NPS Vs UPS: மத்திய அரசு சமீபத்தில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்தது. தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) தேர்வு செய்வதற்கான வசதியை இந்திய அரசு வழங்கியுள்ளது. அரசு ஊழியர்கள் NPS -ஐ நிறுத்தி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர கோரிக்கை விடுத்துவந்த நிலையில், மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 01, 2025 முதல் அமலுக்கு வரும்.
Unified Pension System: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?
பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme) மற்றும் தேசிய ஓய்வூதிய முறை (National Pension System) ஆகியவற்றில் உள்ள முக்கிய அம்சங்களை இணைத்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. UPS என்பது ஒரு நிதி அடிப்படையிலான பணம் செலுத்தும் முறையாகும். இது ஓய்வூதியதாரர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்க, ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் (மத்திய அரசு) பங்களிப்புகளை சார்ந்துள்ளது.
NPS Vs UPS: இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
தேசிய ஓய்வூதிய அமைப்பு (National Pension System)
- சந்தை சார்ந்த காரணிகளுடன் NPS சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- NPS சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது.
- NPS இன் தொகை முதலீடுகள் மூலம் திரட்டப்பட்ட கார்பஸைப் பொறுத்தது.
- NPS இல் 14 சதவீதம் மற்றும் 10 சதவீதம் வரை முதலாளி / நிறுவன பங்களிப்புகளுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme)
- UPS கடைசியாகப் பெற்ற சம்பளத்தின் அடிப்படையில் உறுதியான ஓய்வூதியப் பணத்தை வழங்குகிறது.
- UPS -இல் குறைந்த ஆபாயங்களே உள்ளன. ஏனெனில் இதில் ஓய்வூதியத்திற்கான உத்தரவாதம் உள்ளது.
- UPS -இல் 10 வருட சேவைக்குப் பிறகு மாதத்திற்கு ரூ.10,000 குறைந்தபட்ச ஓய்வூதியம் உறுதி செய்யப்படும்.
- UPS -இல் கூடுதலாக அரசாங்கத்திடமிருந்து 8.5 சதவீத பங்களிப்பு கிடைக்கும்.
NPS இன் கீழ் உள்ள ஊழியர்கள் UPS ஐத் தேர்ந்தெடுத்தவுடன், அவர்கள் மீண்டும் NPS க்கு மாற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
UPS Calculator: UPS திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை எப்படி கணக்கிடுவது?
யுபிஎஸ் திட்டத்தின் கீழ் ஓய்வு பெறுவதற்கு முன், 12 மாத சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% தொகை ஓய்வூதியமாக கிடைக்கும். குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவைக்கு பிறகு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும். குறைவான தகுதிவாய்ந்த சேவைக் காலம் இருந்தால், விகிதாசார ஓய்வூதியம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவைக்குப் பிறகு தன்னார்வ ஓய்வு பெற்றால், பணியாளர் பணியில் தொடர்ந்திருந்தால் அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டிய தேதியிலிருந்து உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் தொடங்கும்.
UPS: முக்கிய அம்சங்கள்
- ஊழியர்களின் பங்களிப்பு, அடிப்படை ஊதியம் + அகவிலைப்படியில் 10% ஆக இருக்கும்.
- மத்திய அரசின் பங்களிப்பு, அடிப்படை ஊதியம் + அகவிலைப்படியில் 10% ஆக இருக்கும்.
- இரண்டும் ஒவ்வொரு பணியாளரின் தனிப்பட்ட கார்பஸிலும் வரவு வைக்கப்படும்.
- UPS விருப்பத்தைத் தேர்ந்தெடுத்த அனைத்து ஊழியர்களுக்கும் அடிப்படை ஊதியம் + அகவிலைப்படியில் 8.5% கூடுதல் பங்களிப்பை அளிக்கும்.
- UPS விருப்பத்தின் கீழ் உறுதி செய்யப்பட்ட கொடுப்பனவுகளை கொடுக்க ஏதுவாக கூடுதல் பங்களிப்பை அரசு செய்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









