)
Old Pension Scheme Latest News: மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் பல காலமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து போராடி வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வருமா? ஊழியர்கள் தொடர்ந்து ஓபிஎஸ் -க்கான கோரிக்கையை வைப்பதற்கான காரணம் என்ன? இது குறித்த சமீபத்திய அப்டேட் என்ன? அனைத்து தகவல்களையும் இந்த பதிவ்ல் காணலாம்.
பழைய ஓய்வூதிய முறையை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசு ஊழியர் அமைப்புகளிடையே வலுப்பெற்று வருகிறது. பாதுகாப்பு சிவில் ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய தொழிற்சங்கங்களில் ஒன்றான அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் கூட்டமைப்பு (AIDEF), பழைய ஓய்வூதிய திட்டத்தின் மீட்டமைப்பு, 8வது ஊதியக்குழுவின் அமலாக்கம் உள்ளிட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 14 ஆம் தேதி அகில இந்திய "போராட்ட நாளை" அறிவித்துள்ளது.
2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய ஓய்வூதிய முறை (NPS) மற்றும் ஏப்ரல் 2025 இல் தொடங்கப்பட்ட புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆகியவற்றை AIDEF கடுமையாக எதிர்க்கிறது. இரண்டும் பங்களிப்பு மற்றும் சந்தை அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊழியர்களின் நிதிச் சுமை நாளுக்கு நாள் அதிகரிப்பதாலும், ஊழியர்கள் அரசாங்கத்தின் சீரான செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பதாலும், 1972 (தற்போது 2021) CCS ஓய்வூதிய விதிகளின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி, பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க ஊழியர்கள் கோருகின்றனர். பாதுகாப்பு நிறுவனங்களில் கருணை நியமனங்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் AIDEF கோரியுள்ளது. ஓபிஎஸ்-ஐ மீட்டெடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர், ஆனால் அரசாங்கம் யுபிஎஸ்-ஐ அறிமுகப்படுத்தியது. இதை ஊழியர்கள் நிராகரித்துள்ளனர். பணவீக்கம் சாதனை அளவில் உயர்ந்து, சம்பள தேக்க நிலையில், கண்ணியத்துடன் வாழ்வது ஒரு பெரிய சவாலாக மாறிவிட்டது என்று ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டிலும் நீண்ட நாட்களாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டு கொண்டு வர தொடர்ந்து போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. 2003 ஆம் ஆண்டில் மத்திய அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நீக்கி, ஓய்வூதியத் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து, பங்களிப்பு ஓய்வூதிய திட்டமான தேசிய ஓய்வூதிய முறையை அமல்படுத்தியது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதனால் அரசு ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து பல மாநிலங்களில் போராட்டங்கள் ஆரம்பம் ஆயின. இதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல. தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஊழியர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டமே மீண்டும் அமலுக்கு வந்தது. ஆனால், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் இந்த மாற்றம் இன்னும் நிகழவில்லை.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆறுதலான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக, தமிழக அரசு சார்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசின் கூடுதல் தலைமை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமை தாங்குகிறார். இந்தக் குழு வரும் செப்டம்பர் 30ஆம் தேதி தனது இறுதி அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அரசு ஊழியர்களுக்கு அனுகூலமான ஒரு அறிவிப்பை அரசு வெளியிடும் என நம்பப்படுகின்றது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை தீபாவளி பரிசாக அளிக்க அரசு தயாராகி வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது குறித்த அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகே வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ