ஏப்ரல் 1 முதல் புதிய ஓய்வூதிய முறை... அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரிக்கும் நன்மைகள்

Unified Pension Scheme: UPS எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கம் பணி ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதாகும். அரசின் இந்த முடிவு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 11, 2025, 03:14 PM IST
  • ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?
  • ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய நன்மைகள் என்ன?
  • ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான தகுதி என்ன?
ஏப்ரல் 1 முதல் புதிய ஓய்வூதிய முறை... அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரிக்கும் நன்மைகள்

Unified Pension Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக பல வித முக்கிய செய்திகள் கிடைத்துக்கொண்டு இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம். மத்திய அரசு சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) அறிவித்துள்ளது. இது ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும். 

Add Zee News as a Preferred Source

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

UPS எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கம் பணி ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதாகும். அரசின் இந்த முடிவு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கிறது. மத்திய அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள், ஓய்வுக்குப் பிறகு நிதி ஸ்திரத்தன்மையைப் பராமரிக்க இது உதவுகிறது.

OPS மற்றும் NPS-இன் நன்மைகளை உள்ளடக்கிய UPS

இந்தத் திட்டம் பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme) மற்றும் தேசிய ஓய்வூதிய முறை (National Pension System) ஆகியவற்றின் நன்மைகளை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஊழியர்கள் ஓய்வுக்குப் பிறகு ஒரு நிலையான ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். இது அவர்களின் நிதி நல்வாழ்வை உறுதி செய்கிறது. இது NPS இன் கீழ் கவர் செய்யப்பட்டு UPS ஐத் தேர்ந்தெடுத்த ஊழியர்களுக்குப் பொருந்தும்.

Benefits of UPS: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய நன்மைகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் பல முக்கிய நன்மைகளை வழங்குகிறது. அவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

உத்தரவாத ஓய்வூதியம்: UPS இன் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடந்த 12 மாதங்களிலிருந்து அவர்களின் சராசரி சம்பளத்தில் 50% -ஐ ஓய்வூதியமாகப் பெறுவார்கள். இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற, ஒரு ஊழியர் குறைந்தது 25 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.

விகிதாசார ஓய்வூதியம்: 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனால் 25 ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றிய ஊழியர்கள் விகிதாசார அடிப்படையில் ஓய்வூதியம் பெறுவார்கள்.

குறைந்தபட்ச ஓய்வூதியம்: புதிய ஓய்வூதியத் திட்டம், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ரூ.10,000 குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது.

குடும்ப ஓய்வூதியம்: ஒரு ஊழியர் துரதிஷ்டவசமாக இறந்தால், ஓய்வூதியத் தொகையில் 60% அவரது குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

நிதிப் பாதுகாப்பு: இந்தத் திட்டம், ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு நிதி ரீதியாகப் பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்கிறது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான தகுதி என்ன?

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) தகுதி பெற, ஊழியர்கள் பின்வரும் அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும்:

- இந்தத் திட்டம் தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்குப் பொருந்தும்.

- ஊழியர்கள் NPS கட்டமைப்பின் கீழ் UPS ஐத் தேர்வு செய்ய வேண்டும்.

UPS vs NPS: இரு ஓய்வூதிய முறைகளுக்கும் இடையில் உள்ள முக்கிய வேறுபாடுகள் என்ன?

UPS ஓய்வுக்குப் பிறகு நிலையான ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது. ஆனால், NPS சந்தையுடன் இணைக்கப்பட்ட வருமானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆகையால் இதில் நிலையான ஓய்வூதியத்திற்கான உறுதி அளிக்கப்படுவதில்லை. இதுவே ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) மற்றும் தேசிய ஓய்வூதிய முறை (NPS) ஆகியவற்றுக்கு இடையேயான முதன்மையான வேறுபாடாக கருதப்படுகின்றது. ஆகையால், ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானத்தைத் தேடும் ஊழியர்களுக்கு UPS ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

மேலும் படிக்க | அதிரடி ஊதிய உயர்வு, ஏகப்பட்ட மாற்றங்கள்: அதிரடியாய் வருகிறது 8வது ஊதியக்குழு, பணிகள் இந்த நாளில் தொடங்கும்

மேலும் படிக்க | EPF கணக்கில் வட்டி வந்துவிட்டதா? எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது? இந்த 4 எளிய வழிகளில் செக் செய்யலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News