)
New Ration Card Application: தமிழ்நாட்டில் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிப்பது இப்போது எளிமையாகிவிட்டது. தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான டிஎன்பிடிஎஸ் (TNPDS) மூலம், மக்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தால், சில நிமிடங்களிலேயே விண்ணப்ப செயல்முறையை முடித்துவிடலாம். எனினும், ஒரு சிலருக்கு மட்டும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் அட்டை சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அது யார், எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த முழு விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்
புதிதாகத் திருமணமானவர்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், முதலில் கணவன் மற்றும் மனைவி இருவரும் ஏற்கனவே உள்ள குடும்ப ரேஷன் அட்டையில் இருந்து தங்கள் பெயர்களை நீக்க வேண்டும். இந்தச் சேவையையும் டிஎன்பிடிஎஸ் இணையதளம் (https://www.tnpds.gov.in/) மூலமாகப் பெறலாம் அல்லது மாதந்தோறும் நடைபெறும் ரேஷன் அட்டை குறைதீர் முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.
பெயர் நீக்கிய பின், புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்:
ரேஷன் அட்டையில் இருந்து பெயரை நீக்கியதற்கான சான்றிதழ்.
திருமணச் சான்றிதழ்.
கணவன் மற்றும் மனைவி இருவரின் ஆதார் அட்டைகள்.
சொந்த வீடு எனில், வசிக்கும் வீட்டின் வரி ரசீது.
வாடகை வீடு எனில், வாடகை ஒப்பந்தம், மின் கட்டண ரசீது.
தொடர்புக்கான தொலைபேசி எண்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை
மேற்கூறிய ஆவணங்கள் தயாராக இருந்தால், டிஎன்பிடிஎஸ் இணையதளத்துக்குச் சென்று 'புதிய குடும்ப அட்டை விண்ணப்பம்' (New Family Card Application) என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதில், குடும்பத் தலைவரின் பெயர், கணவன்/மனைவி பெயர், வசிக்கும் முகவரி, நிரந்தர முகவரி, குடும்பத் தலைவியின் புகைப்படம், தொலைபேசி எண் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். பின்னர், ஆதார் அட்டை, திருமணச் சான்றிதழ் போன்ற ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும், அதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் உள்ள எண்ணைப் பயன்படுத்தி, உங்கள் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம்.
யார் யாருக்கு ஆதார் அட்டை தேவையில்லை?
அரசு வழங்கியுள்ள விதிவிலக்கின்படி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் அட்டை சமர்ப்பிக்க வேண்டியதில்லை. இவர்களது பெயர்கள் ஆதார் அட்டை இல்லாமல் குடும்ப அட்டையில் சேர்க்கப்படும். இது அரசின் ஒரு முக்கிய சலுகையாகும்.
நேரடியாக விண்ணப்பிக்கும் வாய்ப்பு
ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தெரியாதவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பொது விநியோகத் திட்டத்துக்கான ரேஷன் அட்டை குறைதீர் முகாம்களிலும் நேரடியாக மனு கொடுக்கலாம். இந்த முகாம்களில் ரேஷன் அட்டை தொடர்பான அனைத்து குறைகளுக்கும் உடனடித் தீர்வு கிடைக்கும். எனவே, பொதுமக்கள் இந்தச் சேவைகளைப் பயன்படுத்திக்கொண்டு புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ