Farmer Registry செய்யாவிட்டால் பிஎம் கிசான் 20வது தவணை கிடைக்காது: எளிய செயல்முறை இதோ

PM Kisan Latest News: விவசாயி பதிவேடு என்பது இந்திய அரசின் டிஜிட்டல் வேளாண்மை மிஷன் (Digital Agriculture Mission) மற்றும் வேளாண் அடுக்கு (Agri Stack) ஆகியவற்றின் ஒரு பகுதியாகும். இதில், நிலம், பயிர், குடும்பம், மண் மற்றும் விவசாயிகளின் கால்நடைகள் போன்ற தகவல்கள் ஒரே இடத்தில் கிடைக்கின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 10, 2025, 01:55 PM IST
  • விவசாயி ஐடியில் என்னென்ன தகவல்கள் இருக்கும்?
  • இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?
  • இதில் பதிவு செய்வது எப்படி?
Farmer Registry செய்யாவிட்டால் பிஎம் கிசான் 20வது தவணை கிடைக்காது: எளிய செயல்முறை இதோ

PM Kisan Samman Nidhi Yojana: மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து விவசாயிகளுக்கு விவசாயி ஐடியை தயாரித்து வருகிறது. விவசாயி பதிவேடு முடிந்த பிறகு இந்த தனித்துவமான டிஜிட்டல் ஐடி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் நோக்கம் பிரதமர் கிசான், பயிர் காப்பீடு போன்ற அனைத்து அரசு திட்டங்களின் பலன்களையும் எந்த இடைத்தரகரும் இல்லாமல் நேரடியாக பயனாளிகளுக்கு வழங்குவதாகும்.

Farmer Registry: விவசாயி பதிவேடு என்றால் என்ன?

விவசாயி பதிவேடு என்பது இந்திய அரசின் டிஜிட்டல் வேளாண்மை மிஷன் (Digital Agriculture Mission) மற்றும் வேளாண் அடுக்கு (Agri Stack) ஆகியவற்றின் ஒரு பகுதியாகும். இதில், நிலம், பயிர், குடும்பம், மண் மற்றும் விவசாயிகளின் கால்நடைகள் போன்ற தகவல்கள் ஒரே இடத்தில் கிடைக்கின்றன. இதனால் திட்டங்கள், மானியங்கள் மற்றும் கடன்களின் நன்மைகளை வசாயிகள் எளிதாகப் பெற முடியும். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் விவசாயத்தில் நிலைத்தன்மையை கொண்டு வரவும் இந்த பதிவேடு உதவியாக இருக்கும்.

Farmer ID: விவசாயி ஐடி

விவசாயி ஐடி என்பது விவசாயிகளுக்கு மிக முக்கியமான ஆவணம். அரசாங்கம் அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு டிஜிட்டல் தனித்துவமான ஐடியை வழங்கி வருகிறது. இது இல்லாமல், விவசாயிகள் அரசாங்க திட்டங்களின் பலனைப் பெற முடியாது என்றும், இந்த தனித்துவமான ஐடி இல்லாதவர்கள் நேரடி இழப்பை சந்திப்பார்கள் என்றும் இந்திய அரசின் வேளாண் அமைச்சகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயி ஐடி, விவசாயிகளின் பெயரில் நிலம் எவ்வளவு, எங்கே உள்ளது, விவசாயி என்ன பயிர் விதைத்துள்ளார், மண்ணின் ஆரோக்கியம் எப்படி உள்ளது, குடும்ப உறுப்பினர்கள் யார் போன்ற தகவல்களை வெளிப்படுத்துகிறது. விவசாயி ஐடி இருந்தால், இழப்பீட்டுக்காக அலுவலகங்களைச் சுற்றித் திரிய வேண்டிய அவசியமில்லை என்றும், வங்கிக் கடன் வாங்க ஆவணங்களைச் சேகரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்படுகிறது. ஒரே ஒரு விவசாயி ஐடியைக் கொண்டு அனைத்து வேலைகளையும் எளிதாக செய்து விடலாம்.

விவசாயி ஐடியில் என்னென்ன தகவல்கள் இருக்கும்?

- விவசாயி பெயரில் நிலம் எவ்வளவு, எங்கே உள்ளது என்ற தகவல்

- குடும்ப உறுப்பினர்கள்

- பயிர் தகவல்

- மண்ணின் தரம்

- பிற சொத்து அல்லது கால்நடைகளின் நிலை

இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?

- ஆதார் அட்டை மற்றும் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்

- நில ஆவணங்கள்

- குடும்ப ஐடி அல்லது ரேஷன் கார்டு

- வங்கி பாஸ்புக்

இதில் பதிவு செய்வது எப்படி?

விவசாயிகள் இரண்டு வழிகளில் பதிவைச் செய்யலாம்.

ஆஃப்லைன் - அருகிலுள்ள கிருஷி கேந்திரா, கிராம செயலகங்கள் அல்லது CSC -க்கு சென்று இதை செய்யலாம்.

ஆன்லைன் - பல்வேறு மாநிலங்களின் ஆன்லைன் அக்ரிஸ்டாக் தளங்களுக்கு சென்று விவசாயிகள் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

ஆன்லைன் பதிவு செயல்முறை

- தமிழ்நாட்டின் விவசாயி பதிவு போர்ட்டலான tnfr.agristack.gov.in -க்கு செல்லவும். இங்கே, Official மற்றும் Farmer ஆகிய இரண்டிலும் விவசாயி விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து புதிய கணக்கை உருவாக்கவும்.

- அதன் பின்னர் ஆதார் eKYC மற்றும் மொபைல் OTP சரிபார்ப்பைச் செய்ய வேண்டும்.

- கடவுச்சொல்லை உருவாக்கி லாக் இன் செய்யவும்.

- "Register as Farmer" என்பதைக் கிளிக் செய்யவும்.

- தனிப்பட்ட விவரங்கள், நில விவரங்கள், ரேஷன் கார்டு, குடும்ப ஐடி ஆகியவற்றை நிரப்பவும்.

- Fetch Land Details -இல் இருந்து நில விவரங்களை நிரப்பவும்.

- சமர்ப்பித்து eSign செய்யவும்.

- பதிவு முடிந்ததும், உங்களுக்கு விவசாயி சேர்க்கை ஐடி கிடைக்கும்.

- சரிபார்ப்புக்குப் பிறகு, விவசாயிகளின் பெயரில் 11 இலக்க மைய ஐடி அதாவது விவசாயி ஐடி உருவாக்கப்படும்.

தமிழ்நாடு விவசாயிகளைப் போலவே, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, அசாம், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களின் விவசாயிகளும் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களுக்கு சென்று கிசான் ஐடிக்கு விண்ணப்பிக்கலாம். மாநில வாரியான போர்ட்டலின் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு - tnfr.agristack.gov.in

உத்தர பிரதேசம் - upfr.agristack.gov.in

ராஜஸ்தான் - rjfr.agristack.gov.in

மத்தியப் பிரதேசம் - mpfr.agristack.gov.in

சத்தீஸ்கர் - cgfr.agristack.gov.in

மகாராஷ்டிரா - mhfr.agristack.gov.in

குஜராத் - gjfr.agristack.gov.in

அசாம் - asfr.agristack.gov.in

ஒடிசா - odfr.agristack.gov.in

ஆந்திரப் பிரதேசம் - apfr.agristack.gov.in

கர்நாடகா - kafr.agristack.gov.in

இதுவரை எத்தனை விவசாயிகள் தங்கள் டிஜிட்டல் ஐடிகளை பெற்றுள்ளனர்?

மத்திய அரசின் வேளாண் அமைச்சகம், மாநில அரசுகளுடன் இணைந்து, இதுவரை 14 மாநிலங்களைச் சேர்ந்த 6.1 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் விவசாயி அடையாள அட்டைகளை (விவசாயி ஐடி) வழங்கியுள்ளது. இந்தத் தகவல் சமீபத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026-27 (FY27) நிதியாண்டுக்குள் 11 கோடி விவசாயிகளை இந்த தனித்துவமான டிஜிட்டல் ஐடியுடன் இணைக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. இந்த "கிசான் ஐடி" ஆதார் அட்டையைப் போலவே இருக்கும். அதில் விவசாயியின் நிலம், விதைக்கப்பட்ட பயிர்கள், கடன் நிலை மற்றும் காப்பீட்டு விவரங்கள் பதிவு செய்யப்படும்.

இதுவரை அதிகபட்ச விவசாயிகளுக்கு டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்ட மாநிலங்கள்:

உத்தரப்பிரதேசம் - 1.3 கோடி

மகாராஷ்டிரா - 99 லட்சம்

மத்தியப் பிரதேசம் - 83 லட்சம்

ராஜஸ்தான் - 75 லட்சம்

ஆந்திரப் பிரதேசம் - 45 லட்சம்

குஜராத் - 44 லட்சம்

தமிழ்நாடு - 30 லட்சம்

இது தவிர, பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், தெலுங்கானா, கேரளா, அசாம் மற்றும் பிற மாநிலங்களிலும் இந்தப் பணி வேகமாக நடந்து வருகிறது.

இந்த முழு செயல்முறையும் மத்திய அரசின் லட்சியமான அக்ரிஸ்டாக் டிஜிட்டல் திட்டத்தின் கீழ் நடைபெறுகிறது. இது திட்டங்களின் பலன்களை எந்த தாமதமும் இல்லாமல் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2026 நிதியாண்டில் மேலும் 3 கோடி விவசாயிகளையும், 2027 நிதியாண்டில் மேலும் 2 கோடி விவசாயிகளையும் சேர்க்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. விவசாயிகள் இந்த ஐடியில் சரியான நேரத்தில் சேரவில்லை என்றால், அரசாங்க உதவி பெறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

Farmer Registry நன்மைகள்

- விவசாயிகளுக்கு நேரடியாக திட்டங்களின் நன்மைகள் கிடைக்கும்.

- அவ்வப்போது ஆவணங்களை வழங்கத் தேவையிருக்காது.

- கடன், இழப்பீடு மற்றும் மானியம் வழங்கும் செயல்முறை எளிமைப்படுத்தப்படும்.

- போலி பயனாளிகள் நீக்கப்படுவார்கள்.

PM Kisan: பிஎம் கிசான் தவணை கிடைக்காமல் போகலாம்

பிஎம் கிசான் சம்மான் நிதி போன்ற அனைத்து அரசு திட்டங்களின் பலன்களும் பதிவு முடிந்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே, நீங்கள் இன்னும் விவசாயி பதிவைச் செய்யவில்லை என்றால், விரைவில் அதைச் செய்வது நல்லது. 

PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?

பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் 20வது தவணையை அரசாங்கம் விரைவில் வெளியிட உள்ளது. 20வது தவணை ஜூன் மற்றும் ஜூலை 2025 க்கு இடையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 மாத சுழற்சியின் அடிப்படையில் பார்த்தால், 20வது தவணைக்கான நேரம் ஜூன் 2025 இல் நிறைவடையும். பதிவு முழுமையடையவில்லை என்றால், தவணை பணம் நிறுத்தப்படலாம் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.

மேலும் படிக்க | CGHS புதிய விதிகள்: ஊழியர்களுக்கு அறிமுகம் ஆகும் பெரிய சீர்திருத்தங்கள், புதிய வசதிகள்...முக்கிய அப்டேட்

மேலும் படிக்க |  8வது ஊதியக்குழுவில் ஹேப்பி நியூஸ்: கம்யூட்டேஷன் பென்ஷன் மீட்பு விதிகளில் மாற்றம்? முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News