)
Central Government : மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை (Gratuity) விதிகளில் சில முக்கியமான மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. மத்திய சிவில் சேவைகளுக்கான (தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிக்கொடை) விதிகளை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை வெளியிட்டுள்ளது. புதிய விதிகளின்படி, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கும், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு வழங்குவது போன்றே, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பணிக்கொடை மற்றும் இறப்புக்குப் பின் வழங்கப்படும் பணிக்கொடை போன்ற பலன்கள் கணக்கிடப்படும்.
இருப்பினும், பணிக்கொடைக்கான வட்டி மற்றும் சேவைக்காலத்தைக் கணக்கிடுவது அந்தந்த தன்னாட்சி அமைப்புகளின் விதிகளையே பொறுத்தது. இந்த தகவலை மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாகத் தெரிவித்தார்.
குறைதீர்க்கும் கால அவகாசம் 21 நாட்களாக குறைப்பு
மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்குத் தீர்வு காணும் கால அளவு 30 நாட்களில் இருந்து 21 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், மாதந்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புகார் குறித்த புள்ளிவிவரங்கள் (01.11.2022 முதல் 26.05.2025 வரை):
தற்போது பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 42,62,459. தீர்க்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 42,73,289. நிலுவையில் உள்ள புகார்களின் எண்ணிக்கை (மே 26, 2025 நிலவரப்படி) 64,960. சராசரியாக தீர்வு காணப்பட்ட நாட்களின் எண்ணிக்கை 16 நாட்கள் ஆகும். மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த விவரங்களைத் தெரிவித்தார். மேலும், 2024 அக்டோபரில் நடந்த சிறப்பு முகாமில் 5.55 லட்சத்திற்கும் அதிகமான குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மின்னணு சேவை வழங்கலை மேம்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு
மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறை (DARPG), மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மின்னணு சேவைகளை மேம்படுத்த உதவும் வகையில், சேவை வழங்கல் உரிமை ஆணையர்களுடன் இணைந்து செயல்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, டார்ஜியாவால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் சண்டிகர், பஞ்சாப், உத்தராகண்ட், மேகாலயா, அசாம், மேற்கு வங்காளம், ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சேவை உரிமை ஆணையர்கள் கலந்துகொண்டனர்.
தேசிய நல்லாட்சி மையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தற்போது 22,000-க்கும் மேற்பட்ட மின்னணு சேவைகளை வழங்கி வருகின்றன. மேலும், பொதுமக்கள் குறைதீர்ப்புக்கான சிபிகிராம்ஸ் (CPGRAMS) தளத்தை மாநிலங்களின் வலைத்தளங்களுடன் இணைக்கும் பணி நிறைவடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பொதுமக்கள் அளிக்கும் புகார்களை நிகழ்நேரத்தில் கண்காணித்து தீர்க்க முடியும்.
ஜூலை 2025 -ல் 1.47 லட்சத்திற்கும் மேற்பட்ட குறைகளுக்குத் தீர்வு
மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை வெளியிட்ட மாதாந்திர அறிக்கையின்படி, ஜூலை 2025-ல் 1,47,902 பொதுமக்களின் குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் பெறப்பட்ட புதிய புகார்களின் எண்ணிக்கை 1,51,509 ஆகும். நிலுவையில் உள்ள புகார்களின் எண்ணிக்கை 67,118. சராசரியாக தீர்வு காண எடுத்துக்கொள்ளப்பட்ட நாட்கள் 15 ஆகும். இது தொடர்ச்சியாக 37-வது மாதமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் மாதாந்திர அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ