நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், வரி முறையை எளிமையாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற வருமான வரி விதிகளில் பல மாற்றங்களை அறிவித்தார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், வரி முறையை எளிமையாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற வருமான வரி விதிகளில் பல மாற்றங்களை அறிவித்தார். அவை ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வருகிறது. விதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து வருமான வரி செலுத்தும் அனைவரும் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும் 10 முக்கிய மாற்றங்கள்
பிரிவு 87A இன் கீழ் வருமான வரி விலக்கு
பழைய வரியில் எந்த மாற்றங்களும் அறிவிக்கப்படவில்லை. எனினும், புதிய வரி முறையின் கீழ் வருமான வரி அடுக்குகள் மற்றும் விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மிக முக்கியமாக பிரிவு 87A இன் கீழ் வருமான வரி விலக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வருமான வரி சட்டத்தின் 87A பிரிவின் கீழ் வழங்கு தள்ளுபடியை ரூ.25,000 லிருந்து ரூ.60,000 ஆக உயர்த்தியது. இந்த தள்ளுபடியின் மூலம் ரூ.12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டாம் என்பதை உறுதி செய்கிறது.
புதிய வருமான வரி அடுக்கு விபரம்
0 முதல் ரூ.4 லட்சம் வரை – இல்லை
ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை – 5%
ரூ.8,00,001 முதல் ரூ.12,00,000 – 10%
ரூ.12,00,001 முதல் ரூ.16,00,000 – 15%
ரூ.16,00,001 முதல் ரூ.20,00,000 – 20%
ரூ.20,00,001 முதல் ரூ.24,00,000 – 25%
ரூ.24,00,000 – 30%க்கு மேல்
புதுப்பிக்கப்பட்ட வரி வருமானத்திற்கான (ITR-U) காலக்கெடு அதிகரிப்பு
தற்போது புதுப்பிக்கப்பட்ட ITR படிவத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 12 மாதங்களிலிருந்து 48 மாதங்களாக அதாவது, 4 ஆண்டுகள் என்ற அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் காரணத்திற்காக வருமான வரி தாக்கல் செய்யத் தவறிவிட்டால் அல்லது அதில் உள்ள தவறுகளை திருத்த நினைத்தால், அதை இப்போது நான்கு ஆண்டுகள் வரை தாக்கல் செய்யலாம்.
TDS விதிகளில் மாற்றங்கள்
ஏப்ரல் 1, 2025 முதல், பல பிரிவுகளில் டிடிஎஸ் வரம்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது சிறிய அளவில் வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும். மூத்த குடிமக்களுக்கான வட்டி வருமானத்திற்கான டிடிஎஸ் வரம்பு ரூ.1 லட்சமாக அதிகரிக்கும்.
TCS விதிகளில் மாற்றங்கள்
ஏப்ரல் 1, 2025 முதல் டிசிஎஸ் விகிதங்களும் மாற்றப்பட்டுள்ளன. வெளிநாட்டு பயணம் மேற்கொள்பவர்கள், வெளிநாடுகளில் செய்யும் பிற பரிவர்த்தனைகள் மேற்கொள்பவர்கள் இந்த விதிகளை முக்கியமாக அறிந்திருக்க வேண்டும். முன்னதாக, வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புபவர்கள், ரூ.7 லட்சத்திற்கு மேல் தொகையை அனுப்புவதற்கு டிசிஎஸ் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் இப்போது இந்த வரம்பு ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ULIP பாலிஸிகள் மூலதன ஆதாயங்களாக வரி விதிக்கப்படும்
ULIP பாலிசியின் வருடாந்திர பிரீமியம் ரூ.2.5 லட்சத்திற்கும் அதிகமாகவோ அல்லது காப்பீட்டுத் தொகையில் 10% அதிகமாகவோ இருந்தால், அது மூலதன ஆதாயங்களாக கருதப்பட்டு வரி விதிக்கப்படும்.
IFSC மீதான வரி விலக்கு நீட்டிப்பு
சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தின் (IFSC) கீழ் வரி விலக்குக்கான காலக்கெடு மார்ச் 31, 2030 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடக்க நிறுவனங்களுக்கான வரி விலக்கு
ஏப்ரல் 1, 2030 வரை பதிவுசெய்யப்பட்ட தொடக்க நிறுவனங்கள், பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், 80-IAC பிரிவின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு 100% வரி விலக்கு பெறும்.
பிரிவுகள் 206AB மற்றும் 206CCA நீக்கம்
இணக்கத்தை எளிதாக்குவதற்காக பிரிவுகள் 206AB மற்றும் 206CCA முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. இப்போது வரி விலக்கு அளிப்பவர்கள் மற்றும் வசூலிப்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பெருமளவு குறையும்
கூட்டாளருக்கு வழங்கப்படும் சம்பளத்தில் புதிய வரம்பு
கூட்டாண்மை நிறுவனங்களில் கூட்டாளுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் அதிகபட்ச விலக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் இந்த வரி மாற்றங்கள் உங்கள் சேமிப்பு, முதலீடுகள் மற்றும் நிதித் திட்டங்களை பாதிக்கலாம். இந்த மாற்றங்களை மனதில் கொண்டு உங்கள் 2025-26 நிதியாண்டைத் திட்டமிட்டால், நீங்கள் வரிச் சுமையைக் குறைத்து நிதி நிலையை வலுப்படுத்தலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ