NPS முதலீடு... 55வது வயதில் கையில் ரூ.3.7 கோடி... மாதா மாதம் ரூ.85,000 பென்ஷனும் உண்டு

தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு தன்னார்வ அடிப்படையிலான நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 11, 2025, 09:36 AM IST
  • ஆண்டு முதலீட்டு தொகையை அதிகரிப்பதன் மூலம் ஓய்வூதியத்தையும் அதிகரிக்கலாம்
  • ரூ.3.7 கோடி நிதிக்கான எளிய கணக்கீடு.
  • கூட்டு வட்டியின் மூலம் பணம் பன்மடங்காகும்.
NPS முதலீடு... 55வது வயதில் கையில் ரூ.3.7 கோடி... மாதா மாதம் ரூ.85,000 பென்ஷனும் உண்டு

ஓய்வு பெறும் நேரத்தில் கையில் கோடிகளில் பணம் இருந்தால், வருமானத்தை பற்றி கவலைப் படாமல் நிம்மதியாக வாழலாம். சரியான திட்டமிடலுடன் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் ஓய்வு பெறும்போது ரூ.3.7 கோடி இருக்கும். இதற்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு தன்னார்வ அடிப்படையிலான நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும்.

Add Zee News as a Preferred Source

ஓய்வு காலத்தில் கையில் ரூ.3.7 கோடிக்கு மேல் நிதி

NPS திட்டத்தில் ரூ.20,000 முதலீடு செய்வதன் மூலம், ஓய்வு காலத்தில் ரூ.3.7 கோடிக்கு மேல் நிதியை உருவாக்கலாம். ஓய்வு காலத்தில் சுமார் ரூ.3 கோடி நிதியை நீங்கள் விரும்பினால், இப்போதே NP திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்குங்கள். உங்களுக்கு இப்போது 35 வயது என்றால், NPS மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்தால், சராசரியாக 9-12% வருமானத்தை எதிர்பார்க்கலாம். இந்த முதலீட்டில் அடுத்த 20 ஆண்டுகளில் ரூ.3 கோடி நிதியை உருவாக்க முடியும்.

NPS திட்டத்தில் நீண்ட காலதொடர் முதலீடு அவசியம்

ஓய்வு பெறும் நேரத்தில் பணத்தைப் பற்றி கவலைப்படுவதைத் தவிர்க்க, சரியான நிதி திட்டமிடலும், நீண்ட காலத்திற்கு தொடர் முதலீடு செய்வது அவசியம். தற்போது உங்களுக்கு 35 வயதாக உள்ள நிலையில், அடுத்த 20 ஆண்டுகளில் ரூ.3.7 கோடி நிதியை உருவாக்கலாம். தற்போது சர்வீஸில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு மாதமும் ரூ.20,000 NPS திட்டத்தில் முதலீடு செய்தால், இது சாத்தியமாகும்.

கூட்டு வட்டியின் மூலம் பணம் பன்மடங்காகும்

NPS திட்டத்தில், நீங்கள் சராசரியாக ஆண்டுக்கு 9 முதல் 12 சதவீதம் வரை வருமானத்தை எளிதாகப் பெறலாம். உங்கள் 35வது வயதில், NPS திட்டத்தில் மாதம் ரூ.20,000 என்ற அளவில் முதலீட்டை தொடங்கினால் , 20 ஆண்டுகளில் ரூ.3.7 கோடிக்கு மேல் நிதியை உருவாக்கலாம். முதலீடு செய்து வந்தால், கூட்டு வட்டியின் மூலம் கோடிக்கணக்கில் உங்கள் கணக்கில் கார்பஸ் சேர்ந்துவிடும். ஓய்வு காலம் குறித்த கவலை ஏதும் இல்லாமல் இருப்பதோடு, உங்களின் வருங்கால தலைமுறையினருக்கும் நீங்கள் நல்ல செல்வத்தை உருவாக்கி இருப்பீர்கள்.

ரூ. 3 கோடி நிதிக்கான எளிய கணக்கீடு

NPS திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.20,000 முதலீடு செய்தால், உங்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு 9 சதவீத வருமானம் கிடைக்கும். இந்த முதலீட்டை 20 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால், 3.7 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை உருவாக்க முடியும். 20 ஆண்டுகளில் உங்கள் முதலீடு ரூ.96,00,000 ஆக இருக்கும். இதில், உங்களுக்கு ரூ.8,40,26,405 வட்டி வருமானம் கிடைக்கும். இதில் கிடைக்கும் முதிர்வுத் தொகை ரூ.9,36,26,405 ஆக இருக்கும். எல்லாவற்றையும் சேர்த்தால் மொத்த நிதி ரூ.3,74,50,562 என்ற அளவில் இருக்கும்.

 ஆண்டு முதலீட்டு தொகையை அதிகரிப்பதன் மூலம் மாதாந்திர ஓய்வூதியத்தையும் அதிகரிக்கலாம்

முதலீட்டுத் தொகையில் 60% வரை தொகையை திரும்பப் பெறலாம். பின்னர் 40% வருடாந்திர முதலீடு அல்லது ஆண்டு முதலீடு தொகை அவசியம். இதனை அதிகரிக்கலாம் ஆனால் குறைக்க இயலாது. NPS திட்டத்தில் ஆண்டு முதலீட்டு தொகையை அதிகரிப்பதன் மூலம் (Annuity) மாதாந்திர ஓய்வூதியத்தையும் அதிகரிக்கலாம், ரூ.3.7 கோடியில் 40% தொகையை, அதாவது ரூ.2 கோடியை எடுத்துக் கொண்டு மீதமுள்ள ரூ.1.7 கோடியை உங்கள் கணக்கிலேயே ஆண்டுத்தொகையாக தொடருவதன் மூலம் மாதா மாதம் ரூ.85,000 பென்ஷனாக பெறுவீர்கள். உங்கள் காலத்திற்கு பின் உங்கள் நாமினி வருடாந்திர முதலீட்டுத் தொகையான ரூ.1.7 கோடி பெறுவார். முதலீட்டுத் தொகையில் 60% தொகையை திரும்பப் பெறுவதற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும். என்பதும் குறிப்பிடத்தக்கது 

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதில் முதலீடு செய்வதற்கு முன், NPS வருமானம் பற்றிய முழுமையான தகவலை பெற உங்களின் நிதி சார்ந்த ஆலோசகருடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | SIP Mutual Fund: கோடீஸ்வர கனவை நனவாக்க... மாதம் ரூ.3000 முதலீடு போதும்... எளிய கணக்கீடு இதோ

மேலும் படிக்க | SWP: ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்க உதவும் பரஸ்பர நிதியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News