PAN Aadhaar linking : உங்கள் PAN கார்டை Aadhaar உடன் இணைக்கவில்லையா? உடனடியாக இணைக்கவும். இல்லையெனில், கடுமையான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

PAN Aadhaar linking : PAN மற்றும் Aadhaar இணைப்பு இன்றியமையாதது. இன்றைய நிலையில், PAN மற்றும் Aadhaar இல்லாமல் எந்த நிதி பரிவர்த்தனைகளையும் முடிக்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டு, PAN மற்றும் Aadhaar இணைப்பதற்கான உத்தரவுகளை மத்திய அரசு ஏற்கனவே பலமுறை வழங்கியுள்ளது. இதற்கான காலவகாசமும் பல முறை கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், இன்னும் பலர் தங்கள் PAN கார்டை Aadhaar உடன் இணைக்கவில்லை. இதனால், அவர்களின் PAN கார்டு inactive ஆகிவிட்டது.
Inactive PAN பயன்படுத்தினால் என்ன?
Inactive PAN கார்டு பயன்படுத்தக்கூடாது. அதனால் உங்கள் பான் கார்டு ஆக்டிவாக இருப்பதை செக் செய்து கொள்ளுங்கள். பான் கார்டு வெப்சைட்டில் சென்று நீங்கள் இதை செக் செய்து கொள்ள முடியும். ஒருவேளை அறியாமல், இந்த inactive PAN கார்டைப் பயன்படுத்தி நிதிப் பரிவர்த்தனைகள் செய்பவர்கள் மீது Income Tax Act, Section 272B-படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
எதற்கெல்லாம் செயலில் இல்லாத பான் கார்டை பயன்படுத்தக்கூடாது?
Bank account திறப்பது அல்லது பயன்படுத்துதல், Shares, Mutual Funds முதலீடு செய்தல், Property வாங்குதல், Loan விண்ணப்பித்தல், Income Tax Return (ITR) தாக்கல் செய்தல் உள்ளிட்ட விஷயங்களுக்கு பான் கார்டு பயன்படுத்தக்கூடாது.
உங்கள் PAN inactive ஆகிவிட்டதா?
உங்கள் PAN கார்டை Aadhaar உடன் இணைக்காதிருந்தால், அது inactive ஆகிவிடும். இதனால், அந்த PAN பெரும்பாலான நிதி மற்றும் வரி பரிவர்த்தனைகளுக்கு invalid ஆகிவிடும்.
இரண்டு PAN வைத்திருப்பது தண்டனைக்குரியது
ஒருவருக்கு இரண்டு PAN இருந்தால், அது சட்டவிரோதம். கூடுதல் PAN கார்டை surrender செய்ய வேண்டும். இல்லையெனில், அபராதம் விதிக்கப்படலாம்.
என்ன செய்ய வேண்டும்?
உங்கள் PAN ஐ Aadhaar உடன் இணைக்க இப்போதே Income Tax e-Filing Portal வழியாக Link PAN with Aadhaar செய்யவும்.
இரண்டு PAN இருந்தால், ஒன்றை surrender செய்யவும்.
எச்சரிக்கை: PAN-Aadhaar இணைப்பு இல்லாமல் நிதிப் பரிவர்த்தனைகள் செய்தால், ஒவ்வொரு முறையும் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும். உடனடியாக ஆதார் கார்டு - பான் கார்டு இணைப்பை முடிக்கவும்.
இணைப்பதற்கான வழிமுறைகள்:
Official Income Tax Portal - e-Filing → Link Aadhaar → Enter PAN & Aadhaar → Submit கொடுக்கவும். ஆதார் கார்டு - பான் கார்டு இணைப்பு நடந்துவிடும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ