)
Central Government Employees Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வந்துள்ளது. மத்திய அரசு ஓய்வூதிய விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் தவறான நடத்தை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது பணியிலிருந்து நீக்கப்பட்டாலோ அவர்கள் ஓய்வூதிய பலன்களை இழக்க நேரிடும்.
Central Civil Services (Pension) Rules
பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் வரும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையால், 2021 ஆம் ஆண்டு மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகளின் விதி 37 ஐ திருத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மே 22, 2025 முதல் அமலுக்கு வந்த இந்த சமீபத்திய மாற்றங்கள், மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) திருத்த விதிகள், 2025 மூலம் அறிவிக்கப்பட்டன. இது தற்போதுள்ள மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகள், 2021 ஐ திருத்துகிறது.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய விதிகளில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?
சமீபத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம், முன்னர் அரசுப் பணியில் பணிபுரிந்து பின்னர் பொதுத்துறை நிறுவனங்களில் (PSU) பணியில் சேர்ந்த ஊழியர்களுக்குப் பொருந்தும். இனி, அத்தகைய பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் தவறான நடத்தை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது வேலையிலிருந்து அகற்றப்பட்டாலோ, அவர்களின் முழு ஓய்வூதிய பலன்களையும் இழக்க நேரிடும். இந்தப் பலன்களில், அவர்கள் மத்திய அரசு பணிகளில் இருந்தபோது பெற்ற ஓய்வூதிய சலுகைகளும் அடங்கும்.
திருத்தப்பட்ட விதி 37(29C), "ஊழியர்கள் பொதுத்துறை நிறுவனத்தில் சேர்க்கப்பட்டு, பின்னர் அடுத்தடுத்த தவறான நடத்தைக்காக பணிநீக்கம் செய்யப்பட்டால், அரசாங்கத்தின் கீழ் வழங்கப்பட்ட சேவைக்கான ஓய்வூதியப் பலன்களையும் இழக்க நேரிடும். மேலும் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது வேலையில் இருந்து அகற்றப்பட்டாலோ, நிறுவனத்தின் முடிவு நிர்வாக ரீதியாக சம்பந்தப்பட்ட நிறுவன அமைச்சகத்தால் மதிப்பாய்வு செய்யப்படும்." என்று கூற்பபட்டுள்ளது.
Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு இதனால் என்ன தாக்கம் ஏற்படும்?
இதற்கு முன்பு, பொதுத்துறை ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்க்களில் சேர்ந்த பிறகு, ஏதாவது தவறான நடத்தையில் ஈடுபட்டால், அது அவர்களது பொதுத்துறை நிறுவன ஓய்வுதிய பலங்களில் மட்டுமே பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்ற விதி இந்தது. அதாவது, இதனால், அவர்கள் அரசு பணிகளுக்காக பெற்ற ஓய்வூதிய சலுகைகளில் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டதில்லை. ஆனால், தற்போது அது மாறியுள்ளது.
"எதிர்கால நன்னடத்தைக்கு உட்பட்டு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம்" மற்றும் "கருணை உதவித்தொகை" தொடர்பான நிபந்தனைகள் இப்போது பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்குப் பொருந்தும் என்று புதிய விதிகள் குறிப்பிடுகின்றன.
Pension Rules: இந்த ஓய்வூதிய விதியின் கீழ் யாரெல்லாம் வருவரகள்?
திருத்தப்பட்ட விதிகள் டிசம்பர் 31, 2003 அன்று அல்லது அதற்கு முன்பு நியமிக்கப்பட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். இருப்பினும், இதில் பின்வரும் பணியாளர்கள் சேர்க்கப்படமாட்டார்கள்:
1. ரயில்வே பணியாளர்கள்
2. கேஷுவல் மற்றும் தினசரி கூலி தொழிலாளர்கள்
3. இந்திய நிர்வாக சேவை (IAS), இந்திய காவல் சேவை (IPS) மற்றும் இந்திய வன சேவை (IFoS) அதிகாரிகள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ