ஏப்ரல் 1 முதல் புதிய ஓய்வூதிய முறை: UPS... முக்கிய அம்சங்கள், சிறப்பு நன்மைகளின் விவரம் இதோ

Unified Pension Scheme: இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். NPS-ன் கீழ் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு UPS-ன் பலன் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 25, 2025, 12:22 PM IST
  • ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?
  • யுபிஎஸ் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?
  • யுபிஎஸ் திட்டத்தின் நன்மைகள் என்ன?
ஏப்ரல் 1 முதல் புதிய ஓய்வூதிய முறை: UPS... முக்கிய அம்சங்கள், சிறப்பு நன்மைகளின் விவரம் இதோ

Unified Pension Scheme Latest News: மத்திய அரசு சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ், மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) அறிமுகப்படுத்தியது. ஜனவரி 24, 2025 அன்று மத்திய அரசு இது குறித்த ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். NPS-ன் கீழ் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு UPS-ன் பலன் கிடைக்கும். 

Add Zee News as a Preferred Source

இந்த ஊழியர்களுக்கு NPS அல்லது UPS இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்யும் விருப்பம் வழங்கப்படும். தேசிய ஓய்வூதிய முறையை (National Pension System) திரும்பப் பெற்று, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வுதியதாரர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், இரு ஓய்வூதிய முறைகளிலும் உள்ள முக்கிய அம்சங்களை ஒன்றிணைத்து ஒருங்கிணைந்த ஓய்வூதிய முறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) என்பது மத்திய அரசு தனது அரசு ஊழியர்களுக்காகத் தொடங்கிய ஒரு புதிய ஓய்வூதியத் திட்டமாகும். இந்தத் திட்டம் NPS இன் கீழ் கிடைக்கிறது. அதாவது, ஏற்கனவே NPS இல் ஒரு பகுதியாக இருக்கும் ஊழியர்களும் இந்த UPS திட்டத்தின் பலனைப் பெறலாம். இந்தத் திட்டத்தின் நோக்கம், ஓய்வு பெற்ற பிறகு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதாகும். இது தவிர, மாநில அரசுகள் விரும்பினால், தங்கள் ஊழியர்களுக்கும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்றும் மத்திய அரசாங்கம் கூறியுள்ளது.

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்கள் UPS-இல் எவ்வளவு பணம் டெபாசிட் செய்ய வேண்டும்?

யுபிஎஸ் திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு இருவரும் சேர்ந்து பணத்தை டெபாசிட் செய்வார்கள். ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் (DA) 10 சதவீத தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். இந்தத் தொகையைச் சமமான தொகையை அரசாங்கமும் டெபாசிட் செய்யும். கூடுதலாக, அரசாங்கம் மொத்த நிதியில் 8.5 சதவீதத்தை கூடுதலாக டெபாசிட் செய்யும்.

யுபிஎஸ் திட்டத்தின் நன்மைகள் என்ன?

யுபிஎஸ் திட்டம், அரசு ஊழியர்களுக்கு முன்பு நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மிகவும் ஒத்திருப்பதால், அதிக நன்மைகளை அளிக்கும் என நம்ப்பப்படுகின்றது. ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் பல முக்கியமான நன்மைகள் கிடைக்கின்றன.

- ஊழியர் இறந்த பிறகு குடும்ப ஓய்வூதியம் (Family Pension): ஊழியர் இறந்தால், அவரது குடும்பத்தினருக்கு பணியாளரின் ஓய்வூதியத்தில் 60 சதவீத தொகை குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
- ஓய்வு பெறும் போது மொத்த தொகை (Lumpsum Amount): ஓய்வு பெற்ற பிறகு, பணிக்கொடையுடன் கூடுதலாக ஒரு மொத்த தொகையும் பணியாளர் பெறுவார்.
- குறைந்தபட்ச ஓய்வூதியம் (Minimum Pension): ஒரு ஊழியர் மத்திய அரசு நிறுவனத்தில் குறைந்தது 10 ஆண்டுகள் பணிபுரிந்தால், அவருக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.10,000 ஓய்வூதியமாக கிடைக்கும்.

யுபிஎஸ் திட்டத்தின் கீழ் ஓய்வூதிய செயல்முறை

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவதற்கு சில முக்கியமான விதிகள் உள்ளன:

- 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊழியர்களுக்கு முழு ஓய்வூதியம்: ஒரு ஊழியர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி இருந்தால், கடைசியாக பணிபுரிந்த 12 மாதங்களுக்கான சராசரி சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவார்.
- குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிவது கட்டாயம்: ஒரு ஊழியர் 25 ஆண்டுகளுக்கும் குறைவாகப் பணிபுரிந்தால், அவரது ஓய்வூதியம் அதற்கேற்ப நிர்ணயிக்கப்படும். குறைந்தது 10 ஆண்டுகளுக்கு பணிபுரிந்திருக்க வேண்டும்.

யுபிஎஸ் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

- யுபிஎஸ் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் செயல்படுத்தப்படும்.
- ஊழியர்கள் NPS அல்லது UPS இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்யும் விருப்பத்தைப் பெறுவார்கள்.
- இந்தத் திட்டத்தின் கீழ், அரசும் ஊழியர்களும் சமமாகப் பணத்தை டெபாசிட் செய்வார்கள்.
- 10 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் மாத ஓய்வூதியமாக ரூ.10,000 கிடைக்கும்.
- ஊழியர் இறந்த பிறகு, அவரது குடும்பத்திற்கு 60 சதவீத குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும்.
- ஓய்வு பெறும் போது மொத்த தொகையுடன் பணிக்கொடையும் வழங்கப்படும்.
- ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) அரசு ஊழியர்களுக்கு, குறிப்பாக நீண்ட காலமாக அரசாங்கத்தில் பணியாற்றி வருபவர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும். 
- இந்தத் திட்டம் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவும்.
- ஓய்வுக்குப் பிறகு நிதி உதவியையும் இது வழங்கும்.

மேலும் படிக்க | ஓய்வூதிய உயர்வு, வட்டி விகிதம்... விரைவில் EPFO 4 மெகா அறிவிப்புகள்: 3 நாட்களில் முக்கிய சந்திப்பு

மேலும் படிக்க | வங்கிகளில் நகை அடகு வைக்க புதிய கட்டுப்பாடு! விதிகள் மாற்றத்தால் மக்கள் அவதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News