நாடு முழுவதும் அனைவருக்கும் ஓய்வூதியம் என்னும் 'யுனிவர்சல் பென்ஷன் திட்டத்தை' கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் ஓய்வூதிய பலன்களைப் பெற முடியாத மக்கள் அனைவரும் ஓய்வூதிய வரம்பிற்குள் வருவார்கள். அமைப்பு சாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள் என அனைவரையும் ஓய்வூதிய வரம்பிற்குள் கொண்டு வருவதே மத்திய அரசின் நோக்கமாகும்.
அனைவருக்கும் ஓய்வூதியம் என்னும் திட்டத்திற்கான முன்மொழிவு ஆவணங்களைத் தயாரிக்கும் பணி தொழிலாளர் அமைச்சகத்திலிருந்து தொடங்கியுள்ளது. புதிய யூனிவர்ஸல் முன்மொழிவு ஆவணம் தயாரான பிறகு, சம்பந்தப்பட்ட அனைத்து துறை மற்றும் வல்லுநர்களிடன் இருந்து ஆலோசனைகள் வரவேற்கப்படும்.
அரசின் தற்போதைய ஓய்வூதிய திட்டங்கள்
நிகழ்காலத்தைப் பற்றி பேசுகையில், அமைப்பு சாரா துறையினருக்கு ஓய்வூதிய வசதிகளை வழங்குவதற்காக பல ஓய்வூதியத் திட்டங்கள் அரசால் நடத்தப்படுகின்றன. அடல் பென்ஷன் யோஜனா (APY திட்டம்) என்னும் ஓய்வூதிய அடங்கும். இதில் முதலீடு செய்யும் நபர் 60 வயதை அடைந்த பிறகு உத்தரவாதமான ஓய்வூதியத்தின் பலனைப் பெறுகிறார். இது தவிர, PM Shram Yogi Mandhan அதாவது PM-SYM திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது குறிப்பாக தெருவோர வியாபாரிகள் மற்றும் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக பயனளிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது, இதிலும், 60 வயதை எட்டிய பிறகு ஓய்வூதியமாக வழக்கமான வருமானம் உறுதி செய்யப்படுகிறது.
புதிய ஓய்வீதிய திட்டத்தில் அரசு பங்களிக்குமா?
யூனிவர்சல் பென்ஷன் திட்டத்தில் அரசாங்கத்தின் பங்களிப்பும் சேர்க்கப்படுமா என்பது இப்போது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. எனினும், தற்போது இதற்கான திட்டமிடல் ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், இது தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெறுவதற்கு காலம் ஆகும். யுபிஎஸ் ஒரு தன்னார்வ அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டமாக இருக்கும் என்றும், அரசாங்கம் அதன் தரப்பில் இருந்து எந்த பங்களிப்பையும் அளிக்காது எனவும் கூறப்படுகிறது. தற்போது, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் இயங்கும் திட்டங்களுக்கு ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் இருவரும் பங்களிக்கின்றனர்.
மேலும் படிக்க | ஓய்வு காலத்தில் ஹேப்பியாக இருக்க... இந்த 4 திட்டங்கள் கைக்கொடுக்கும்!
யுபிஎஸ் மற்றும் NPS திட்டங்கள்
அரசாங்கம் தயாரித்து வரும் யூனிவர்ஸல் பென்ஷன் திட்டம் பற்றிய விவாதங்களுக்கு மத்தியில், தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) மாற்றங்கள் இருக்குமா என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. எனினும், தற்போது செயல்படுத்தப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது அல்லது அது இணைக்கப்படாது என கூறப்படுகிறது.
யூனிவர்ஸல் ஓய்வூதிய திட்டம் உள்ள நாடுகள்
அமெரிக்கா, கனடா, ரஷ்யா, சீனா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் உட்பட பல வளர்ந்த நாடுகள் ஏற்கனவே ஓய்வூதியங்கள், சுகாதார சேவைகள் மற்றும் வேலையின்மை நலன்களை உள்ளடக்கிய கட்டமைக்கப்பட்ட சமூக பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளன. டென்மார்க், ஸ்வீடன், நார்வே, நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே தங்கள் முதியோர்களின் நிதிப் பாதுகாப்பிற்காக யூனிவர்ஸல் ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ








