)
Central Government Employees Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய முறையை NPS இலிருந்து UPS -க்கு மாற்றுவதற்கான வசதியை மத்திய அரசு அளிக்கின்றது. ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திலிருந்து (UPS) தேசிய ஓய்வூதியத் அமைப்பிற்கு (NPS) மாறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30, 2025 ஆகும்.
UPS இன் கீழ் தகுதியுள்ள ஊழியர்கள் ஒரு முறை NPS க்கு மாறலாம். ஆனால், UPS க்கு திரும்ப அவர்களுக்கு வழி இருக்காது என நிதிச் சேவைகள் துறை பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய முறையில் ஏற்படும் மாற்றங்கள், இரண்டு ஓய்வூதிய முறைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் குறித்து அறிந்து தேர்வை செய்வது நல்லது.
ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு குறைந்தது ஒரு வருடம் முன்பு அல்லது தன்னார்வ ஓய்வுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு NPS க்கு மாறலாம். தகுதியுள்ள ஊழியர்கள் மற்றும் NPS இன் கீழ் ஓய்வு பெற்றவர்கள் UPS ஐத் தேர்வுசெய்ய கடைசி தேதி செப்டம்பர் 30, 2025 ஆகும்.
வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்கள், பணிநீக்கம் அல்லது கட்டாய ஓய்வு அல்லது அபராதமாக ஒழுங்கு நடவடிக்கைகள் தற்போது நடந்து கொண்டிருக்கும் அல்லது திட்டமிடப்பட்டிருக்கும் வழக்குகளுக்கு இந்த மாற்றத்திற்கான வசதி அனுமதிக்கப்படாது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் UPS -ஐத் தேர்வு செய்யாதவர்கள் டீஃபால்டாக, அதாவது இயல்புநிலையாக UPS இன் கீழ் தொடர்வார்கள். NPS இல் இருக்கத் தேர்வுசெய்யும் ஊழியர்கள் செப்டம்பர் 30, 2025 க்குப் பிறகு UPS ஐத் தேர்வுசெய்ய முடியாது.
ஊழியர்கள் பின்னர் UPS இலிருந்து NPS க்கு மாற வழிவகை உள்ளது. ஓய்வுக்குப் பிந்தைய நிதிப் பாதுகாப்பைத் திட்டமிடுவதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு தகவலறிந்த தேர்வை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
- NPS, சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ள திட்டமாகும். இதில் வருமானம் பங்குகள் மற்றும் கடன் செயல்திறனைப் பொறுத்தது. எனினும், UPS கடைசியாகப் பெற்ற சம்பளத்தின் அடிப்படையில் உறுதியான ஓய்வூதியப் பணத்தை வழங்குகிறது.
- NPS சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது. ஆனால், UPS குறைந்த ஆபத்தைக் கொண்டுள்ளது. இதில் ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
- NPS இன் தொகை முதலீடுகள் மூலம் திரட்டப்பட்ட கார்பஸைப் பொறுத்தது. மறுபுறம், UPS -இல், 10 வருட சேவைக்குப் பிறகு மாதா மாதம் ரூ.10,000 குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ