)
Central Government Pensioners Latest News: மத்திய அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரரா நீங்கள்? உங்கள் வீட்டில் யாரேனும் ஓய்வூதியதராரர்கள் உள்ளார்களா? அப்படியென்றால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சில விஷயங்களில் முறையாக கவனம் செலுத்தாமல் இருந்தால், ஓய்வூதியம் நிறுத்தப்படலாம். அதில் முக்கியமான ஒன்று ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் உங்கள் ஓய்வூதியம் குறித்த பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். ஆயுள் சான்றிதழ்களை ஆன்லைனிலும் அல்லது கைமுறையாகவும் சமர்ப்பிக்கலாம்.
பெரும்பாலான ஓய்வூதியதாரர்கள் நவம்பரில் வாழ்க்கைச் சான்றிதழ்களை சமர்ப்பிக்கிறார்கள். பலர் ஒரே நேரத்தில் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் போது ஏற்படும் அழுத்தத்தை குறைக்க, கருவூல நிர்வாகம் இந்த மாதம் சான்றிதழ் சமர்ப்பிப்புகளை செய்ய வலியுறுத்துகிறது. நவம்பர் 1 முதல் 3 ஆம் தேதி வரை ஓய்வூதியங்கள் கணக்குகளில் வரவு வைக்கப்படுகின்றன.
ஆயுள் சான்றிதழ் தொடர்பாக மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை பற்றி இங்கே காணலாம்:
- மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற ஜீவன் பிரமான் (Jeevan Pramaan) வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
- 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்த சான்றிதழை ஆண்டுதோறும் நவம்பரில் சமர்ப்பிக்கலாம்.
- ஜீவன் பிரமான் வாழ்க்கைச் சான்றிதழ் வருமான வரிச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- இது ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் டிஜிட்டல் சான்றிதழாகும்.
- 80 வயதை எட்டிய சூப்பர் சீனியர் சிடிசன்கள் மத்திய அரசு அறிவித்தபடி நவம்பர் 1 ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 1 ஆம் தேதி முதலே ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
- ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30 ஆகும். தேவைப்பட்டால் இது நீட்டிக்கப்படலாம்.
- ஆயுள் சான்றிதழை ஆன்லைனில் எளிதாகச் சமர்ப்பிக்கலாம். இதற்கு ஆதார் எண் தேவை.
- கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து 'ஆதார்ஃபேஸ்ஆர்டி' அல்லது 'ஜீவன் பிரமான் முகச் செயலி' பதிவிறக்கம் செய்து இதை செய்யலாம்.
- மொபைல் விண்ணப்பத்தைப் பயன்படுத்தி உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து, ஓய்வூதியதாரரின் விவரங்களை நிரப்பி, செல்ஃபி எடுத்து பதிவேற்றவும். சான்றிதழைப் பதிவிறக்குவதற்கான இணைப்பு SMS மூலம் அனுப்பப்படும். அதை பதிவிறக்கம் செய்து ஜீவன் பிரமான் இணையதளத்தில் சமர்ப்பிக்கவும்.
- நவம்பர் 30 ஆம் தேதிக்குள் சான்றிதழைச் சமர்ப்பிக்கவில்லை என்றால் ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தப்படலாம்.
- இருப்பினும், அதை சமர்ப்பித்த பிறகு அடுத்த மாதம் ஓய்வூதியம் நிலுவைத் தொகையுடன் மீண்டும் தொடங்கும்.
- சான்றிதழ் 3 ஆண்டுகளுக்குள் சமர்ப்பிக்கப்பட்டால் மட்டுமே ஓய்வூதியம் தொடரும்.
- சான்றிதழ் 3 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சமர்ப்பிக்கப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு, CPAO உடனான செயல்முறை மூலம் ஓய்வூதியத்தை மீட்டெடுக்க முடியும்.
ஓய்வூதியதாரர்களின் நன்மைக்காக, இந்த ஆண்டு நான்காவது டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ் பிரச்சாரம் நடத்தப்படும் என்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை தெரிவித்துள்ளது. இது 2025 நவம்பர் 1 முதல் 30 வரை நாடு முழுவதும் நடக்கும். இந்த முறை 1850 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள்/நகரங்கள்/டவுன்கள் இந்தப் பிரச்சாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ