)
Mutual Fund Investment: வெறும் ரூ.10 லட்சம் முதலீட்டை, சில வருடங்களுக்குப் பிறகு ரூ.3 கோடியாக மாற்றும் ஆற்றல் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு உண்டு. இது தான் கூட்டு வட்டி வருமானத்தின் சக்தி. இது உங்கள் பணத்தை பண்மடங்காக பெருக்க வேலை செய்கிறது. கூட்டு வட்டி என்பது முதலில் மெதுவாக, பின்னர் மிக வேகமாக, பணத்தை பன்மடங்காக்கும். அதன் அதிகபட்ச பலனைப் பெற நீண்ட் அகால முதலீடு அவசியம். மியூச்சுவல் ஃபண்ட் என்னும் பரஸ்பர நிதிய முதலீடுகள் வருமானத்தை அள்ளிக் கொடுப்பதோடு, சாமானியர்களுக்கு சிறந்த முதலீடாகவும் உள்ளது.
கூட்டு வட்டி வருமானத்தின் சக்தி
கூட்டு வட்டி வருமானத்தின் சக்தியை ஒரு உதாரணம் மூலம் அறிந்து கொள்ளலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில் நீங்கள் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், அது முதல் ஆண்டில் ரூ.1.12 லட்சமாக வளரும். இரண்டாவது ஆண்டில், அதே தொகை ரூ.1.254 லட்சமாக வளரும். மூன்றாவது ஆண்டில், இது ரூ.1.404 லட்சமாக பெருகும். 10 ஆண்டுகளில் ரூ.3.1 லட்சமாகவும், 20 ஆண்டுகளில் 9.6 லட்சமாகவும், 30 ஆண்டுகளில் சுமார் ரூ.30 லட்சமாகவும் பெருகும். வெறும் ரூ.10 லட்சம் முதலீட்டை, சில வருடங்களுக்குப் பிறகு, ரூ.3 கோடியாக மாற்றும் ஆற்றல் கொண்டது.
சிறிய அளவிலான முதலீட்டில் மிக பெரிய கார்பஸ்
பரஸ்பர நிதிய முதலீட்டை 25 வயதில் ஒருவர் சிறிது சிறிதாக முதலீட்டை தொடங்கியுள்ளவர் 60 வயதில் எவ்வளவு கார்பஸ் பெறுவார் என்பதையும் மற்றொருவர் 35 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால், எவ்வலவு பண்ம கிடைக்கும் என்பதையும் உதாரணத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். முதல் நபர் 60 வயதிற்குள் ஒரு பெரிய நிதியை உருவாக்கியிருப்பார். இரண்டாவது நபர் அதிக பணத்தை முதலீடு செய்தாலும் கூட முதலாவது நபரை விட குறைவான கார்பஸ் தான் இருக்கும்.
ரூ.1 கோடி ரூ.10 கோடியாக பெருக எடுத்துக் கொள்ளும் கால அளவின் மூலம், நீண்ட கால முதலீட்டில் கூட்டு வட்டியின் அடிப்படையிலான மூலதன ஆதாயம் மிக சிறப்பாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
ரூ.1 கோடி முதலீடு ரூ.2 கோடியாக 6 ஆண்டு காலம் தேவைப்படும்
ஆனால், அந்த ரூ.2 கோடி, ரூ.3 கோடியாக பெருக 3.5 ஆண்டுகள் மட்டுமே தேவை
ரூ.3 கோடி, ரூ.4 கோடியாக பெருக, 2.5 ஆண்டுகள் மட்டுமே தேவை
அந்த ரூ.4 கோடி ரூ.5 கோடியாக பெருக, 2 ஆண்டுகள் மட்டுமே தேவை
அந்த ரூ.5 கோடி முதல் ரூ.6 கோடியாக பெருக, 1.5 ஆண்டுகள் மட்டுமே தேவை
அந்த ரூ.6 கோடி முதல் ரூ.7 கோடியாக பெருக, 1.4 ஆண்டுகள் மட்டுமே தேவை
இந்த முதலீடு ரூ.9 கோடி முதல் ரூ.10 கோடி வரை பெருக 6 மாதங்கள் மட்டுமே தேவை
பணத்தை முன்கூட்டியே திரும்பப் பெறுதல் மிகப்பெரிய தவறு
பலர், ஆரம்பத்தில் மெதுவான வருமானத்தைக் கண்டு, அதில் எந்த சிறப்பு நன்மையும் இல்லை என்று நினைத்து பணத்தை எடுக்கிறார்கள். இதுதான் மிகப்பெரிய தவறு. உண்மையான வருவாய் என்பது பிற்காலத்தில், உங்கள் பணம் தானாகவே பணம் பெருகும் போதுதான் நிகழ்கிறது. ஏனென்றால் இதில் நீங்கள் அசல் தொகையில் மட்டுமல்ல, அதன் மீது கிடைக்கும் வட்டியிலும் சம்பாதிக்கிறீர்கள்.
முதலீட்டில் அதிகபட்ச பலனைப் பெற என்ன செய்ய வேண்டும்?
சம்பாதிக்க ஆரம்பித்த உடனேயே கூடிய விரைவில் முதலீடு செய்யத் தொடங்குங்கள். சிறிது சிறிதாக தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். SIP-யில் பணத்தை முதலீடு செய்வது போல. இடையில் பணத்தை எடுக்காதீர்கள், மிக முக்கியமாக, பொறுமையைக் கடைப்பிடிக்கவும். எனவே ஒரு சிறிய முதலீடு மூலம் ஒரு பெரிய நிதியை உருவாக்க முடியும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ