Top-Up SIP: மாதம் ரூ.3,000 முதலீட்டை ரூ.10 கோடியாக மாற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

மியூச்சுவல் ஃபண்ட் SIP: சிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைப் பற்றி யாருக்குத் தான் தெரியாது. முதலீட்டை பற்றி குறிப்பிடுகையில் அவர் கூட்டு வட்டியை, எட்டாவது அதிசயம் என்று விவரித்தார். SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது பல சந்தர்ப்பங்களில் இந்தக் கூற்றை உண்மையாக நிரூபித்துள்ளது.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 28, 2025, 12:35 PM IST
  • Top Up SIP ரூ.3,000 என்ற அளவில் தொடங்கினால், 60வது வயதில் கையில் ரூ.10.5 கோடி இருக்கும்.
  • மியூச்சுவல் ஃபண்டு முதலீடு செய்வதற்கு பின்பற்ற வேண்டிய சூத்திரம்
  • SIP தொகையை 10% அதிகரித்தால் ரூ.3.5 கோடி நிதியை உருவாக்கலாம்
Top-Up SIP: மாதம் ரூ.3,000 முதலீட்டை ரூ.10 கோடியாக மாற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

மியூச்சுவல் ஃபண்ட் SIP: சிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைப் பற்றி யாருக்குத் தான் தெரியாது. அவர் மக்களுக்கு ஆற்றலைப் பற்றி எளிய வார்த்தைகளில் கூறினார். முதலீட்டை பற்றி குறிப்பிடுகையில் அவர் கூட்டு வட்டியை, எட்டாவது அதிசயம் என்று விவரித்தார். கூட்டு வட்டி குறித்த அவரது கருத்துக்கள் இன்றும் பொருந்தும். ஒரு முதலீட்டாளர் சிறிய அளவில் முதலீடு செய்தால் கூட, நீண்ட கால முதலீட்டில், அவருக்கு மகத்தான செல்வம் சேரும் என்று ஐன்ஸ்டீன் கூறியிருந்தார். SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது பல சந்தர்ப்பங்களில் இந்தக் கூற்றை உண்மையாக நிரூபித்துள்ளது.

Add Zee News as a Preferred Source

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒருவர் மியூச்சுவல் ஃபண்டில் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்ய விரும்பினால், அவர் அந்தப் பணத்தை ஒரே நேரத்தில் முதலீடு செய்யலாம் அல்லது SIP மூலம் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறிய தவணைகளில் முதலீடு செய்யலாம். SIP முதலீட்டாளர்கள் மாதாந்திர அடிப்படையில் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்ய அனுமதிக்கிறது. மாதம் வெறும் 500 ரூபாயில் யார் வேண்டுமானாலும் SIP முதலீட்டைத் தொடங்கலாம்.

SIP என்றால் என்ன?

SIP என்பது சிறிய அளவில் முதலீடு செய்யக்கூடிய ஒரு முதலீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் ஒருவர் எளிதாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் வாராந்திர, மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் முதலீடு செய்யலாம். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப SIP தொகையை முடிவு செய்யலாம்.

SIP முதலீடு செய்வதற்கு பின்பற்ற வேண்டிய சூத்திரம்

நீங்கள் 20 வயதில் ரூ.10,000 மாத சம்பளத்தில் ஒரு வேலையைத் தொடங்கிய நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீட்டில், உங்கள் சம்பளத்தில் 10% அதாவது ரூ.1000 என்ற அளவில் மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீட்டை தொடங்கலாம். வெறும் 1000 ரூபாய்க்கான SIP உங்களை கோடீஸ்வரராக்கும்.

SIP தொகையை 10% அதிகரித்தால் ரூ.3.5 கோடி நிதியை உருவாக்கலாம்

நீங்கள் 20 வயதில் ரூ.10,000 மாத சம்பளத்துடன் உங்கள் வாழ்க்கையைத் தொடங்கி, உங்கள் வருமானத்தில் 10 சதவீதத்தை அதாவது ரூ.1,000 ஐ மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடு செய்து வரும் நிலையில், சராசரி வருமானமான 12 சதவீத ஆண்டு வருமானத்தைப் பெற்றால் கூட, 60 வயதில் ஓய்வு பெறும் வயதிற்குள் நீங்கள் ஒரு கோடீஸ்வரராகலாம். உங்கள் சம்பள உயர்வுக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் உங்கள் SIP தொகையை 10% அதிகரித்தால், 40 ஆண்டு தொடர் முதலீட்டின் மூலம் ஓய்வு பெறும் வயதிற்குள் ரூ.3.5 கோடி நிதியை உருவாக்கலாம்.

Top Up SIP ரூ.3,000 ஆக இருந்தால், 60வது வயதில் கையில் ரூ. 10.5 கோடி இருக்கும்

இருப்பினும், உங்கள் ஆரம்ப SIP ரூ.3,000 ஆக இருந்தால், அடுத்த 40 ஆண்டுகளுக்கு நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் SIP-யில் முதலீடு செய்தால். இது தவிர, நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் உங்கள் பங்களிப்பை 10% அதிகரித்தால், ஓய்வு பெறும் வயதில், உங்கள் நிதி சராசரியாக 12% வருமானத்தில் ரூ. 10.5 கோடியாக மாறும். இந்த வழியில், ஒவ்வொரு பைசாவையும் சிந்தித்து முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் ஒரு மில்லியனர் ஆகும் உங்கள் கனவை நிறைவேற்ற முடியும். உங்கள் பயணத்தில் கூட்டு வட்டி வருமானத்தின் பலன் முக்கிய பங்கு வகிக்கும்.

மேலும் படிக்க | Mutual Fund SIP: மாதம் ரூ.2000 முதலீட்டில் ரூ.1.1 கோடி கார்பஸ்.... சாத்தியமாக்கும் பரஸ்பர நிதியம்

மேலும் படிக்க | பென்ஷன் இல்லாதவர்களுக்கு கை கொடுக்கும் PPF... வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.60,000 வரி இல்லா வருமானம்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News