ரயிலில் இலவசமாக பயணிக்கலாம், இதை மட்டும் செய்யதால் போதும்

Namo Bharat Train Free Travel: பயணிப்பவர்களுக்கு ரயிலில் இலவச பயணம் செய்வதற்கு நமோ பாரத் சிறப்பான வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 27, 2025, 02:36 PM IST
  • இலவச பயணம் செய்வதற்கான பம்பர் வாய்ப்பு
  • நமோ பாரத் ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.
ரயிலில் இலவசமாக பயணிக்கலாம், இதை மட்டும் செய்யதால் போதும்

Namo Bharat Free Yatra: நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா? அப்படியானால் இந்த செய்தியை கட்டாயம் படிக்கவும். அதன்படி ரயில் பயணிப்பவர்களுக்கு இலவச பயணம் செய்ய நமோ பாரத் ஒரு நல்ல வாய்ப்பை தந்துள்ளது. இதற்காக எந்த கட்டணமும் நீங்கள் செலுத்தாமல் இலவசமாகப் பயணிக்கலாம். இந்த இலவச பயணத்திற்கான புதிய திட்டத்தை NCRTC அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் லாயல்டி பாயின்ட்ஸ்களின் உதவியுடன் மக்கள் இலவச பயணத்தின் பலனைப் பெற முடியும். இந்நிலையில் நமோ பாரத் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்காக தற்போது பிரத்தியேக சிறந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. NCRTC (தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகம்) சமீபத்தில் ஒரு புதிய லாயல்டி பாயின்ட்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் கீழ் பயணிகள் தங்கள் பயணத்திற்காக செலவிடும் ஒவ்வொரு ரூபாய்க்கும் லாயல்டி பாயின்ட்ஸ் தரப்படும்.

Add Zee News as a Preferred Source

நமோ பாரத் ரயில்: இலவச பயணம் செய்வதற்கான பம்பர் வாய்ப்பு:
இந்நிலையில் நீங்கள் அடிக்கடி நமோ பாரத் ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் லாயல்டி பாயின்ட்ஸ் எடுக்க வேண்டும். மேலும் அவை குறைந்தபட்சம் 300 புள்ளிகள் குவிந்திருக்க வேண்டும், அதுமட்டுமின்றி பயணிகள் நமோ பாரத் செயலியைப் பயன்படுத்தி டிஜிட்டல் QR டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்துக்கொள்ளலாம் அல்லது தேசிய பொதுப் போக்குவரத்து அட்டையைப் (NCMC) பயன்படுத்தி பணம் செலுத்தலாம். நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும், 10 பைசா மதிப்புள்ள ஒரு லாயல்டி பாயின்ட்ஸ் கிடைக்கும்.

உதாரணத்திற்கு, பயணி ஒருவர் தங்கள் பயணத்திற்கு ரூ.100 கட்டணத்தைச் செலுத்தினால், அந்த பயணிக்கு மொத்தம் ரூ.10 மதிப்புள்ள 100 லாயல்டி பாயின்ட்ஸ் கிடைக்கும். அதுமட்டுமின்றி பயணிகள் தங்கள் லாயல்டி பாயின்ட்ஸை தொடர்ந்து பெறுவதில் எந்த சிரமத்தையும் எதிரக்கொள்ளாமல் இருப்பதை உறுதிசெய்ய, ஒரே நேரத்தில் 5 பயணங்கள் வரை திரும்பப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீட்டெடுக்கப்பட்ட பயணங்கள் 7 நாட்கள் வரை செல்லுபடியாகும்.

மேலும் NCMC பயனர்கள் தங்கள் சேர்த்து வைத்துள்ள புள்ளிகளை டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் (TVMகள்), டிக்கெட் வாசகர்கள் அல்லது கவுண்டர்களில் சரிபார்த்துக் கொள்ளலாம். அதே நேரத்தில், நமோ பாரத் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் தங்கள் புள்ளிகளை அந்த செயலியில் தாங்களே எளிதாகப் பார்த்து ரெடீம் செய்துக் கொள்ளலாம்.

அதேபோல் புதிய பயனர்கள் நமோ பாரத் செயலியைப் பதிவிறக்கம் செய்வதன் மூலம் ரூ.50 (500 லாயல்டி புள்ளிகள்) அன்லிமிடெட் போனஸாகப் பெறுவார்கள். கூடுதலாக, பயனர்கள் தங்கள் நண்பர்களுக்கு பயன்பாட்டைப் பரிந்துரைத்து மேலும் 500 லாயல்டி புள்ளிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். NCRTC இன் இந்த முயற்சியால் தற்போது பயணிகளுக்கு நிதி ரீதியாக பயனளிப்பது மட்டுமல்லாமல், காகிதமில்லா டிக்கெட்டை ஊக்குவிக்கவும் பெரிய அளவில் உதவுகிறது. இதன் மூலம், பயணிகள் வசதியான, மலிவு விலையில் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பயண அனுபவத்தைப் பெற முடியும். 

இந்நிலையில் நீங்கள் இந்த வசதியை பெற விரும்பினால் நமோ பாரத் செயலி கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பதிவேற்றம் செய்து கொள்ளவும். இந்தத் திட்டதட்டின் மூலம், பயணிகள் இனி தாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணத்திலும் சேமித்துக் கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

மேலும் படிக்க | ஏப்ரல் 1 முதல் புதிய வருமான விதிகள் அமல்... தெரிந்துள்ள வேண்டிய 10 விஷயங்கள்

மேலும் படிக்க | UPS முக்கிய அப்டேட்: இந்த அரசு ஊழியர்களுக்கு உத்தரவாத ஓய்வூதியம் கிடைக்காது, காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News