SIP முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். SIP என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டமாகும். இதன் மூலம் பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால் சந்தையுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், ஆபத்து குறைவாகக் கருதப்படுகிறது, மேலும் பங்குகளில் நேரடியாக பணத்தை முதலீடு செய்வதை விட வருமானம் மிகவும் நன்றாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சராசரியாக 12 சதவீத வருமானம்
மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்ட கால முதலீடு சராசரியாக 12 சதவீத வருமானத்தை அளிக்கிறது. அதுவும் கூட்டு வட்டி போன்ற வருமானம். இது மற்ற திட்டங்களில் கிடைக்காத அளவாகும். SIP முதலீடு தொடங்க உங்களுக்கு அதிக பணம் தேவையில்லை. வெறும் 500 ரூபாயுடன் இதைத் தொடங்கலாம்.
கோடீஸ்வர கனவை நனவாக்க உதவும் SIP முதலீடு
SIP முதலீடு செய்ய இரண்டு வழிகள் உள்ளன. முதலாவதாக, ஒவ்வொரு மாதமும் ஒரே அளவில் தவணையைச் செலுத்துவதன் மூலம் நீங்கள் ஒரு சாதாரண SIP முதலீட்டை தொடரலாம். மற்றொரு வழி, நீங்கள் அவ்வப்போது, உங்கள் வருமானம் அதிகரிக்கும் போதெல்லாம் அதிகரித்து கொள்ளலாம். இதன் காரணமாக SIP முதலீட்டின் லாபம் மிக அதிகமாக அதிகரிக்கிறது. SIP மூலம் விரைவில் கோடீஸ்வர கனவை நனவாக்கலாம்
மாதம் ரூ.5,000 SIP முதலீட்டிற்கான கணக்கீடு
மாதம் ரூ.5000 என்ற வழக்கமான SIP முதலீட்டை 21 ஆண்டுகள் தொடர்ந்தால், 21 ஆண்டுகளில் மொத்தம் ரூ.12,60,000 முதலீடு செய்திருப்பீர்கள். அதில் 12 சதவீத வருமானத்தின்படி கணக்கிட்டால், உங்களுக்கு வட்டியாக ரூ.39,55,034 கிடைக்கும். இதன் மூலம், நீங்கள் 21 ஆண்டுகளில் மொத்தம் ரூ.52,15,034 பெறுவீர்கள்.
டாப்-அப் SIP செய்யும் அற்புதங்கள்
நீங்கள் ரூ.5000 SIP-ஐத் தொடங்கி, ஒவ்வொரு வருடமும் 10 சதவீதம் என்ற அளவில் அதிகரிப்பதால், 21 ஆண்டுகளில் ரூ.1 கோடி நிதியை எளிதாகக் குவிக்கலாம். டாப்-அப் SIP என்பது உங்கள் வழக்கமான SIP முதலீட்டில் சிறிது தொகையைச் சேர்த்து அதிகரிக்கக் கூடிய ஒரு வசதி. உதாரணமாக, நீங்கள் மாதாந்திர SIP ரூ.5,000- என்ற அளவில் தொடங்கி, ஒரு வருடம் கழித்து அதன் 10 சதவீதம் அதாவது ரூ.500 என்ற அளவில் உயர்த்தினால், உங்கள் SIP ரூ.5,500 இருக்கும். இதில், அடுத்த ஆண்டு ரூ.5,500 தொகையில்ன் 10 சதவீதம் அதாவது ரூ.550 என்ற அளவில் அதிகரிக்க வேண்டும். மூன்றாவது ஆண்டின் தொடக்கத்தில், உங்கள் SIP ரூ.6,050 ஆக இருக்கும். இதேபோல், நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் தற்போதைய SIP தொகையில் 10 சதவீதத்தை சேர்க்க வேண்டும்.
21 ஆண்டுகளில் ரூ.1,08,63,008 கார்பஸ்
நீங்கள் ரூ.5,000 உடன் ஒரு SIP-ஐத் தொடங்கி, ஆண்டுதோறும் 10% டாப்-அப்பைச் சேர்த்தால், 21 ஆண்டுகளில் மொத்தம் ரூ.38,40,150 முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு 12 சதவீத வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டால், இதற்கான வட்டி ரூ.70,22,858 ஆக இருக்கும். இதன் மூலம் 21 ஆண்டுகளில் உங்களுக்கு ரூ.1,08,63,008 கிடைக்கும். அதாவது, உங்கள் 24வது வயதில் ரூ.5,000 வழக்கமான SIP தொடங்கி, ஆண்டு தோறூம் 10 சதவீதம் அதிகரித்து வந்தால், உங்கள் 45வது வயதில் உங்களிடம் ரூ.1.08 கோடி இருக்கும்.
மேலும் படிக்க | SWP: ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்க உதவும் பரஸ்பர நிதியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









