)
Unified Pension Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டமான 'ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்' (UPS) ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வருகிறது. நீண்ட காலமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் செயல்படுத்தக் கோரி வரும் ஊழியர்களின் தேவையை மனதில் கொண்டு, தேசிய ஓய்வூதியத் முறைக்கு (NPS) பதிலாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஊழியர்கள் தாங்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவார்கள்.
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தின் சில அம்சங்களோடு தொடங்கப்பட்ட யுபிஎஸ்
பழைய ஓய்வூதியத் திட்ட (OPS) சலுகைகளை மீட்டெடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதிய அமைப்பு ஆகிய இரண்டிலும் உள்ள முக்கிய அம்சங்களை சேர்த்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தில், மத்திய ஆரசு ஊழியர்கள் தங்கள் கடைசி சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெற்று வந்தனர். இப்போது அதே சலுகை UPS இன் கீழ் வழங்கப்படும்.
அரசாங்க பங்களிப்பு
இந்தத் திட்டத்தில், ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் (DA) 10 சதவீதத்தை பங்களிக்க வேண்டும். இதனுடன் அரசாங்கம் 14 சதவீதத்தை பங்களிக்கும். இது தவிர, யுபிஎஸ்ஸுக்கு ஒரு தனி இருப்பு நிதி இருக்கும். இதில் அரசாங்கம் கூடுதலாக 8.5 சதவீதத்தை பங்களிக்கும். இந்த வகையில், மத்திய அரசு ஊழியர்கள் தாங்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவார்கள்.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கான நன்மைகள்
- 10 முதல் 25 ஆண்டுகள் சேவை: இந்தக் கால அளவிற்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு விகிதாசார ஓய்வூதியம் கிடைக்கும்.
- ஊழியரின் மறைவு: ஒரு ஊழியர் பணியின் போது இறந்தால், அவரது குடும்பத்தினருக்கு அவரது ஓய்வூதியத்தில் 60 சதவீதம் கிடைக்கும்.
- முதியோர் ஓய்வூதியம்: ஓய்வு பெறும்போது, ஊழியர்கள் மொத்தத் தொகையுடன் பணிக்கொடையையும் பெறுவார்கள்.
- குறைந்தபட்ச ஓய்வூதியம்: குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.10,000 ஓய்வூதியம் கிடைக்கும்.
Pensioners: முன்பு ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கும் சலுகைகள் கிடைக்கும்
இந்தத் திட்டத்தின் கீழ், யுபிஎஸ் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு ஓய்வு பெற்ற ஊழியர்களும் சலுகைகளைப் பெறுவார்கள். கடந்த காலங்களுக்கான ஓய்வூதிய நிலுவைத் தொகையும் அவர்களுக்கு வழங்கப்படும். இது பொது வருங்கால வைப்பு நிதியத்தின் (PPF) வட்டி விகிதங்களின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
இவற்றின் மூலம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமான யுபிஎஸ் மத்திய அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான ஓய்வூதியத் திட்டத்தை உறுதி செய்யும். இது அவர்களின் ஓய்வுக்குப் பிறகு அவர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ