புதிய UPI விதிகள்: ஆகஸ்ட் 1 முதல் GPay, Phonepe, Paytm பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றங்கள்

UPI Guidelines: ஆகஸ்ட் 1, 2025 முதல் இந்தியா முழுவதும் புதிய UPI விதிகள் செயல்படுத்தப்படும். UPI -இல் வரவுள்ள மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 26, 2025, 09:51 AM IST
  • ஆகஸ்ட் 1, 2025 முதல் புதிய UPI விதிகள் செயல்படுத்தப்படும்.
  • புதிய விதிகள் GPay, PhonePe மற்றும் Paytm போன்ற அனைத்து UPI செயலி பயனர்களுக்கும் பொருந்தும்.
  • இந்த மாற்றத்தின் நோக்கம் என்ன?
புதிய UPI விதிகள்: ஆகஸ்ட் 1 முதல் GPay, Phonepe, Paytm பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றங்கள்

New UPI Guidelines from August 1, 2025: GPay, PhonePe அல்லது Paytm போன்ற UPI செயலிகளைப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான இந்தியர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஒருங்கிணைந்த கட்டண இடைமுக (UPI) விதிமுறைகளில் ஆகஸ்ட் 1, 2025 புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. அவற்றை பற்றி UPI பயனர்கள் புரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.

Add Zee News as a Preferred Source

ஆகஸ்ட் 1 முதல் முக்கிய UPI மாற்றங்கள்

- ஆகஸ்ட் 1 முதல் 7 புதிய UPI மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

- NPCI (இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்) மூலம் செய்யப்படும் இந்த மாற்றங்களின் மூலம் சர்வர் செயலிழப்பு, பணம் செலுத்துவதில் தாமதம் போன்ற சிக்கல்கள் லாவகமாக சமாளிக்கப்படும் என கூறப்படுகின்றது.

- இந்த மாற்றங்கள் UPI செயல்முறையை மேம்படுத்தி, இதை பயனர்களுக்கு ஏற்ற வகையிலும் அதிக திறனுடனும் மாற்றும்.

இருப்புச் சரிபார்ப்புகளுக்கான வரம்பு: ஒரு புதிய UPI விதி

இருப்புச் சரிபார்ப்புக்கு கட்டுப்பாடு இருக்கும்

ஆகஸ்ட் 1 முதல், UPI பயனர்கள் ஒரு UPI செயலியிலிருந்து ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே தங்கள் கணக்கு இருப்பைச் செக் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சர்வர்களை அதிகமாக லோட் செய்து பரிவர்த்தனைகளின் வேகத்தைக் குறைக்கும் தேவையற்ற இருப்புச் சரிபார்ப்புகளைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. NPCI இந்த வரம்பு வழக்கமான பயனர்களுக்கு போதுமானது என்றும் இது ஒட்டுமொத்தமாக கணினி செயல்திறனை மேம்படுத்தும் என்றும் கூறுகிறது.

இந்த மாற்றத்தின் நோக்கம் என்ன?

- சர்வர் சுமையை குறைக்கிறது
- பரிவர்த்தனை வேகத்தை அதிகரிக்கிறது
- கணினி செயல்திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளைப் பார்ப்பதற்கான வரம்பு
கணக்கு விசாரணைகளுக்கு புதிய வரம்பு

UPI ஐப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இப்போது ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே தங்கள் மொபைல் எண்ணில் உள்ள வங்கிக் கணக்குகளின் பட்டியலைப் பார்க்க முடியும். இந்த வரம்பு தேவையற்ற API கால்ஸ்களைக் குறைக்கும். மேலும் UPI சேவையின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் சீரான தன்மையை மேம்படுத்தப்படும்.

இந்த மாற்றத்தின் நோக்கம் என்ன?

- தேவையற்ற API அழைப்புகளைக் குறைக்கிறது.
- UPI சேவை செயல்திறனை மேம்படுத்துகிறது.
- கணினி செயல்திறனை அதிகரிக்கிறது.

தானியங்கி கட்டண பரிவர்த்தனைகளுக்கு புதிய டைம் ஸ்லாட்கள்
உங்கள் தானியங்கி கட்டண பரிவர்த்தனைகள் எப்போது நிகழும்?

நீங்கள் AutoPay மூலம் பில்கள், சந்தாக்கள் அல்லது முதலீடுகளுக்கு பணம் செலுத்தினால், பரிவர்த்தனைகள் சில ஆஃப்-பீக் நேரங்களில் மட்டுமே நிகழும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்:
- காலை 10 மணிக்கு முன்
- மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை
- இரவு 9:30 மணிக்குப் பிறகு

இந்த மாற்றத்தின் நோக்கம் என்ன?

- பீக் டைமில் சர்வர் சுமையைக் குறைக்கிறது.
- தடையின்றி இயல்பான பரிவர்த்தனைகளைப் பராமரிக்கிறது.
- ஒட்டுமொத்த கணினி செயல்திறனை மேம்படுத்துகிறது.

தோல்வியுற்ற பரிவர்த்தனை நிலையைச் சரிபார்த்தல்: புதிய வரம்புகள்
தோல்வியுற்ற பரிவர்த்தனைகளை செக் செய்யும் முறைகளில் வரையறை

UPI பயனர்கள் இப்போது தோல்வியுற்ற பரிவர்த்தனையின் நிலையை ஒரு நாளைக்கு 3 முறை மட்டுமே சரிபார்க்க முடியும். மேலும், ஒவ்வொரு நிலை சரிபார்ப்புக்கும் இடையில் 90 வினாடி இடைவெளி இருக்க வேண்டும். சர்வர் சுமையைக் குறைத்து டிரான்சாக்ஷன் ரிவர்சலின் வெற்றி விகிதத்தை அதிகரிப்பதே இதன் நோக்கம்.

இந்த மாற்றத்தின் நோக்கம் என்ன?

- சர்வர் சுமையைக் குறைக்கிறது.
- டிரான்சாக்ஷன் ரிவர்சலின் வெற்றி விகிதத்தை அதிகரிக்கிறது.
- கணினி செயல்திறனை மேம்படுத்துகிறது.

வங்கிகள் மற்றும் செயலிகளுக்கு NPCI இன் கடுமையான வழிகாட்டுதல்கள்

API பயன்பாட்டை கண்டிப்பாகக் கண்காணித்து ஒழுங்குபடுத்த NPCI வங்கிகள் மற்றும் கட்டண முறைமை ஆபரேட்டர்களை (PSPs) அறிவுறுத்தியுள்ளது. இதற்கு இணங்காவிட்டால், API அணுகல் கட்டுப்பாடுகள், புதிய பயனர்களை ஆன்போர்டிங் செய்வதில் இடைநிறுத்தம், அபராதம் போன்றவற்றை சந்திக்க நேரிடலாம். கணினி நிலைத்தன்மையைப் பராமரிக்கவும் குறுக்கீட்டைத் தவிர்க்கவும் இவை செய்யப்படுகின்றன.

புதிய விதி ஏற்கனவே அமலில் உள்ளது
கணக்கு பெயர் சரிபார்ப்பு செயல்படுத்தப்பட்டது

ஜூன் 30, 2025 முதல், UPI பரிவர்த்தனைகள் பணம் செலுத்துவதை உறுதிப்படுத்துவதற்கு முன்பு பெறுநரின் பதிவு செய்யப்பட்ட பெயரைக் காட்டும் ஒரு புதிய விதி நடைமுறையில் உள்ளது. இந்த நடவடிக்கை தவறான பரிவர்த்தனைகள் மற்றும் மோசடிக்கான சாத்தியக்கூறுகளைக் குறைப்பதால் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

UPI பரிவர்த்தனைகளில் புதிய மாற்றங்கள்: சுருக்கமாக....

- ஆகஸ்ட் 1, 2025 முதல் இந்தியா முழுவதும் புதிய UPI விதிகள் செயல்படுத்தப்படும்.

- புதிய விதிகள் GPay, PhonePe மற்றும் Paytm போன்ற அனைத்து UPI செயலி பயனர்களுக்கும் பொருந்தும். 

- பயனர்கள் கைமுறையாக எதையும் செய்ய வேண்டியதில்லை. மாற்றங்கள் உங்கள் UPI பயன்பாட்டில் தானாகவே நடக்கும்.

- இந்த மாற்றங்களின் முதன்மை நோக்கம் UPI அமைப்பில் தேவையற்ற சுமையைக் குறைப்பது, சேவையகங்களை மேம்படுத்துவது மற்றும் பரிவர்த்தனைகளை வேகமாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவதாகும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: பே ஸ்கேல், ஓய்வூதியம், OPS, ஊதிய உயர்வு.... காத்திருக்கும் 15 பரிசுகள்

மேலும் படிக்க | Post Office RD: 5 ஆண்டுகளில் ரூ.35 லட்சம் வருமானம் தரும் அற்புதமான அரசாங்க திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News