ஏப்ரல் 1 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம்: மாநில அரசு அதிரடி அறிவிப்பு

Kerala Assured Pension Scheme: கேரள அரசு அதன் ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய முறையை அறிமுகம் செய்துள்ளது. இதன் பிரத்யேக நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 3, 2026, 11:10 AM IST
  • கேரள அரசு தனது ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.
  • கேரள அரசு ஊழியர்களுக்கு APS கட்டாயமா?
  • சேவைத் தேவை மற்றும் ஓய்வூதிய வரம்புகள் என்ன?
ஏப்ரல் 1 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம்: மாநில அரசு அதிரடி அறிவிப்பு

New Pension Scheme: அனைத்து ஊழியர்களுக்கும் மாத சம்பளத்தை போலவே ஓய்வூதியமும் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். பணி ஓய்வுக்கு பிறகு மாதா மாதம் கிடைக்கும் ஓய்வூதியம் சிறந்த நிதி ஆதரவை அளிக்கின்றது. ஊழியர்களின் நன்மைகளை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது ஓய்வூதியத் திட்டத்தில் பல வித மாற்றங்களை செய்கின்றன.

Add Zee News as a Preferred Source

Assured Pension Scheme: மாநில அரசு செய்த முக்கிய மாற்றம்

கேரள அரசு சனிக்கிழமை தனது ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. ஏப்ரல் 1, 2026 முதல் 'வரையறுக்கப்பட்ட உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை' செயல்படுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. நிதியமைச்சர் கே.என். பாலகோபால் மாநில பட்ஜெட்டில் தேசிய ஓய்வூதிய முறைக்கு (NPS) பதிலாக, குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் 'வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை' கொண்டுவருவதாக அறிவித்தார். இந்த முடிவு இதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. 

ஊழியர்கள் ஒரு நிலையான ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வு செய்யலாம்

- அமைச்சர் அலுவலகம் வழங்கிய தகவலின்படி, ஏப்ரல் 1, 2026 முதல் அரசுப் பணியில் சேரும் ஊழியர்கள், 'வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை' தேர்வு செய்யலாம் அல்லது NPS இன் கீழ் தொடரலாம். 

- NPS இன் கீழ் தற்போது சேர்ந்துள்ள ஊழியர்களுக்கு "வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு" மாறுவதற்கான விருப்பமும் வழங்கப்படும் என்று பாலகோபால் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். 

- இந்தத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் அதிகபட்ச ஓய்வூதியம் ஓய்வு பெறும் போது பெறப்பட்ட அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதமாக இருக்கும்.

- இது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட சம்பள அளவை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படும். 

- ஓய்வூதியத் தொகைக்கு கூடுதலாக, அகவிலைப்படி நிவாரணமும் (DR) வழங்கப்படும்.

ஊழியர்கள் 30 ஆண்டுகள் சேவையை முடித்திருக்க வேண்டும்

அதிகபட்ச ஓய்வூதியத்திற்கு தகுதி பெற, ஊழியர்கள் 30 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையை முடித்திருக்க வேண்டும். திட்டத்திற்கான விரிவான வழிகாட்டுதல்கள் தனித்தனியாக வெளியிடப்படும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Assured Pension Scheme

கேரள அரசு ஊழியர்களுக்கு APS கட்டாயமா?

ஊழியர்களுக்கு இது கட்டாய திட்டம் அல்ல. இது ஊழியர்களின் விருப்பத்தை பொறுத்தது.

ஊழியர்கள் இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்:

- தேசிய ஓய்வூதிய முறையுடன் (NPS) தொடர்வது, அல்லது
- உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு (APS) மாறுவது

முக்கியமாக, NPS இன் கீழ் ஏற்கனவே சேர்ந்துள்ள ஊழியர்கள் அரசாங்க வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு APS க்கு மாறும் ஆப்ஷனைத் தேர்வுசெய்யலாம்.

APS: சேவைத் தேவை மற்றும் ஓய்வூதிய வரம்புகள்

முழு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திற்குத் தகுதி பெற:

- தேவைப்படும் குறைந்தபட்ச சேவை: 30 ஆண்டுகள்
- அதிகபட்ச ஓய்வூதியம்: கடைசி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம்
- இந்த சேவை நிபந்தனை மத்திய அரசின் UPS கட்டமைப்பை விட கடுமையானது. இது 25 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு இதேபோன்ற ஓய்வூதியப் பலனை அனுமதிக்கிறது. ஊழியர் சங்கங்கள் தகுதி ஆண்டுகளில் மேலும் குறைப்பை கோரி வருகின்றன.

NPS -இல் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையம் செய்த மாற்றம்

இதற்கிடையில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையம் (PFRDA) தேசிய ஓய்வூதிய முறையின் விதிகளில் அதாவது NPS இன் விதிகளில் ஒரு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இது ஊழியர்களுக்கு பெரும் நிவாரணத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. புதிய விதிகளின் கீழ் பல புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. NPS இல் நீடிப்பதற்கான வயது வரம்பை அதிகரிப்பதும் இதில் அடங்கும். இந்த மாற்றங்கள் அரசு மற்றும் அரசு சாரா ஊழியர்களுக்கானவை. 

- PFRDA அறிமுகப்படுத்திய முதல் மாற்றம் வயது வரம்பைப் பற்றியது. இப்போது, ​​தனிநபர்கள் 85 வயது வரை தேசிய ஓய்வூதிய முறையில் இருக்க முடியும். இந்த வரம்பு முன்னர் 75 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

- இரண்டாவது மாற்றம் ஓய்வூதிய நிதித் தொகைகளுடன் தொடர்புடையது. இப்போது, ​​ஓய்வூதியத்திற்காக 20% நிதியை மட்டுமே ஒதுக்க வேண்டும். ஓய்வு பெறும்போது அல்லது சில சூழ்நிலைகளில், தனியார் துறை ஊழியர்கள் தங்கள் மொத்த நிதியில் குறைந்தது 20% ஐ வருடாந்திரம் வாங்க பயன்படுத்தலாம். முன்பு, உங்கள் கார்பஸ் ₹5 லட்சத்தைத் தாண்டினால், உங்கள் கார்பஸில் குறைந்தது 40% ஐ ஆனுவிட்டி வாங்க பயன்படுத்த வேண்டியிருந்தது. அதாவது, இப்போது ஊழியர்களுக்கு அதிக பணத்திற்கான அணுகல் கிடைக்கும்.

- மூன்றாவது மாற்றம் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பது பற்றியது. சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் எடுக்கலாம். ரூ.8 லட்சம் அல்லது அதற்கும் குறைவான வைப்புத்தொகை கொண்ட அரசு மற்றும் தனியார் சந்தாதாரர்கள் தங்கள் வைப்புத்தொகையில் 100% ஐ திரும்பப் பெறலாம்.

- அரசு ஊழியர்கள் முழுத் தொகையையும் திரும்பப் பெற விரும்பவில்லை என்றால், தங்கள் நிதியில் 40% ஐ வருடாந்திர ஓய்வூதிய சேமிப்பில் முதலீடு செய்யும் விருப்பம் உள்ளது. 

- மறுபுறம், தனியார் துறை ஊழியர்கள் தங்கள் நிதியில் குறைந்தது 20% ஐ வருடாந்திரங்களுக்குப் பயன்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க | அடுத்த அகவிலைப்படி உயர்வும் அதிரடியாய் இருக்கும்: AICPI-IW தரவுகள் தந்த குட் நியூஸ்

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: அரசு ஊழியர்களுக்கு அதிகரிக்கும் குடும்ப அலகு, எகிறப்போகும் அடிப்படை சம்பளம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News