)
Gratuity Rules: பணி ஓய்வுக்கு பிறகு கிடைக்கும் நன்மைகளில் ஓய்வூதியமும் கிராஜுவிட்டியும் மிகவும் முக்கிய அம்சங்களாக உள்ளன. தேசிய ஓய்வூதிய முறையான NPS -இன் கீழ் பணிபுரியும் நபரா நீங்கள்? வேலையை விட்ட பிறகு பணிக்கொடை எப்படி கிடைக்கும் என்ற சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சில காலமாக, பணிக்கொடை குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஊழியர்களுக்கு பணிக்கொடை எப்போது கிடைக்கும்? எந்த சூழ்நிலையில் பணிக்கொடை கிடைக்காது? ஒரு வேலையை விட்டு வெளியேறும்போது, முந்தைய சேவை முடிந்ததாகக் கருதப்படுமா? இப்படி பலருக்கு பல கேள்விகள் உள்ளன.
அரசாங்கம் இப்போது இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் தெளிவான பதில்களை வழங்கியுள்ளது. கிராஜுவிட்டி பிரச்சினை குறித்து குழப்பத்தில் இருந்த லட்சக்கணக்கான NPS ஊழியர்களுக்கு இது குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்கும்.
NPS ஊழியர்கள் எந்த நிபந்தனைகளின் கீழ் பணிக்கொடை மற்றும் இறப்பு பணிக்கொடையைப் பெறுவார்கள்? எப்போது அவர்கள் அதற்குத் தகுதியற்றவர்களாவார்கள்? இவற்றை தெளிவுபடுத்தும் அலுவலக குறிப்பாணையை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. இந்த தெளிவுபடுத்தல் அரசாங்கத்தால் தொடர்ந்து பெறப்படும் ஏராளமான RTI -கள் மற்றும் விசாரணைகளைத் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, குறைந்தது 5 வருட சேவையை முடித்த பிறகு, என்பிஎஸ் சந்தாதாரர் கீழ்வரும் சூழல்களின் அடிப்படையில் பணி ஓய்வு பெற்றால் மாட்டுமே அவருக்கு பணிக்கொடை கிடைக்கும்.
- சூப்பரானுவேஷன்: அதாவது பரிந்துரைக்கப்பட்ட பணி ஓய்வு வயதில் ஓய்வு பெறுதல்.
- நோய் அல்லது இயலாமை காரணமாக ஓய்வு பெறுதல்.
- அரசாங்கம் முன்கூட்டியே அவரை பணி ஓய்வு பெற வைத்தல்.
- சிறப்பு தன்னார்வ ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வேலையை விட்டு வெளியேறுதல்.
ஒரு ஊழியர் ஒரு அரசு நிறுவனத்தில் அல்லது முழுமையாக அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனத்தில் உள்வாங்கப்பட்டால், அந்த நிலையிலும் அவர் ஓய்வு பெற்றவர்களாகக் கருதப்படுவார். ஆகையால் அவருக்கு பணிக்கொடை கிடைக்கும். இந்த சந்தர்ப்பங்களில், பணியாளருக்கு அவர்களின் சேவை மற்றும் கடைசி சம்பளத்தின் அடிப்படையில் பணிக்கொடை வழங்கப்படும்.
நேரடி ராஜினாமா கொடுக்கப்பட்டால், சேவை காலம் நிறுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது என்றும் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது முந்தைய அனைத்து சேவைகளும் இந்த ராஜினாமாவுடன் நிறுத்தப்படும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பணிக்கொடை வழங்கப்படாது. இருப்பினும், இந்த விதிக்கு சில விதிவிலக்குகள் உள்ளன.
இந்த சந்தர்ப்பங்களில் ராஜினாமா செய்தால் பணிக்கொடை நிறுத்தப்படாது:
- ஒரு ஊழியர் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வேறு அரசு வேலையில் சேர துறையின் அனுமதியுடன் ராஜினாமா செய்தால்.
- விதி 32 இன் கீழ் ராஜினாமா செய்யப்பட்டால், அதாவது, ஊழியர் ஒரு அரசு நிறுவனம், வாரியம் அல்லது அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனத்தில் உள்வாங்கப்படும் போது.
- இந்த சந்தர்ப்பங்களில், ஊழியரின் முந்தைய சேவை அப்படியே இருக்கும், மேலும் அவர்களுக்கு பணிக்கொடையின் பலன் கிடைக்கும்.
ஒரு ஊழியர் ராஜினாமா செய்து, அந்த ராஜினாமா மேலே குறிப்பிடப்பட்ட விதிவிலக்குகளின் கீழ் வரவில்லை என்றால் அவருக்கு பணிக்கொடை கிடைக்காது.
- ராஜினாமா தொழில்நுட்ப ரீதியாக இல்லை என்றால் அவருக்கு பணிக்கொடை கிடைக்காது.
- ஊழியர் வேறு அரசு நிறுவனத்திலும் அப்சர்வ் செய்யப்படாமல் ராஜினாமா செய்தால், அவரது முந்தைய சேவை நிறைவடைந்ததாக கருதப்படும்.
- அவர் 5 ஆண்டுகள் சேவையை முடித்திருந்தாலும் இந்த விதி பொருந்தும் என அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளது.
அரசாங்கத்தின் இந்தப் புதிய தெளிவு, தங்கள் வேலையை இடைக்காலத்தில் மாற்ற நினைப்பவர்களுக்கு அல்லது வேறு அரசு நிறுவனத்திற்கு மாற்றப்படப் போகிறவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
கிராஜுவிட்டி விதிகள் சுருக்கமாக.....
- ஓய்வு பெறும்போது பணிக்கொடை வழங்கப்படும்.
- நோய், பணிநீக்கம் அல்லது வேறு அரசு நிறுவனத்தில் அபசர்வ் செய்யப்படும்போது பணிக்கொடை வழங்கப்படும்.
- ஊழியர்கள் நேரடியாக ராஜினாமா செய்தால் பணிக்கொடை வழங்கப்படாது.
- தாமாக அப்சர்வ் செய்யப்படாமல் வேலைகளை மாற்றினாலும் பணிக்கொடை வழங்கப்படாது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ