)
சிறு, நடுத்தர நிறுவனங்களின் நிதி மற்றும் வணிகத்தை மேம்படுத்தவும், மேம்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை உருவாக்கவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெகோ (Peko) மற்றும் கல்ப் (Kalp) நிறுவனங்கள் தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அடுத்த தலைமுறை டிஜிட்டல் வணிக உள்கட்டமைப்பை உருவாக்க பெகோ மற்றும் கல்ப் நிறுவனங்கள் கூட்டணி அமைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலகளாவிய சந்தைகளில் உள்ள வங்கிகள், இலவச மண்டலங்கள் (Free Zones), அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு மேம்பட்ட டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், Peko நிறுவனத்தின் வணிக சூப்பர்-பிளாட்ஃபார்முடன் விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் (Distributed-ledger), புரோகிராமிங் செய்யக்கூடிய பணம் மற்றும் டிஜிட்டல் சொத்து உள்கட்டமைப்புகள் இணைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி வணிக மேலாண்மை சூப்பர்-பிளாட்ஃபார்ம் Peko. டிஜிட்டல் உள்கட்டமைப்பு தொழில்நுட்ப நிறுவனம் Kalp. இவை இரண்டும் இன்று (ஜூன் 14) ஒரு முக்கிய மூலோபாய கூட்டணியை அறிவித்துள்ளன. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SME) அடுத்த தலைமுறை நிதி மற்றும் வணிகத்திற்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு அடித்தளத்தை உருவாக்குவதே இக்கூட்டணியின் நோக்கமாகும்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி (MoU), KALP நிறுவனத்தின் டிஜிட்டல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் Peko தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இதன் மூலம், Peko நேரடியாகவும் அதன் நிறுவன கூட்டாளிகள் மூலமாகவும் சேவை வழங்கும் வணிகங்களுக்கு, அனுமதி பெற்ற விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பம் (DLT), புரோகிராமிங் செய்யக்கூடிய digital-cash, digital-asset வாலட், முக்கிய மேலாண்மை சூழல் மற்றும் டோக்கனைசேஷன் உள்கட்டமைப்பு போன்ற அதிநவீன வசதிகள் கிடைக்கப்பெறும். இந்த ஒப்பந்தம், இரு நிறுவனங்களின் தனித்துவமான பலங்களை ஒன்றிணைக்கிறது.
Peko நிறுவனம், இன்வாய்சிங், பணம் செலுத்துதல், ஊதியம் (Payroll), நிறுவன உருவாக்கம், கார்ப்பரேட் பயணம் மற்றும் காப்பீடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பிராந்தியங்களில் நவீன வணிகங்களின் இயக்க அமைப்பாக (Operating System) வேகமாக உருவெடுத்துள்ளது.
Kalp நிறுவனம், இத்தகைய தளங்களுக்குத் தேவையான அடிப்படை டிஜிட்டல் உள்கட்டமைப்பை வழங்குகிறது. இது பார்ட்னர் நிறுவனங்கள் தங்களின் சொந்த பிராண்டின் கீழ் மேம்பட்ட digital-asset மற்றும் புரோகிராமிங் செய்யக்கூடிய நிதிச் சேவைகளை வழங்க வழிவகுக்கிறது.
முன்னர் பெரிய நிதி நிறுவனங்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பை, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) அன்றாடம் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் மாற்றுவதே இந்த இரு நிறுவனங்களின் கூட்டு இலக்காகும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து Peko நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான (CEO) காஷிப் அகமது கான், "நாங்கள் Peko தளத்தை உருவாக்கியபோது, வணிகச் செயல்பாடுகளை எளிதாக்குவது மட்டுமே எங்களின் நோக்கமாக இருக்கவில்லை. அதற்குப் பின்னால் இருக்கும் உள்கட்டமைப்பை மறுவடிவமைப்பு செய்ய விரும்பினோம்.
Kalp உடனான இந்த ஒத்துழைப்பு, அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை சாதாரண வணிகங்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர உதவுகிறது. இது சிறு, நடுத்தர நிறுவனங்களின் பொருளாதாரத்தை அதிவேகமாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றுவதற்கான தீர்க்கமான படியாகும்" என்றார்.
Kalp டிஜிட்டல் இன்ஃப்ரஸ்ட்ரக்சர் கார்ப்பரேஷனின் இணை நிறுவனர் தபன் சங்கல், "அடுத்த 10 ஆண்டுகளில் வணிகங்கள் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையே மாறப்போகிறது. இந்த மாற்றத்தை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முன்னின்று நடத்த வேண்டும். Peko உடன் இணைவதன் மூலம், கோடிக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வரம்பிற்குள் அந்த எதிர்காலத்தைக் கொண்டு வருகிறோம்" என குறிப்பிட்டார்.
Kalp நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மிருத்யுஞ்ஜய (ஜே) பிரஜாபதி, "பெகோ போன்ற பரந்த வரம்பைக் கொண்ட ஒரு தளத்துடன் கைகோர்ப்பதன் மூலம், எங்கள் உள்கட்டமைப்பு உண்மையான அளவில் வணிகங்களைச் சென்றடைகிறது. மேம்பட்ட digital-asset உள்கட்டமைப்பை வெறும் வாக்குறுதியாக வைக்காமல், நிஜப் பொருளாதாரத்திற்கான அன்றாட பயன்பாடாக நாங்கள் மாற்றுகிறோம்” என பேசினார்.
முதற்கட்டமாக, இரு நிறுவனங்களும் இணைந்து இதன் பாதுகாப்பு மற்றும் வணிக மாதிரிகளை மதிப்பீடு செய்து, படிப்படியாக Peko அமைப்பில் இந்தச் சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளன.
இந்த ஒத்துழைப்பு ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, இந்தியா மற்றும் பிற சந்தைகளில் உள்ள Peko நிறுவனத்தின் நெட்வொர்க்குகளுக்கு விரிவுபடுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.