)
NPS vs UPS: ஏப்ரல் 1, 2025 முதல், அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் (ஆயுதப்படைகள் தவிர) தேசிய ஓய்வூதிய முறை (NPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) என இரண்டு ஓய்வூதியத் திட்டங்களில் இருந்து தேர்வு செய்யும் விருப்பத்தைப் பெறுவார்கள். ஜனவரி 2004 இல் தொடங்கப்பட்ட தேசிய ஓய்வூதிய முறை (National Pensin System), பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (Old Pension Scheme) மாற்றாக அமைந்தது. இது மத்திய அரசின் கீழ் உள்ள அனைத்து துறைகளையும் உள்ளடக்கியது.
Unified Pension Scheme: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) என்பது அரசாங்கத்தால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு புதிய ஓய்வூதியத் திட்டமாகும். இது ஏப்ரல் 2025 முதல் நடைமுறைக்கு வரும்.
NPS vs UPS: முக்கிய வேறுபாடுகள் மற்றும் அம்சங்கள் என்ன?
- NPS சந்தை அடிப்படையிலான முதலீட்டுத் திட்டமாகும்.
- இதில் வருமானம் சந்தை நிலையைப் பொறுத்தது.
- இதற்கு நேர்மாறாக, UPS உத்தரவாதமான ஓய்வூதியத் திட்டமாகும்.
- இதில் அரசாங்கப் பாதுகாப்பு கிடைப்பதால், இது குறைந்த ஆபத்தைக் கொண்டுள்ளது.
- மேலும், இதில் முதலாளியின் (அரசு) பங்களிப்பு NPS ஐ விட அதிகமாக உள்ளது.
- UPS இன் கீழ், அரசாங்கம் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி (DA) தொகையில் 18.5% பங்களிக்கும்.
- பணியாளரின் பங்களிப்பு 10% ஆக இருக்கும்
Pension: ஓய்வூதிய உத்தரவாதம்
NPS-ல் நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் இல்லை. ஆனால், UPS -இல் சராசரி அடிப்படை சம்பளத்தின் ஒரு சதவீதத்தின் அடிப்படையில் உத்தரவாதமான ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.
Investment: முதலீட்டு விருப்பங்கள்
NPS-ன் கீழ், ஒருவர் பங்குகள், கடன் மற்றும் பிற சந்தை-இணைக்கப்பட்ட நிதிகளில் முதலீடு செய்யும் விருப்பத்தைப் பெறுகிறார். ஆனால், UPS முக்கியமாக அரசாங்க பத்திரங்கள் மற்றும் பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்கிறது.
Employer contribution: முதலாளி பங்களிப்பு
UPS-ல் அரசாங்கத்தின் பங்களிப்பு NPS-ஐ விட அதிகமாக உள்ளது. இது ஓய்வுக்குப் பிறகு நிலையான ஓய்வூதியத்தை வழங்க உதவுகிறது.
Risk: எதில் ஆபத்து அதிகம்
NPS-ல் செய்யப்படும் முதலீடு சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இதில் ஆபத்து அதிகமாகவே இருக்கும். ஆனால், UPS ஒரு குறைந்த ஆபத்துள்ள திட்டமாகும். ஏனெனில் இது ஒரு நிலையான ஓய்வூதியத்தை வழங்குகிறது.
இரண்டு திட்டங்களிலும் ரூ.1 லட்சம் மாதாந்திர ஓய்வூதியம் பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? எந்த திட்டம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்? அதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Unified Pension Scheme: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்
UPS -இல் 35 வருட சேவைக்குப் பிறகு ரூ.1 லட்சம் ஓய்வூதியத்தை எவ்வாறு உறுதி செய்வது? ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒருவர் ஏப்ரல் 1, 2025 அன்று 25 வயதில் அரசுப் பணியில் சேர்ந்து 60 வயதில் ஓய்வு பெறுகிறார். அதாவது அவர் 35 ஆண்டுகள் பணியாற்றினார் என்று வைத்துக்கொள்வோம்.
ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடைசி 12 மாதங்களின் சராசரி அடிப்படை சம்பளம் மாதத்திற்கு ரூ.2 லட்சமாக இருந்தால், UPS இன் கீழ், உத்தரவாதமான ஓய்வூதியம், சராசரி ஊதியத்தின் 50%, அதாவது மாதத்திற்கு ரூ.1 லட்சம் கிடைக்கும்.
இது தவிர, பணவீக்கத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியத்தை அதிகரிக்க UPS ஒரு விதியைக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு 4.5% அதிகரிப்பைக் கருதினால், 61 வயதில் ஓய்வூதியம் ரூ.1,04,500 ஆக இருக்கும்.
National Pension System: தேசிய ஓய்வூதிய அமைப்பு
NPS: ரூ.1 லட்சம் ஓய்வூதியத்திற்கு எவ்வளவு முதலீடு தேவை? ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒருவர் 25 வயதில் வேலை செய்யத் தொடங்கி 60 வயதில் ஓய்வு பெற்றால், அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.16,800 முதலீடு செய்ய வேண்டும் (10% ஊழியர் பங்களிப்பு மற்றும் 14% அரசு பங்களிப்பு).
முழுமையான கணக்கீடு:
NPS திட்டத்தில் சேரும் வயது: 25 வயது
மாதாந்திர பங்களிப்பு (பணியாளர் + அரசு): ரூ.16,800
எதிர்பார்க்கப்படும் முதலீட்டு வருமானம்: 9%
மொத்த முதலீடு: ரூ.70.6 லட்சம்
மொத்த வருமானம்: ரூ.4.27 கோடி
நிறைவுத் தொகை: ரூ.4.98 கோடி
ஓய்வூதியத்திற்காக ஒதுக்கப்பட்ட 40% நிதி: ரூ.1.99 கோடி
எதிர்பார்க்கப்படும் ஓய்வூதிய வருமானம்: 6%
மொத்தமாக திரும்பப் பெறுதல் (60%): ரூ.2.99 கோடி
மாதாந்திர ஓய்வூதியம்: ரூ.1 லட்சம்
NPS இன் வரிச் சலுகைகள்:
NPS -இல் முதலீட்டு செய்யும் நபர்கள் பிரிவு 80CCD (1B) இன் கீழ் கூடுதல் வரி விலக்கு பெறுகிறார்கள். இதன் கீழ், ரூ.50,000 கூடுதல் விலக்கு பெறலாம், இது ரூ.1.5 லட்சம் பிரிவு 80C விலக்குடன் கூடுதலாகும். இதனால், NPS முதலீட்டாளர்கள் மொத்தம் ரூ.2 லட்சம் வரை வரிச் சலுகையைப் பெறலாம். 30% வரி அடுக்கில் வரும் நபர்கள், NPS இல் முதலீடு செய்வதன் மூலம் ரூ.62,400 வரை வரியைச் சேமிக்கலாம்.
NPS vs UPS: ஒப்பீடு ஏன் முக்கியமாகின்றது?
ஓய்வூதியம் என்பது ஒரு முக்கியமான நிதி முடிவாகும். சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது உங்கள் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யும். 2025 ஆம் ஆண்டில் UPS அறிமுகம் ஆன பிறகு, NPS, UPS இடையிலான ஒப்பீடு இன்னும் முக்கியமானதாகிவிட்டது. NPS சிறந்த வருமானத்தை அளிக்கும் திறனைக் கொண்டிருந்தாலும், UPS அரசு ஊழியர்களுக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு எது சிறந்தது?
அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் சிறந்த தேர்வாக இருக்குமா, அல்லது தேசிய ஓய்வூதிய அமைப்பு சரியான திட்டமாக இருக்குமா? வரும் நாட்களில் இது குறித்து மேலும் விவாதம் நடக்கலாம். UPS அமலுக்கு வந்து இதற்கான இன்னும் பல விவரங்கள் வெளிவந்தவுடன் ஊழியர்களால் இன்னும் தெளிவான முடிவை எடுக்க முடியும் என நம்பப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ