SWP: ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்க உதவும் பரஸ்பர நிதியம்

Retirement Planning: அனைவரும் ஓய்வு பெற்ற பிறகு வசதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். அந்த வசதியை அடைவதற்கு பொருளாதார சுதந்திரம் அவசியம். ஓய்வுபெறும் போது, ​​உங்களின் செலவுகளைச் சமாளிக்க உங்களிடம் வருமான ஆதாரம்  இருக்க வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 11, 2025, 03:30 PM IST
  • பரஸ்பர நிதிகளில் SWP எவ்வாறு செயல்படுகிறது?
  • முதலீட்டு திட்டத்தை மதிப்பாய்வு செய்தல்.
  • பங்குச் சந்தை தொடர்பான மற்றும் சந்தை அல்லாத முதலீடுகள்
SWP: ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்க உதவும் பரஸ்பர நிதியம்

Retirement Planning: அனைவரும் ஓய்வு பெற்ற பிறகு வசதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். அந்த வசதியை அடைவதற்கு பொருளாதார சுதந்திரம் அவசியம். ஓய்வுபெறும் போது, ​​உங்களின் செலவுகளைச் சமாளிக்க உங்களிடம் வருமான ஆதாரம்  இருக்க வேண்டும். அதற்கு ஆரம்ப கட்டத்தில் முதலீடு செய்திருக்க வேண்டும். ஓய்வுக்குப் பிறகு உங்கள் வாழ்க்கை முறை மற்றும் நிதி இலக்குகளின் அடிப்படையில் உங்கள் ஓய்வூதிய நிதியைத் திட்டமிடலாம். 

Add Zee News as a Preferred Source

நல்ல வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு

ஓய்வூதிய நிதியை உருவாக்க நீங்கள் நல்ல வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்யலாம். வேலை செய்பவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்வது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். நீங்கள் விரும்பினால் முதலீட்டை மொத்த முதலீடாகவும் செய்யலாம். உங்களிடம் கூடுதல் பணம் இருக்கும் போதெல்லாம் இதைச் செய்யலாம். 

பங்குச் சந்தை தொடர்பான மற்றும் சந்தை அல்லாத முதலீடுகள்

ஓய்வு என்பது ஒரு நீண்ட கால திட்டமிடல், எனவே இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஓய்வூதிய இலக்குகளை சரியான நேரத்தில் அல்லது அதற்கு முன் எட்டுதல் மற்றும் முதலீட்டு உத்தியை சரியாக தீர்மானித்தல். உங்களின் ஓய்வு காலத்திற்கான நிதியை பங்குச் சந்தை தொடர்பான திட்டங்களில் மட்டும் முதலீடு செய்வது சரியல்ல.  பங்குச் சந்தை தொடர்பான முதலீடுகள் எந்த நேரத்திலும் ஏறி இறங்கலாம். எனவே, உங்களிடம் சந்தை தொடர்பான மற்றும் சந்தை அல்லாத முதலீடுகள் இரண்டும் இருக்க வேண்டும்.

முதலீட்டு திட்டத்தை மதிப்பாய்வு செய்தல்

வரி விதிகள் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும், மேலும் இது உங்கள் ஓய்வூதிய நிதியையும் பாதிக்கலாம். எனவே, மாறிவரும் விதிமுறைகளுக்கு ஏற்ப உங்கள் திட்டத்தை வைத்துக்கொள்ள சில வருடங்களுக்கு ஒருமுறை உங்கள்  முதலீட்டு திட்டத்தை மதிப்பாய்வு செய்வது அவசியம். மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற பங்குச் சந்தை தொடர்பான திட்டங்களில் ஒரே நேரத்தில் முதலீடு செய்வது நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய விரும்புவோருக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இதற்குக் காரணம், பங்குச் சந்தை எந்த நேரத்திலும் வீழ்ச்சியடையலாம், இதன் காரணமாக உங்கள் வருமானம் எதிர்மறையாக மாறலாம். ஆனால், நீண்ட கால நோக்கில், பங்குச் சந்தையில் இருந்து நேர்மறையான வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பரஸ்பர நிதிகளில் SWP திட்டம் செயல்படும் முறை

பரஸ்பர நிதிகளில் SWP எவ்வாறு செயல்படுகிறது . ஒரு முதலீட்டாளர் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ஒரே நேரத்தில் ஒரு பெரிய தொகையை முதலீடு செய்து, ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையைத் திரும்ப பெறலாம். முதலீட்டாளர் கோரும் தொகைக்கு இணையான நிகர சொத்து மதிப்பு (NAV) யூனிட்களை விற்று அந்தத் தொகையை அவரது கணக்கில் டெபாசிட் செய்கின்றனர்.

மேலும் படிக்க | குஷியில் அரசு ஊழியர்கள், ஏப்ரல் 1 முதல் UPS: 50% ஓய்வூதியத்துடன் இதுவும் கிடைக்கும்

பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள்

SWP திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு முறையும் ஃபண்ட் ஹவுஸ் NAV ஐ விற்கும்போது, நீங்கள் திரும்ப பெற்ற பணம் போக முதலீட்டில் உள்ள ​​​​நிதி வளர்ந்து கொண்டே செல்கிறது. மேலும், ஒரே நேரத்தில் பணம் திரும்பப் பெறப்படாததால், சந்தை ஏற்ற இறக்கங்களால் நிதியின் செயல்திறன் பாதிக்கப்படாமல் இருக்கும். 

சுமார் 1 லட்சம் ரூபாய் மாத வருமானம்

பரஸ்பர நிதியத்தில் மொத்தமாக 6,00,000 ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில், 30 ஆண்டுகளில் எப்படி வளரும் என்பதை அறியலாம். பிறகு, அவர்கள் 30 ஆண்டுகளுக்கு சுமார் 1 லட்சம் ரூபாய் மாத வருமானம் எப்படி கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். ஆம், மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ரூ.6,00,000 முதலீடு செய்துள்ள நிலையில், 30 ஆண்டுகளுக்கு 12 சதவீதம் ஆண்டு வருமானம் கிடைத்தால், 30 ஆண்டுகளில் இந்த முதலீட்டின் மதிப்பிடப்பட்ட நிதி ரூ.1,79,75,954 ஆகும். இதில் சுமார் ரூ.1,73,75,954 லாபம் கிடைக்கும்.

நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கான வரி

தற்போதைய வரி விதிகளின்படி, நீண்ட கால மூலதன ஆதாயத்தில் (LTCG) ரூ.1,25,000 வரி விலக்கு உள்ளது. அதன் பிறகு, 12.5 சதவீதம் எல்டிஜிசி வரி செலுத்த வேண்டும். இந்த நிபந்தனைகளை மனதில் வைத்து, இந்த வருமானத்தின் மொத்த வரி ரூ.21,56,369.125 ஆக இருக்கும். வரி கழித்த பிறகு, இந்தப் பணம் ரூ.1,58,19,583.875 ஆக இருக்கும்.

SWP முதலீட்டிற்கான வருட வருமானம்

SWP முதலீட்டிற்கு, 30 ஆண்டுகளுக்கு 7 சதவீத வருடாந்திர வருமானத்தை எதிர்பார்க்கலாம். முதலீட்டுத் தொகை ரூ.1,58,19,583.875 ஆக இருக்கும். 30 வருடங்கள் தொடர்ந்து மாதம் ரூ.1,04,500 எடுத்தால் கூட, மீதமுள்ள பணம் ரூ.1,68,969 ஆக இருக்கும். 30 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.3,76,20,000 ஆக இருக்கும்.

பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | உங்கள் NPS கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது... ஆன்லைனில் அறியும் எளிய வழிமுறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News