Retirement Planning: ஓய்வு காலத்திற்கான திட்டமிடலையும் முதலீட்டையும் சரியான நேரத்தில் தொடங்குவது நல்லது. இளம் வயதிலிருந்தே கவனமாக திட்டமிடத் தொடங்கினால், ஓய்வு பெற 55 வயது அல்லது 58 வயது என காத்திருக்க வேண்டியதில்லை. 50 வயதில் கூட ஓய்வு பெறும் அளவிற்கு நிதி சுதந்திரத்தைப் பெறுவதில் வெற்றி பெறலாம். இன்று இந்திய இளைஞர்கள் இந்த திசையில் வேகமாகச் சிந்திக்கிறார்கள். முதுமையில் சிறந்த வருமானம் பெற நிதி திட்டமிடல் பற்றிய விழிப்புணர்வு இதற்கு உதவுகிறது.
30 வயதிற்குள் கூட ரூ. 15 லட்சம் நிதியை முதலீடு செய்வதில் நீங்கள் வெற்றி பெற்றால், அடுத்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு வேலையிலிருந்து ஓய்வு எடுக்கலாம். 30 வயதில் செய்யப்படும் ரூ.15 லட்சம் முதலீடு, 50 வயதில் ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் வருமானத்தைப் பெற உதவும். அதன் பிறகு, நீங்கள் வேலை செய்ய விரும்பினால், தொடரலாம். இல்லையெனில் நீங்கள் வேலையிலிருந்து ஓய்வு எடுத்து உங்கள் விருப்பப்படி வேறு ஏதாவது செய்யலாம். நிதி ரீதியான வலுவான நிலை, உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழும் வாய்ப்பைக் கொடுக்கும்
மியூச்சுவல் ஃபண்டின் SWP திட்டம் வழக்கமான வருமானம் பெற கை கொடுக்கும்
மியூச்சுவல் ஃபண்டில் உள்ள சிஸ்டமேடிக் வித்ட்ராவல் பிளான் (SWP) விருப்பம் நிதி சுதந்திரத்தை அடைய உங்களுக்கு உதவும். சிஸ்டமேடிக் வித்ட்ராவல் பிளானை (SWP முதலீடு) ஏற்றுக்கொள்வதற்கு முன், நீங்கள் முதலில் அதில் முதலீடு செய்வதற்கு ஒரு பெரிய நிதியைத் உருவாக்க வேண்டும். இங்கே, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டின் சிறந்த வருமானம் தரும் திட்டங்கள் உதவும்.
நீண்ட காலத்திற்கு 12 முதல் 15 சதவீதம் வருடாந்திர வருமானம்
முதலீட்டிற்கு நீங்கள் மொத்த தொகை அல்லது SIP விருப்பத்தை நாடலாம். நீண்ட காலத்திற்கு 12 முதல் 15 சதவீதம் வருடாந்திர வருமானத்தை அளித்த மியூச்சுவல் ஃபண்டின் பல திட்டங்கள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் 29வது வயதில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்து, 20 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 12 சதவீதம் மதிப்பிடப்பட்ட வருமானத்தை பெற்றால் கூட, 21 ஆண்டுகளில், அதாவது உங்களது 50வது வயதில் சுமார் ரூ.1,62,00,000 உங்களிடம் இருக்கும்
உங்கள் 60வது வயதில் ரூ.4 கோடி என்ற அளவில் கார்பஸ்
அதனை மேலும் 10 ஆண்டுகளுக்கு எடுக்காமல் இருந்தால், உங்கள் 60வது வயதில் ரூ.4,49,39,883 என்ற அளவில் கார்பஸ் இருக்கும். இதற்கு பிறகு, இதில் இருந்து ரூ.4 கோடியை எடுத்து மாதம் நீங்கள் ஒரு லட்சம் வருமானம் கிடைக்கும் வகையில் SWP திட்டத்தில் முதலீடு செய்தால், அதில் மிக குறைந்த பட்சமாக 8% வருமானம் கிடைக்கும் என வைத்துக் கொண்டால் கூட, அடுத்த 30 ஆண்டுகளுக்கு, அதாவது உங்களது 90வது வயது வரை மாதம் ரூ.1 லட்சம் எடுத்த பிறகு கூட, சுமார் 25 கோடி இருக்கும்.
SWP கால்குலேட்டர்
மொத்த முதலீடு: ரூ.4,00,00,000
மதிப்பிடப்பட்ட வருமானம்: ஆண்டுக்கு 8%
மாதத்திற்கு திரும்பப் பெறும் தொகை: ரூ.1 லட்சம்
30 ஆண்டுகளில் திரும்பப் பெறும் தொகை: ரூ.3,60,00,000
20 ஆண்டுகளுக்குப் பிறகு இருப்பு: ரூ.26,16,51,217
பணத்தை முறையாக திரும்பப் பெறும் திட்டம் என்றால் என்ன?
SWP அல்லது பணத்தை முறையாகத் திரும்பப் பெறும் திட்டம் என்பது உங்கள் முதலீடுகளிலிருந்து பணத்தை எடுப்பதற்கான ஒரு ஒழுக்கமான வழியாகும். மாதத்தின் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு நிலையான தொகையை டெபிட் செய்ய உங்கள் மியூச்சுவல் ஃபண்டிற்கு அறிவுறுத்த வேண்டும், இதன் மூலம் பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். திரும்பப் பெற்ற பிறகு, மீதமுள்ள நிதிகள் முதலீடு மூலம் வருமானம் பெருகிக் கொண்டே இருக்கும். எனவே கூட்டு வட்டி வருமானத்தின் பலனை நீங்கள் தொடர்ந்து பெறுவீர்கள்.
பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க | 20% அதிகமான ரிட்டர்ன் கொடுத்த சிறந்த 4 குழந்தைகள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ