உங்கள் NPS கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது... ஆன்லைனில் அறியும் எளிய வழிமுறை

NPS: என்பிஎஸ் என்னும் தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது ஓய்வூதியத்திற்கான நம்பகமான மற்றும் பாதுகாப்பான முதலீடாகும். இதில், செய்யப்பட்டும் முதலீடுகள் மூலம், ஓய்வூதிய நிதியை உருவாக்கி, ஓய்வு காலத்தில் பென்ஷன் பெறலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 11, 2025, 12:51 PM IST
  • தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS)என்பது ஓய்வூதியத்திற்கான நம்பகமான மற்றும் பாதுகாப்பான முதலீடாகும்.
  • NPS கணக்கில் உள்ள இருப்பை எளிதாக சரிபார்க்கலாம்.
  • ஓய்வூதிய நிதியை உருவாக்கி, ஓய்வு காலத்தில் பென்ஷன் பெறலாம்.
உங்கள் NPS கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது... ஆன்லைனில் அறியும் எளிய வழிமுறை

என்பிஎஸ் என்னும் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS)என்பது ஓய்வூதியத்திற்கான நம்பகமான மற்றும் பாதுகாப்பான முதலீடாகும். இதில், செய்யப்பட்டும் முதலீடுகள் மூலம், ஓய்வூதிய நிதியை உருவாக்கி, ஓய்வு காலத்தில் பென்ஷன் பெறலாம். அதோடு வரி விலக்கு போன்ற பல நன்மைகளையும் பெறலாம். NPS அறிக்கையைப் பதிவிறக்குவதன் மூலம் உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது, வட்டி எவ்வளவு கிடைத்துள்ளது என்பதை கண்காணிக்கலாம். 

Add Zee News as a Preferred Source

என்பிஎஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் ஓய்வுக்குப் பிறகு முதலீடு செய்யப்பட்ட தொகை மற்றும் அதில் பெறப்பட்ட வருமானத்தைப் பொறுத்து பணத்தை எடுக்கலாம். இது தவிர, NPS கணக்கில் உள்ள இருப்பை சரிபார்க்கலாம். இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் இதை எளிதாக அணுகலாம். இதன் மூலம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் சேமிப்பை நிர்வகிக்கலாம். தேவைக்கு ஏற்ப உங்கள் முதலீட்டு பணத்தை அதிகரிக்கலாம்.

NPS அறிக்கை என்றால் என்ன?

NPS அறிக்கை, பரிவர்த்தனை அறிக்கை (SOT) என்றும் அழைக்கப்படுகிறது, இது உங்கள் கணக்கு தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளையும் பதிவு செய்யும் ஆவணமாகும். இதில், முதலீடு விவரங்கள், கணக்கின் முழுமையான நிலை, பணம் திரும்பப் பெறுதல் பற்றிய தகவல், கணக்கு இருப்பு உள்ளிட்ட விபரங்கள் அனைத்தும் கிடைக்கும்

NPS அறிக்கையை பதிவிறக்குவது எப்படி?

NPS கணக்கு விபரங்கள் அடங்கிய அறிக்கையை ஆன்லைனில் பதிவிறக்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

1. NSDL என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

2. பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழைக.

3. கேப்ட்சா குறியீட்டை நிரப்பி, தொடர 'Proceed' என்பதைக் கிளிக் செய்யவும்.

4. Transaction Statement என்னும் பரிவர்த்தனை அறிக்கைக்குச் சென்று, Holding Statement என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

5. இதன் பின்னர் என்பிஎஸ் கணக்கில் உள்ள இருப்பு திரையில் தோன்றும். முழுமையான அறிக்கையைப் பதிவிறக்க, Transaction Statement என்னும் பரிவர்த்தனை அறிக்கையைத் தேர்ந்தெடுத்து Download என்னும் பதிவிறக்க பொத்தானை அழுத்தவும்.

மொபைல் செயலியில் இருந்து NPS அறிக்கையைப் பதிவிறக்குவதற்கான வழிமுறை

NPS அறிக்கையை மொபைல் செயலியிலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.

1. Google Play Store அல்லது Apple Store -லிருந்து NPS செயலியில் பதிவிறக்கவும்.

2. 12 இலக்க NPS பயனர் ஐடியை உள்ளிட்டு OTP மூலம் கடவுச்சொல்லை மீட்டமைக்கவும்.

3. உள்நுழைந்த பிறகு, அடுக்கு 1 மற்றும் அடுக்கு 2 கணக்குகளின் பரிவர்த்தனை அறிக்கையைப் பதிவிறக்குவதற்கான விருப்பத்தைப் பெறுவீர்கள்.

NPS அறிக்கை ஏன் அவசியம்?

1. கணக்கு பரிவர்த்தனைகள் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கின்றன.

2. வரி சேமிப்புக்கான முக்கியமான ஆவணம் இது.

3. முதலீடுகள் மற்றும் நிதி திட்டமிடல்களை கண்காணிக்க உதவுகிறது.

NPS அறக்கட்டளை, NPS அறிக்கை நகல் ஒவ்வொரு வருடமும் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்புகிறது மற்றும் மென் நகல் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பப்படுகிறது.

மேலும் படிக்க | SIP Mutual Fund: கோடீஸ்வர கனவை நனவாக்க... மாதம் ரூ.3000 முதலீடு போதும்... எளிய கணக்கீடு இதோ

மேலும் படிக்க | மத்திய அரசின் பரிசு, இனி 60 வயதுக்கு மேல் அனைவருக்கும் பென்ஷன்: புதிய ஓய்வூதியத் திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News