)
Crop Insurance : மத்திய அரசு விவசாயிகளுக்காகவே பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா (RPMFBY) திட்டம் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம். புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா (RPMFBY) திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி BAJAJ ALLIANZ பொது காப்பீடு நிறுவனம் (BAGIC) மூலம் 2025-26-ம் ஆண்டு ராபி பருவத்திற்கு (Rabi Season) செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் வங்கி மூலம் பயிர் கடன் பெறும் விவசாயிகள், பயிர் கடன் பெறாத விவசாயிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட குத்தகை நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் என அனைவரும் பயன் பெறலாம்.
பயிர் கடன் பெறும் விவசாயிகளுக்கு அந்தந்த கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் காப்பீடு தொகை பிடித்தம் செய்யப்படும். கடன் பெறாத விவசாயிகள் தங்களின் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள வங்கி கணக்கிலும், BAJAJ ALLIANZ பொது காப்பீடு நிறுவனம் காப்பீடு நிறுவனத்திலும் பயிர் காப்பீடு தொகையை செலுத்தலாம். பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு பெற விரும்பும் கடன் பெறாத விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள வங்கி கிளை/கூட்டுறவு சங்கம்/அங்கீகரிக்கபட்ட சேனல் பார்ட்னர்/பொது சேவை மையம் (CSC)/காப்பீட்டு நிறுவனம் அல்லது தங்களுடைய அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது அவர்கள் தனிப்பட்ட முறையில் தேசிய பயிர் காப்பீடு வலைதளத்தில் (www.pmfby.gov.in <http://www.pmfby.gov.in>) கெடு தேதிக்கு முன்பாக சென்று ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பலாம்.
கடன் பெறாத விவசாயிகள், முன்மொழிவு படிவம், பதிவுப் படிவம், அடங்கல், ஆதார் அட்டையின் நகல், மற்றும் வங்கி பாஸ் புக்கின் முதல் பக்கம் ஆகிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு, வாழை, முட்டைகோஸ், கேரட், பூண்டு மற்றும் இஞ்சி ஆகிய பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம். பீரிமியம் தொகையாக ஒரு ஏக்கருக்கு உருளைக்கிழங்குக்கு ரூ.5328/-ம், வாழைக்கு ரூ. 3089/-ம், முட்டைகோஸ் பயிருக்கு ரூ.1375/-ம், கேரட் பயிருக்கு ரூ.3945/-ம், பூண்டுக்கு ரூ.3710/-ம் மற்றும் இஞ்சிக்கு ரூ. 4404/-ம் செலுத்த வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பின்வரும் பயிர் இடர்கள் காப்பீடு செய்யப்படுகின்றன
உள்ளுர் பேரிடர்: குறிப்பிடப்பட்ட பகுதியில் ஆலங்கட்டி மழைஇ நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு, இடி, மின்னல், மழை மற்றும் மின்னல் காரணமாக இயற்கை தீ போன்ற உள்ளுர் பேரழிவுகள் காரணமாக உண்டாகும் பயிர் இழப்பு/சேதத்திற்கு தனிப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு கொண்டு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டம் தொடர்பான மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள தங்கள் பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பாதிக்கப்பட்ட காப்பீடு செய்து கொண்ட விவசாயி சம்பவத்தின் 72 மணிக்குள்ளாக காப்பீட்டு நிறுவனத்தின் கட்டணமற்ற எண் 18002660700 மீது நேரிடையாக தெரிவிக்க வேண்டும் அல்லது வங்கி/ தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மூலம் எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும். விவசாயியினால் முழு விவரமும் 72 மணிக்குள்ளாக வழங்கப்படவில்லை என்றால் பின்னர் குறிப்பிடப்பட்ட படிவத்தில் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கு விவசாயியினால் முழுமையான தகவல் வழங்கப்பட வேண்டியது அவசியம்.
பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள்: 31.01.2026 (முட்டைகோஸ்), 15.02.2026 (உருளைக்கிழங்கு, பூண்டு) மற்றும் 28.02.2026 (கேரட், இஞ்சி, வாழை). எனவே, நீலகிரி மாவட்டத்திலுள்ள உருளைக்கிழங்கு, வாழை, முட்டைகோஸ், கேரட், பூண்டு மற்றும் இஞ்சி சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் தங்களின் பயிர்களை பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்து பயன் அடையுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ