NSC vs FD: மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏற்ற முதலீட்டு திட்டம் எது?

NSC vs FD: இந்த பதிவில் நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களுக்கு தேசிய சேமிப்புச் சான்றிதழ் மற்றும் நிரந்தர வைப்புத்தொகை ஆகிய இரு திட்டங்களில் எது சிறந்ததாக இருக்கும் என தெரிந்துகொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 14, 2025, 04:04 PM IST
  • தேசிய சேமிப்புச் சான்றிதழ் vs நிலையான வைப்புத்தொகை.
  • நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களுக்கு எது சிறந்தது?
  • முழுமையான ஒப்பீடு இதோ.
NSC vs FD: மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏற்ற முதலீட்டு திட்டம் எது?

Best Investment Scheme: முதலீடு செய்வது முக்கியம். அது பாதுகாப்பான முதலீடாக இருக்க வேண்டியது அதைவிட முக்கியம். பாதுகாப்பான முதலீட்டில், திட்ட காலம் முடிவடைந்தவுடன் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். நிலையான வைப்புத்தொகைகளில் மட்டுமே முதலீடு பாதுகாப்பாக இருக்கும் என பலர் கருதுகிறார்கள். ஆனால், அப்படி அல்ல. பாதுகாப்பான முதலீட்டையும், நல்ல வருமானத்தையும் அளிக்கும் இன்னும் பல திட்டங்கள் உள்ளன. தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) ஒரு சிறந்த, பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகின்றது. 

Add Zee News as a Preferred Source

NSC vs FD: நடுத்தர வர்க்க மக்களுக்கு எது சிறந்தது?

இந்த பதிவில் நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களுக்கு தேசிய சேமிப்புச் சான்றிதழ் மற்றும் நிரந்தர வைப்புத்தொகை ஆகிய இரு திட்டங்களில் எது சிறந்ததாக இருக்கும் என தெரிந்துகொள்ளலாம். இரு திட்டங்களின் அனைத்து அம்சங்களின் ஒப்பீட்டையும் இங்கே காணலாம்.

National Savings Certificate vs Fixed Deposit: தேசிய சேமிப்புச் சான்றிதழ் vs நிலையான வைப்புத்தொகை

- அரசாங்க ஆதரவு பெற்ற பாதுகாப்பு

NSC மற்றும் FD இரண்டும் பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களாகும். ஆனால் NSC என்பது பாதுகாப்பான மற்றும் அதிக வருமானத்தை விரும்பும் நீண்ட கால முதலீட்டாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட அரசாங்க ஆதரவு பெற்ற சேமிப்புத் திட்டமாகும். NSC நிலையான வட்டி விகிதங்களையும் வருடாந்திர அடிப்படையில் கூட்டு வளர்ச்சிக்கான வசதியையும் வழங்குகிறது. இது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக அமைகிறது.

- காம்பவுண்டிங்

NSC-க்கான வட்டி ஆண்டுதோறும் கூட்டுத்தொகையாகக் கணக்கிடப்படுகிறது. ஆனால், நிலையான வைப்புத்தொகைகள் காலாண்டு கூட்டுத்தொகைக்குத் தகுதியுடையவை. NSC மற்றும் ஐந்து ஆண்டு நிலையான வைப்புத்தொகைகள் இரண்டும் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வரிச் சேமிப்புக்குத் தகுதியுடையவையாக இருக்கின்றன.

- வட்டி செலுத்துதல் மற்றும் கூட்டுத்தொகை

NSC கணக்கில் வட்டி முதலீட்டாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும். முதிர்வு நேரத்தில் அசல் மற்றும் வட்டி செலுத்தப்படும். இருப்பினும், நிலையான வைப்புத்தொகைகள் மாதாந்திர, காலாண்டு அல்லது முதிர்ச்சியில் வட்டி பெறும் விருப்பத்தை வழங்குகின்றன.

- லாக்-இன் காலம் மற்றும் திட்டக்காலம்

தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) 5 ஆண்டுகள் லாக்-இன் காலத்தைக் கொண்டுள்ளது. மறுபுறம், நிலையான வைப்புத்தொகைகளை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை வெவ்வேறு காலகட்டங்களுக்கு முதலீடு செய்யலாம். இரண்டிற்கும் வட்டி விகிதங்கள் மாறுபடும். நிலையான வைப்புத்தொகைகள் 6.5% முதல் 7.5% வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன. அதே நேரத்தில் NSC தற்போது 7.7% அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.

- முதலீட்டு வரம்புகள் மற்றும் வரி சலுகைகள்

நிலையான வைப்புத்தொகைகளை வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் திறக்கலாம். மேலும் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வரி சேமிப்பு வசதி ஐந்து ஆண்டு நிலையான வைப்புத்தொகைகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. தபால் அலுவலக சிறு சேமிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியான NSC, அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லாமல் ரூ.1000 இலிருந்து தொடங்கும் முதலீடுகளை அனுமதிக்கிறது. முதலீட்டாளர்கள் விரும்பும் அளவுக்கு ரூ.100 இன் மடங்குகளில் முதலீடு செய்யலாம்.

- ரென்யூ செய்யும் விருப்பங்கள்

NSC-க்கான காலக்கெடு 5 ஆண்டுகள். மேலும் காலக்கெடு முடிந்த பிறகு கணக்கைப் புதுப்பிக்க முடியாது. இதற்கு நேர்மாறாக, நிலையான வைப்புத்தொகைகள் காலக்கெடு முடிந்த பிறகு தானாகப் புதுப்பிக்கப்படலாம். இதனால் பணம் தானாகவே மீண்டும் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும்.

- நிலையான vs மாறுபடும் வட்டி விகிதங்கள்

ஒரு NSC கணக்கில் முதலீடு செய்யும்போது, ​​வட்டி விகிதம் முழு காலக்கெடுவிற்கும் நிர்ணயிக்கப்படும். இதேபோல், நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்கள் பொதுவாக முதலீட்டின் போது நிர்ணயிக்கப்படும். இருப்பினும், நிலையான வைப்புத்தொகைகள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதலீட்டு காலத்தின் அடிப்படையில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன.

நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களுக்கு எது சிறந்தது?

நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களுக்கு, NSC அதிக வருமானம் (7.7%), வருடாந்திர கூட்டுத்தொகை மற்றும் பிரிவு 80C இன் கீழ் 5 ஆண்டு லாக்-இன் உடன் வரிச் சலுகைகளை வழங்குகிறது. அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் இல்லை. இது நீண்ட கால சேமிப்பிற்கு ஏற்றதாக அமைகிறது. 

மறுபுறம், FD நெகிழ்வான கால அளவு (7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை), வழக்கமான வட்டி செலுத்துதல்கள் (மாதாந்திர/காலாண்டு) மற்றும் பணப்புழக்கத்தை வழங்குகிறது. ஆனால் 5 வருட FD -கள் மட்டுமே வரிச் சலுகைகளுக்குத் தகுதி பெறுகின்றன. அதிக வருமானம் மற்றும் வரி சேமிப்புகளை ஒருவர் விரும்பினால், NSC சிறந்தது. உங்களுக்கு நெகிழ்வுத்தன்மை மற்றும் பணப்புழக்கம் தேவைப்பட்டால், FD சரியான தேர்வாகும்.

(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு பொதுவான தகவல்களுக்காக எழுதப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன் உங்கள் பொருளாதார அலோசகரை கலந்துரையாட பரிந்துரைக்கபப்டுகின்றது.)

மேலும் படிக்க | 50% ஓய்வூதியம் மட்டுமல்ல, அகவிலை நிவாரணமும் கிடைக்கும்: ஏப்ரல் 1 முதல் UPS, புதிய ஓய்வூதிய திட்டம்

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்: PPF... வட்டியில் மட்டுமே கோடிகளில் வருமானம், இப்படி முதலீடு செய்தால் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News