொடங்குதல்
ஓய்வூதியத்தை கருத்தில் கொண்டு நிதியை சேர்க்க, கூட்டுத்தொகையின் முழுப் பலனையும் உங்களுக்கு வழங்குகிறது. 25 வயதில் SIP முதலீட்டை தொடங்குவதன் மூலம், ஒரு பெரிய கார்பஸை விரைவாக உருவாக்க முடியும். முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம், 55 வயதிலேயே 5 கோடி ரூபாயை நீங்கள் சேகரிக்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் SIP தொகையை 5% அதிகரிக்கவும்
உதாரணத்திற்கு மாதம் ரூ.1000 என்ற அளவில் முதலீட்டை தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் SIP தொகையை 5% அதிகரிக்கவும். இதன் மூலம், முதலீட்டுத் தொகை படிப்படியாக அதிகரித்து, கூட்டு வட்டி வருமானத்தின் பலனால், 55 வயதிற்குள் ரூ.5 கோடி கார்பஸ் உருவாகும், உதாரணமாக, 1000 ரூபாய்க்கான SIP முதலீட்டு தொகையை ஒவ்வொரு ஆண்டும் 5% அதிகரித்து 11% வருமானம் கிடைத்தால் கூட, 30 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் மொத்த கார்ப்பஸ் ரூ.5.20 கோடியாக பெருகி இருக்கும்.
ஓய்வுக்குப் பிந்தைய மாத வருமானம்
ஓய்வு பெற்ற பிறகு, நீங்கள் ரூ. 5.20 கோடியில் 6% FD வட்டி கிடைத்தால் கூட ஆண்டுக்கு ரூ.31.20 லட்சத்தைப் பெறலாம், இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மாத வருமானம் கிடைக்கும்.
மேலும் படிக்க | UPS: உத்திரவாத ஓய்வூதியம் தரும் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம்... கணக்கிடப்படும் முறை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









