)
Central Government Employees Latest News: ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான முக்கியமான ஓய்வூதிய சலுகைகளை மத்திய அரசு உண்மையில் ரத்து செய்துவிட்டதா? ஓய்வூதியதாரர்கள் இனி அகவிலைப்படி உயர்வை பெற மாட்டார்களா? 8வது ஊதியக்குழு போன்ற எதிர்கால ஊதிய சீர்திருத்தங்களின் பலனும் இனி ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்காதா?
இப்படி பல கேள்விகள் சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகிம்றன. ஏனெனில், பல செய்தி அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக பதிவிகளில் சமீபத்தில் இது போன்ற செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த செய்திகளில் இந்த பெரிய மாற்றம் நிதிச் சட்டம் 2025 இன் கீழ் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வைரல் கூற்றுக்கள் உண்மையா? இவை அறிக்கைகளாக வெளிவர காரணம் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
No DA Hike: ஒய்வூதியதாரர்களுக்கு இனி அகவிலைப்படி உயர்வு கிடைக்காதா?
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வுக்குப் பிந்தைய சலுகைகளை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சில ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. இந்த விதி மாற்றம் நிதிச் சட்டம் 2025 இன் ஒரு பகுதி என அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் வேறு சில டிஜிட்டல் தளங்களில் வைரலாகி வரும் அறிக்கைகள் புதிய விதிகளின் கீழ், ஓய்வூதியதாரர்களுக்கு இனி 6 மாதங்களுக்கு ஒரு முறை திருத்தப்படும் அகவிலை நிவாரண உயர்வு இருக்காது என தெரிவித்துள்ளன.
8th Pay Commission: 8வது ஊதியக் குழு
அகவிலைப்படி உயர்வு மட்டுமல்லாமல், 2026 முதல் அமலுக்கு வரவுள்ள 8வது ஊதியக்குழு உட்பட இனி எந்த ஊதியக்குழுக்களின் பலனும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. இது ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகும் கூற்றுகளில் எவ்வளவு உண்மை இருக்கிறது?
சமீபத்தில் ஓய்வூதியதாரர்கள் தொடர்பான சில திருத்தங்கள் செய்யப்பட்டன. செலவினத் துறை, நிதி அமைச்சகம், பணியாளர் அமைச்சகம், சட்டத் துறை, சட்டமன்றத் துறை, தலைமை கணக்காளர் மற்றும் பிற சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்தாலோசித்து, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியத் துறை, CCS (ஓய்வூதியம்) விதிகள், 2021 இன் விதி 37(29)(a) இல் திருத்தம் செய்ய முன்மொழிந்துள்ளது.
Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கு அமலுக்கு வந்த புதிய விதிகள் என்ன?
திருத்தப்பட்ட விதி 37(29)(a) இன் படி, மத்திய அரசு பணியிலிருந்து ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த ஊழியர்கள், தவறான நடத்தை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது வேலையிலிருந்து அகற்றப்பட்டாலோ, அந்த நிறுவனத்தில் வழங்கப்பட்ட சேவை மட்டுமல்ல, முன்னர் செய்த அரசு பணியில் செய்த சேவையின் ஓய்வூதியப் பலன்களும் பறிமுதல் செய்யப்படும். மேலும், பணிநீக்கம் அல்லது ஆட்குறைப்பு ஏற்பட்டால், நிறுவனத்தின் முடிவு சம்பந்தப்பட்ட நிர்வாக அமைச்சகத்தால் மதிப்பாய்வு செய்யப்படும்.
இந்த விதியின்படி, முன்னர் ஒரு அரசுத் துறையில் பணிபுரிந்த ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் (PSU) ஊழியர், தவறான நடத்தை காரணமாக பணியிலிருந்து நீக்கப்பட்டால், அவரது முந்தைய அரசாங்கப் பணியில் இருந்து பெற்ற ஓய்வூதியம் உட்பட அவரது முழு ஓய்வூதியப் பலன்களும் பறிமுதல் செய்யப்படும்.
முன்னர் இருந்த விதிகளின் படி, பொதுத்துறை நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டால், அது முந்தைய அரசுப் பணிகளிலிருந்து பெறப்பட்ட ஓய்வூதியப் பலன்களைப் பாதிக்காது. ஆனால், தற்போது திருத்தப்பட்டுள்ள விதி இதிலிருந்து முற்றிலுமாக மாறியுள்ளது.
நிதிச் சட்டம் 2025 இன் புதிய விதிகள் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற ஓய்வூதியப் பலன்களைப் பறிப்பதாகக் கூறப்படுவதைப் பொறுத்தவரை, விதி 37 இல் செய்யப்பட்ட மாற்றத்திற்கும் அகவிலைப்படி அல்லது ஊதியக் கமிஷன் சலுகைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய மாற்றம் குறித்து அரசாங்கம் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் உறுதிப்படுத்தலையும் வெளியிடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Finance Bill 2025: நிதி மசோதா 2025
முன்னதாக, இந்த ஆண்டு மார்ச் மாதம் நிதி மசோதா 2025 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன் ஓய்வூதியம் தொடர்பான விதிகளில் ஒரு விதி குறித்து ஒரு சர்ச்சை எழுந்தது. இந்த விதி ஓய்வு பெற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் பழைய மற்றும் புதிய ஓய்வூதியதாரர்களிடையே சமத்துவமின்மையை உருவாக்கக்கூடும் என்றும் ஊழியர் சங்கங்கள் தெரிவித்தன. எனினும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பின்னர் இது குறித்து நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார். இந்த விதி ஜூன் 1, 1972 முதல் நடைமுறையில் உள்ள தற்போதைய விதிகளை மட்டுமே மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும் சிவில் அல்லது பாதுகாப்பு ஓய்வூதியங்களில் எந்த மாற்றங்களையும் செய்யாது என்றும் அவர் கூறினார்.
7th Pay Commission Pension Parity: ஓய்வூதிய சமத்துவம் அப்படியே தொடரும்
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியத் துறை (DoPPW) 7வது ஊதியக்குழு அறிமுகப்படுத்திய ஓய்வூதிய சமத்துவம் தொடரும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஆகையால், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஊதியக் கமிஷன் சலுகைகள் உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கூற்றுகள் உண்மையானவை அல்ல.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ