NPS vs UPS: பணி ஓய்வுக்குப் பிறகு நிதிப் பாதுகாப்பு மிகவும் அவசியம். அரசு ஊழியர்களுக்கு தற்போது பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme), தேசிய ஓய்வூதிய முறை (National Pension System) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme) என 3 வகையான ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளன. இவற்றில் UPS எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும். தற்போது தேசிய ஓய்வூதிய முறை ஊழியர்களுக்கான ஓய்வூதிய முறையாக உள்ளது. என்பிஎஸ் உறுப்பினர்கள் இனி யுபிஎஸ் -ஐ தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏற்ற சிறந்த திட்டம் எது?
இந்த இரண்டு திட்டங்களில் (NPS vs UPS) உங்களுக்கு எது ஏற்ற திட்டமாக இருக்கும்? நன்மைகள், முதலீட்டு விருப்பங்கள், வருமானம், வரிச் சலுகைகள் மற்றும் ஆபத்து காரணிகள் ஆகியவற்றின் முழுமையான ஒப்பீட்டை இங்கே காணலாம்.
National Pension System: அதிக வருமானத்துடன் சந்தை ஆபத்தும் இருக்கும்
NPS என்பது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படும் ஒரு சந்தை-இணைக்கப்பட்ட முதலீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் இரண்டு வகையான கணக்குகள் உள்ளன - டயர் 1 மற்றும் டயர் 2.
NPS -இன் முக்கிய நன்மைகள்
- நீண்ட கால உயர் வருமானம்: முதலீட்டாளர்கள் பங்கு மற்றும் கடன் நிதிகளின் கலவையைப் பெறுகிறார்கள். இது நீண்ட காலத்திற்கு சிறந்த வருமானத்திற்கு வழிவகுக்கிறது.
- 60% வரை வரி இல்லாத மொத்தத் தொகை திரும்பப் பெறுதல்: ஓய்வு பெற்ற பிறகு, 60% தொகையை மொத்தமாக எடுக்கலாம். இதற்கு வரி விதிக்கப்படாது.
- ஆனுவிட்டியில் 40% முதலீடு: முதலீட்டாளர்கள் 40% தொகையை ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் அவர்களுக்கு மாதா மாதம் ஓய்வூதியம் கிடைக்கும்.
- வரிச் சலுகைகள்: NPS பிரிவுகள் 80C மற்றும் 80CCD(1B) இன் கீழ் ரூ.2 லட்சம் வரை வரிச் சலுகைகள் கிடைக்கின்றன.
மாதந்தோறும் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெறுவது எப்படி?
ஒருவர் 40 வயதிலிருந்து ஒவ்வொரு மாதமும் NPS-ல் ரூ.20,000 முதலீடு செய்து, அதை ஒவ்வொரு ஆண்டும் 10% அதிகரித்தால், அவரது மொத்த நிதி 60 வயதில் ரூ.3.23 கோடியாக மாறும்.
10% அடிப்படையில் மதிப்பிடப்பட்ட வருமானம்:
- மொத்தமாக பணத்தை திரும்பப் பெறுதல்: ரூ.1.62 கோடி
- ஆண்டுத்தொகை முதலீடு: ரூ.1.62 கோடி (55% பங்கு)
- ஆண்டுத்தொகை விகிதம்: 8%
- மாதாந்திர ஓய்வூதியம்: ரூ.1 லட்சம்
Unified Pension Scheme: உத்தரவாதமான ஓய்வூதியத்துடன் நிலையான வருமானம்
UPS என்பது மத்திய அரசு ஊழியர்களுக்காக ஏப்ரல் 1, 2025 முதல் அறிமுகம் ஆகும் புதிய ஓய்வூதியத் திட்டமாகும். இந்தத் திட்டம் பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தையின் ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படாது. இது ஒரு பாதுகாப்பான விருப்பமாக அமைகிறது.
UPS இன் முக்கிய நன்மைகள்
- குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10,000 -க்கு உத்தரவாதம்: எந்த சூழ்நிலையிலும் ஊழியர்களுக்கு ரூ.10,000 க்கும் குறைவான ஓய்வூதியம் கிடைக்காது.
- நிலையான வருமானப் பாதுகாப்பு: பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படாது.
- பணவீக்கத்துடன் இணைக்கப்பட்ட ஓய்வூதியம்: பணவீக்கத்தைப் பொறுத்து ஓய்வூதியம் அவ்வப்போது அதிகரிக்கும்.
- குடும்ப ஓய்வூதியம்: ஊழியர் இறந்த பிறகும் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
- பணிக்கொடை சலுகை: பணி ஓய்வு பெறும் போது பணிக்கொடை வழங்கப்படும்.
UPS-ல் ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படும்?
UPS இல் ஓய்வூதியக் கணக்கீடு ஒரு நிலையான சூத்திரத்தின் அடிப்படையில் இருக்கும்:
ஓய்வூதியம் = (12 மாத அடிப்படை ஊதியத்தின் கூட்டுத்தொகை ÷ 12) × 50%
ஒரு ஊழியர் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினால், ஓய்வூதிய கணக்கீடு இப்படி இருக்கும்:
- சராசரி அடிப்படை சம்பளம்: ரூ.1,00,000
- 50% ஊதியம்: மாதத்திற்கு ரூ.50,000 ஓய்வூதியம்
சேவைக்காலம் 25 வருடங்களுக்கும் குறைவாக இருந்தால் (எ.கா. 20 ஆண்டுகள்), இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தி விகிதாசார அடிப்படையில் ஓய்வூதியம் குறைக்கப்படும்.
உதாரணமாக:
- 20 வருட சேவைக்குப் பிறகு ஓய்வூதியம்: மாதத்திற்கு ரூ.40,000
- ரூ.15,000 அடிப்படை சம்பளத்தில் குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியம்: ரூ.10,000
NPS vs UPS: முக்கிய ஒப்பீடுகள்
வருவாய் வகை:
NPS - சந்தை-இணைக்கப்பட்டது
UPS - உத்தரவாத வருமானம்
மாதாந்திர ஓய்வூதியம்
NPS - ஆனுவிட்டி தொகையை சார்ந்து இருக்கும்
UPS - நிலையான ஓய்வூதியம்
மொத்தமாக பணம் எடுக்கும் முறை
NPS - 60% வரை வரி விலக்கு
UPS - வரி விலக்கு இல்லை
ஓய்வூதிய அதிகரிப்பு
NPS - சந்தை போக்கை பொறுத்தது
UPS - பணவீக்கத்தைப் பொறுத்தது.
வரி விலக்கு
NPS - 80C மற்றும் 80CCD(1B) பிரிவின் கீழ் ரூ.2 லட்சம் வரை வரி விலக்கு
UPS - அரசு ஊழியர்களுக்கு மட்டும்
குடும்ப ஓய்வூதியம்
NPS - விருப்பத்தேர்வு
UPS - உத்தரவாதம் உண்டு
உங்களுக்கு எந்த திட்டம் சரியானது?
- நீங்கள் அதிக சந்தை சார்ந்த வருமானத்தை விரும்பும் நபராகவும், ஆபத்துக்களை எடுக்க தயாராக இருக்கும் நபராகவும் இருந்தால், NPS உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
- உங்களுக்கு உத்தரவாதமான ஓய்வூதியம் மற்றும் நிலையான வருமானப் பாதுகாப்பு தேவைப்பட்டால், UPS உங்களுக்கு ஏற்றது.
- அரசு ஊழியர்களுக்கு UPS ஒரு நல்ல வழி, ஆனால் அவர்கள் UPS-ஐத் தேர்ந்தெடுத்தவுடன் NPS-க்கு மீண்டும் மாற முடியாது.
(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் உங்கள் நிதி இலக்குகள், ஆபத்துகளை எதிர்கொள்ளும் திறன் மற்றும் முதலீட்டுத் திறன்களை மனதில் கொள்ளுங்கள். உங்கள் நிதி ஆலோசகரை தொடர்பு கொள்ளவும் பரிந்துரைக்கபப்டுகின்றது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









